Mohamed Farook Mohamed Farook Author
Title: ஓரிறைக் கொள்கையை தகர்க்கும் ஒடுக்கத்து "புதன்"
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
இஸ்லாமிய ஹிஜ்ரா நாள்காட்டியில் ஸஃபர் மாதத்தில் அன்றைய அரபு மக்கள் வணிக நோக்கத்திற்காக சிரியா போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வது வழக்...
இஸ்லாமிய ஹிஜ்ரா நாள்காட்டியில் ஸஃபர் மாதத்தில் அன்றைய அரபு மக்கள் வணிக நோக்கத்திற்காக சிரியா போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வது வழக்கம். எனவே தான் இம்மாதத்திற்கு ஸஃபர்-பயணம் என்ற பெயர் வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. 

இம்மாதத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்ததால் அந்த மாதம் (ஸஃபர்) பீடை மாதம் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் இருந்து வருகின்றது. இந்த மாதத்தில் திருமணம் போன்ற நல்ல காரியங்கள் எதுவும் செய்யக் கூடாது என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். 

இப்படி நம்புவதற்கும், அதன் அடிப்படையில் செயல்படுவதற்கும் அனுமதி உண்டா? என்று அல்குர்ஆன் நபிவழி அடிப்படையில் நாம் ஆய்வு செய்வதற்கு முன், இது ஒரு மூட நம்பிக்கை தான் என்பதற்குரிய வேறு சில காரணங்களைப் பார்ப்போம்.

ஒரு நேரம், ஒரு நாள், ஒரு மாதம் எல்லோருக்கும் நன்மை செய்யக்கூடியது என்று நம்புவதும், அல்லது எல்லோருக்கும் கெடுதி செய்யக்கூடியது என்று நம்புவதும், இறைவன் ஏற்படுத்தியுள்ள நியதிக்கு மாற்றமானதாகும். ஒருவருக்கு மிகவும் நன்மைகள் வந்தடைந்த நாள், இன்னொருவனுக்கு கேடுகள் வந்தடைந்த நாளாக இருப்பதைத் தான் நடைமுறையில் நாம் காண முடிகிறது. 

ஒரு நாளில் ஒருவருக்கு அழகான குழந்தை பிறந்திருக்கும்; அவருக்குப் பக்கத்து வீட்டில் உள்ள ஒருவர் அதே நாளில் மரணமடைந்திருப்பார். நல்லநாள் என்று ஒன்று இருக்குமானால் உலக மக்கள் அனைவருக்கும் அந்த நாளில் நல்லவையே நடக்க வேண்டும்; கெட்ட நாள் என்று ஒன்று இருக்குமானால் உலக மக்கள் அனைவருக்கும் அந்த நாளில் கெட்டவை மட்டுமே சம்பவிக்க வேண்டும். 

எந்த நாளாக இருந்தாலும் அதில் சிலருக்கு நல்லவை ஏற்படுவதும், சிலருக்கு கெட்டவை ஏற்படுவதும் தான் நடைமுறை உண்மை. இதைப் புரிந்து கொள்ள பெரிய ஆதாரம் தேவையில்லை. தங்கள் வாழ்க்கையிலேயே அனைவரும் அனுபவரீதியாக உணர முடியும்.

ஸஃபர் மாதத்தில் நபியவர்கள் நோய் வாய்ப் பட்டதினால் அந்த மாதமே பீடை மாதம் என்றால், ஸஃபர் மாதத்தில் நபியவர்கள் மேற்கொண்ட ஹிஜ்ரத் பயணம் மகத்தான வெற்றியை ஏற்படுத்தியுள்ளதே. அந்த பயணத்திற்குப் பின்பு தான், இஸ்லாம் தனக்கென ஒரு நாட்டையே நிறுவ முடிந்தது; சிந்திக்க தெரிந்தவர்களுக்கு இவை போதுமானதாகும். இதே ஸஃபர் மாதத்தின் இறுதி புதன்கிழமையில் தான் நபியவர்கள் குணமடைந்து குளித்தார்களாம். 

அதனால் நாமும் ஒடுக்கத்துப் புதன் அன்று குளித்து நமது முஸீபத்துக்களை நீக்க வேண்டுமாம். இந்த மூட நம்பிக்கையின் பெயரால் பல மடமைகள் நடக்கின்றன. அதாவது அன்றைய தினம் கடல், குளம், ஏரி, அருவி போன்ற நீர்நிலைகளில் குளிப்பது, பனை ஓலை, பீங்கான் தட்டுகளில் ஏதேதோ எழுதி கரைத்துக் குடிப்பது போன்ற நடவடிக்கைகள் இஸ்லாத்திற்கு நேர் எதிரானதாகும். அந்த நளை பீடை நாள் என்று ஒதுக்குவது அல்லாஹ்வுக்கு இணை வைப்பதான செயலாகும்.

அல்லாஹ் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ''ஆதமின் மகன் என்னை வருத்தப்படுத்துகிறான். (அதாவது) காலத்தை அவன் திட்டுகிறான். ஆனால் நானோ காலமாக இருக்கிறேன். காலத்தின் அனைத்து அதிகார மும் என் கைவசமே உள்ளது. இரவையும் பகலையும் நானே மாறி மாறி வரச் செய்கிறேன்''. (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5/4826, 6/6181)
 
அறியாமைக் கால அரபு மக்கள் எது நடந்தாலும் அதைக் காலத்துடன் இணைத்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். காலம்-தான் அவரை அழித்து விட்டது; மோசமான காலம்; நாசமான காலம் என்றெல்லாம் அறியாமைக்கால மக்கள் பேசி வந்தனர். காலம் என்பது சம்பவங்கள் நிகழும் ஒரு நேரமே தவிர, அதற்கு ஆக்குகின்ற, அழிக்கின்ற ஆற்றல் எதுவும் கிடையாது. இரவு பகல் மாற்றமே காலமாகும். அப்படியிருக்க, ஒருவர் காலத்தை சபிக்கின்றார் என்றால், காலமாற்றத்தை உருவாக்கும், ஆக்கத்தையும், அழிவையும் ஏற்படுத்தும் அல்லாஹ்வையே அவர் சபிக்கின்றார் என்று அர்த்தம். அல்லாஹ்வை அவர் சபிப்பதன் மூலம் அல்லாஹ்வுக்கு எந்த தீங்கையும் அவர் ஏற்படுத்திட முடியாது என்றாலும், அல்லாஹ்வின் கோபத்திற்கு அவர் ஆளாகித் தமக்கு தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார். எனவே தான் அல்லாஹ் நானே காலமாக இருக்கிறேன், அதாவது கால மாற்றத்தை ஏற்படுத்துகின்றவன் என்கிறான். (1: ஃபத்ஹுல் பாரி)

''ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது. அவன் தான் எங்கள் பாதுகாவலன் என்று (நபியே) கூறுவீராக!'' (அல்குர்ஆன் 9:51)

அல்லாஹ்வின் விதியை மாற்றக் கூடிய ஆற்றல் கடல், குளம், ஏரி, அருவிகளில் குளிப்பது, மற்றும் ஓலை, தட்டுகளில் எழுதி கரைத்துக் குடிப்பது இவற்றில் இருப்பதாக நம்புவது ஷிர்க் (இணை வைத்தல்) ஆகும். குறிப்பிட்ட தினத்தில் முஸீபத்து இறங்கினாலோ, அவற்றின் பரிகாரமாக ஏதாவது செய்ய வேண்டும் என்றிருந்தாலோ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட வேறு யார் அதை அறிவித்துத் தர முடியும்? ஏனெனில் (இறை நம்பிக்கையாளர்கள்) உங்களிலிருந்து ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பப்படுவது அவருக்கு மிக்க வருத்தத்தை ஏற்படுத்தும். மேலும் அவர் உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர். இறைநம்பிக்கையளர்கள் மீது கருணையும் இரக்கமும் உடையவர் என்று அல்லாஹ் தனது நெறி நூலாகிய அல்குர்ஆனில் தவ்பா என்ற 9வது அத்தியாயத்தில் 128வது வசனத்தில் கூறுவதை சிந்திப்பீர்களாக!

அகில உலகத்திற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்டவர், நம்பிக்கையாளர்கள் மீது இரக்கமுடையவர், நம்பிக்கையாளர்கள் துன்பப்படுவதை சகிக்காதவர் இந்த நாளின் முஸீபத்தை பற்றி அறிவிக்காமல் சென்றுவிட்டார்களா?

சின்ன நகஸு(சு), பெரிய நகஸு(சு) என்றெல்லாம் கணித்து மக்களுக்குத் தொண்டு(?) செய்கிறோம் என்று கூறுகின்றவர்களும், பால்கிதாபு, மோர்கிதாபு என்று சொல்லி மக்களை மடமையிலேயே நீடித்திருக்க வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளவர்களும் கொஞ்சம் சிந்திப்பீர்களாக!
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள்: என்மீது சொல்லப்படும் பொய் (உங்களில்) ஒருவரின் மீது சொல்லப்படும் பொய்யைப் போன்ற தன்று, யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்!

சொல்லப்படும் பொய்யைப் போன்றதன்று, யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்! (அறிவிப்பாளர்: முகீரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரி: 1291)

ஒடுக்கத்துப் புதனுக்கு சொல்லபப்படுகின்ற காரணமே முதலில் சரியில்லை :

ஸஃபர் மாதத்தின் இறுதியில் குளித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குணமடைந்தது பூரண குணமல்லவே, அதற்கு இருவாரங்கள் கழித்து அவர்கள் மரணத்தைத் தழுவிக் கொண்டனரே! (இன்னாலில்லாஹிஸ) சரியான அறிவிப்பின் படி வியாழக்கிழமை அன்று குளித்து விட்டு, மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று மக்களுக்கு நீண்ட பிரசங்கம் (ஜும்ஆ) செய்தார்கள் என்று தானே உள்ளது (ஆதாரம்: அல்பிதாயா, வன்னி ஹாயா) இந்த அடிப்படையில் ஓடுக்கத்து வியாழன் என்றெல்லவா சொல்ல வேண்டும்?

அன்றைய அரபு மக்கள் ஷவ்வால் மாதத்தை பீடை மாதமாகக் கருதி இருந்தனர். அந்த நாளில் எந்த நல்ல காரியங்களையும் நடத்தாது இருந்தனர். மடமை எண்ணத்தை தகர்த்தெறியும் வகையில் அறிவுப் பேரொளி அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், நான் ஷவ்வாலில் தான் திருமண முடிக்கப்பட்டேன். ஷவ்வாலில் தான் என் இல்லறத்தைத் துவங்கினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு என்னை விட உகந்த மனைவியாக யார் இருந்தார்கள்? என்று கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம், அஹ்மத்)

.....நீங்கள் பீடை மாதம் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்ற ஷவ்வாலில் திருமணம் முடித்த நான் எவ்வளவு மகிழ்வோடு வாழ்ந்து இருக்கிறேன் என்று அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கேட்டது இன்று ஸஃபர் மாதத்தை பீடையாகக் கருதுவோருக்கு பொருந்தாதா? சிந்தியுங்கள்!

இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் இந்த ஒடுக்கத்து புதனில் புதைந்து இருக்கின்றன. இக்கேள்விகள் அனைத்தும் சாதாரணமானவை அல்ல; இறை நம்பிக்கையா? இறை நிராகரிப்பா (குஃப்ரா)? என்பதை எடை போடும் ஜீவாதார மான கேள்விகள்.

எனவே ஒடுக்கத்து புதனை ஓரங்கட்டுவோம்; அதன் நிழலில் கூட நிற்க மாட்டோம் என சபதம் ஏற்போம். அல்லாஹ் போதுமானவன்.
ஓரிறைக் கொள்கையை தகர்க்கும் ஒடுக்கத்து "புதன்"
ஓரிறைக் கொள்கையை தகர்க்கும் ஒடுக்கத்து "புதன்"

இஸ்லாமிய ஹிஜ்ரா நாள்காட்டியில் ஸஃபர் மாதத்தில் அன்றைய அரபு மக்கள் வணிக நோக்கத்திற்காக சிரியா போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வது வழக்...

மேலும் படிக்க »

Mohamed Farook Mohamed Farook Author
Title: ஃபேஸ்புக் பயன்படுத்தும் திருமணம் ஆன / ஆக விருக்கும் பெண்களுக்கான எச்ச‍ரிக்கை!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் பயன்பாடுகள் மனிதர்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, காற்று மற்றும் தண்ணீரின் தேவைகள...
ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் பயன்பாடுகள் மனிதர்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, காற்று மற்றும் தண்ணீரின் தேவைகளையே கேள்விக்குறியாக்கும் வகையில் மெய்மறக்கச் செய்கின்றன.

உங்களுடைய இதயம் மறக்க இயலாத விஷயங்களை இந்தவலைத் தளங்களில் பதிவு செய்யவும், பகிர்ந்து கொள்ளவும் முடியும். தனியாக இருக்கும்போது இந்த விஷயங்களை செய்வதில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லையென்றாலும், நீங்கள் ஒரு உறவுக்குள் வந்த பின்னர் சில மாற்றங்களை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.

இந்த அறிகுறியெல்லாம் இருக்கா..... சான்ஸே இல்லைங்க, கண்டிப்பா அவன் உங்களை ‘லவ்’ பண்றான்! உங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டாலோ, திருமணம் நடந்து விட்டிருந்தாலோ அல்லது யாருடனாவது தொடர்பில் இருந்தாலோ, உங்களுடைய இணைய வழி செயல்பாடுகளை சற்றே கவனத்துடன் அணுக வேண்டிய தருணம் இதுவாகும்.

ஃபேஸ்புக்குகளில் எந்த வித அறிமுகமும் இல்லாமல் தொடங்கிய பல்வேறு உறவுகளும், விவாகரத்து அல்லது பிரிந்து வாழ்தல் போன்ற நிலைகளுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நீங்கள் ஒரு மகிழ்ச்சியான இணையாக இருந்தாலோ மற்றும் காலம் முழுவதும் இவ்வாறே இணைந்திருக்க விரும்பினாலோ, இங்கே தரப்பட்டுள்ள குறிப்புகளை படித்து, பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.
போலி அடையாளங்களை பயன்படுத்த வேண்டாம் தங்களுடைய நண்பர்களுடைய பட்டியலை வைத்திருக்கும் உண்மையான கணக்கை ப்ரெஷ்சாகவும் மற்றும் சுத்தமாகவும் வைத்திருக்கும் பொருட்டாகவும், சில பேர் போலியான அடையாளங்களை கொண்டு கணக்குகளை தொடங்குவார்கள். 

இன்னும் சிலபேர் தவறான காரணங்களுக்காக போலியான அடையாளம் கொண்ட கணக்குகளை பயன்படுத்துவார்கள். நீங்கள் இவ்வாறு போலி கணக்குகளை பயன்படுத்துபவர்களில் ஒருவராக இருந்தால், உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள். இந்த வகை கணக்கை அழித்து விட்டு, உங்களுடைய துணைவருக்கு உண்மையானவராக நடந்து கொள்ளுங்கள். இந்த வகையான போலி அடையாளங்களை உங்களுடைய துணைவர் கண்டறிய மாட்டார் என்று நினைப்பது, நெடுநாட்களுக்கு நீடித்து இருப்பதில்லை.

சில நண்பர்கள் தேவையில்லை உங்களுடைய இனிமையான மண வாழ்க்கை அல்லது உறவை தொந்தரவுக்குள்ளாக்கும் சில நண்பர்களை முகநூல் நட்பிலிருந்து வெளி யேற்றுவது நல்லது. இந்தவகை நண்பர்களிடம் தொடர்பில் இருப்பதைவிட, பேஸ் புக் மற்றும் டுவிட்டரில் கூட தொடர்பு கொள்ளாமல் இருப்பது நல்லது.

உங்களுடைய ஆண் நணர்பகளாக இருந்தவர்கள், இப்போதைய மண வாழ்க்கையை சூறையாடும் பகை வர்களாக மாறிவிட வாய்ப்புகள் உண்டு. இது ஒரு புத்திசாலித்தனமான அட்வைஸாக இருப்பதற்கு காரணம், பல கணவர்களும், மனைவிகளும் பிரிந்திருக்க காரணமாக இருப்பது வருத்தத்திற்குரிய இந்த வகையான நட்புகளே. ஆரம்பத்தில், நண்பருடனான பிரிவு உங்களை வருத்தினாலும், பின் நாட்களில் திருமண உறவை பாதுகாத்ததற்காக நீங்கள் பெருமைப்படுவீர்கள்.
 
இரகசியம் தேவையில்லை ஆரோக்கியமான உறவு என்பது துணைவருடன் நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை பகிர்ந்து கொள்வது தான். நீங்கள் வெகு விரையில் திருமணம் புரிந்து கொள்வீர்கள் என்றால், உங்களுக் கான அறிவுரை அதீதமாக இரகசியம் காக்க தேவையில்லை என்பது தான். நீங்கள் அள வுக்கு அதிகமாக இரகசியம் காத்து நின்றால், உங்களுடையதுணைவரிடம் இருந்து எதையோ மறைக்க முய லுகிறீர்கள் என்பதை அவரும் உணர்ந்து கொ ள்வார்.

எனவே, உங்களுக்கு ‘ஓ.கே’ என்றால் ஃபேஸ்புக் பாஸ்வேர்டை கூட துணைவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அதே போல, சில படங்கள் மற்றும் போஸ்ட்-களையும் உங்களுடைய துணைவரிடம் இருந்து மறைப்பதால், தேவையில்லாத சந்தேகங்களை வரவழைத்து, உறவை கெடுத்துக்கொள்வீர்கள். எனவே கவனம் தேவை இக்கனம்!

உறவில் நிலையை மறைக்க வேண்டாம் உங்களுடைய உறவில் நிலையை அனைவருக்கும் தெரியும் வகையில் நீங்கள் காட்டினால், அதாவது உங்களுடைய துணைவருடன் நிச்சயிக்கப்பட்டு விட்டீர்கள் அல்லது திருமணம் செய்யப் போகிறீர்கள் என்பதை வெளிப்படையாக காட்டுவதால் நம்பிக்கை கூடுமே தவிர, வேறெந்த ஆபத்துகளும் வருவதில்லை.

எனவே, நாம் ஏன் இதனை மறைக்க வேண்டும்? நம் முடைய உறவை வெளிப்படுத்தி, பெருமை கொள் வோம்!உங்களுடைய பட ங்களை பதிவேற்றம் செய் தல் உங்களுக்கு நிச்சயிக்கப் பட்டிருப்பவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட படங்களை ஃபேஸ்புக் முழுமையும் பதிவேற்றம் செய்யலாம் என்று நான் அட்வைஸ் கொடுக்க விரும்புகிறேன். எனினும், சில படங்களை இவ்வாறு போடுவதால் எந்தவித பிரச்னைகளும் வரப்போவதில்லை. இவ்வாறு பொதுவான தளங்களில் படங்களை போடுவதன் மூலம், அவருடன் நீங்கள் இருப்பதை விரும்புகிறீர்கள் என்றும், அதற்காக வெட்கப்படவில்லை என்றும் உலகுக்கும், துணைவருக்கும் உணர்த்திடவும் முடியும்.

எனினும், நெருக்கமான அல்லது தனிப்பட்ட படங்களை நீங்கள் பதிவிடும்போது கவனமாக இருக்கவும், பின் நாட்களில் உங்களுடைய துணைவரை தர்மசங்கடமான நிலைக்கு இந்த படங்கள் தள்ளி விடும். இவ்வாறு வித்தியாசமான படங்களை நீங்கள் பதிவிடும் முன்னர், துணைவருடன் ஒரு முறை கலந்து பேசி விடுவது நலம்.

உங்களுடைய க்ளோசெட்டை சுத்தம் செய்யுங்கள். ஃபேஸ்புக்கில் உள்ள ‘டைம்லைன்’ பகுதியை வழங்கிய காரணத்திற்காக மார்க் ஸுக்கர் பெர்க்ற்கு நீங்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். ஏனெனில், இந்த டைம் லைன் மூலம் உங்களுடைய துணைவர் உங்களுடைய கடந்த கால வாழ்க்கையை அவராகவே அறிந்து கொள்வார்.

இந்த டைம்லைனில், உங்களுடைய முன்னாள் காதலர்கள், குறும்புத்தனமான கமெண்ட்கள் அல்லது முன்னாள் காதலருடன் எடுத்துக்கொண்ட சில வெளிப்படையான படங்கள் என பல விஷயங்களையும் காண முடியும். நீங்கள் மணம் செய்து கொள்ளப்போகும் நபர், இந்த படங்களையும், கமெண்ட்களையும் பார்க்க முடியும், இவ்வாறு பார்க்கும் பொது உறவுக்கு அழிவு தரும் என்று நினைக்கும் போஸ்ட்கள், கமெண்ட்கள் மற்றும் படங்களை உடனடியாக அழித்து உங்களுடைய க்ளோசெட்டை சுத்தம் செய்வது நல்லது. இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட ஃபுரோபைல் நீங்கள் யாராக இருக்கப்போகிறீர்கள் என்று காட்ட வேண்டுமே தவிர, நீங்கள் யாராக இருந்தீர்கள் என்று காட்டத் தேவையில்லை.
- பூபதி லஷ்மணன்

ஃபேஸ்புக் பயன்படுத்தும் திருமணம் ஆன / ஆக விருக்கும் பெண்களுக்கான எச்ச‍ரிக்கை!
ஃபேஸ்புக் பயன்படுத்தும் திருமணம் ஆன / ஆக விருக்கும் பெண்களுக்கான எச்ச‍ரிக்கை!

ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் பயன்பாடுகள் மனிதர்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, காற்று மற்றும் தண்ணீரின் தேவைகள...

மேலும் படிக்க »

Mohamed Farook Mohamed Farook Author
Title: மாஷா அல்லாஹ்! ஸ்பெயின் பள்ளிக்கூடங்களில் இஸ்லாமியப் பாடங்கள் அறிமுகம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
ஸ்பெயின் நாடு சுமார் 800 ஆண்டுகள் முஸ்லீம்களின் ஆட்சியில் இஸ்லாமிய நாடாக இருந்தது. அந்நாட்டை கைப்பற்றிய கிருஸ்துவ ஆட்சியாளர்களான ராணி இ...
ஸ்பெயின் நாடு சுமார் 800 ஆண்டுகள் முஸ்லீம்களின் ஆட்சியில் இஸ்லாமிய நாடாக இருந்தது. அந்நாட்டை கைப்பற்றிய கிருஸ்துவ ஆட்சியாளர்களான ராணி இஸபெல்லாவும் அவரது கணவர் பெர்ட்டினாண்டும் முஸ்லீம்களை வன்முறை மூலமும், வஞ்சகத்தின் மூலமும் ஒழித்தும் வெளியேற்றியும் மீண்டும் கிருஸ்தவ ஆட்சியை நிறுவினர் என்பது கசப்பான வரலாறு.

ஸ்பெயின் கிருஸ்துவ பள்ளிக்கூடங்களில் தற்போது சுமார் 2 மில்லியன் இஸ்லாமிய மாணவர்கள் படித்து வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான இஸ்லாமிய பாடங்களை பள்ளிக்கூடங்களில் கற்றுத்தர ஸ்பெயின் கல்வி அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளதுடன் பாடங்கள் சம்பந்தமாக இறுதி வடிவம் தருவதற்காக இஸ்லாமிய அறிஞர்களுடன் கலந்தாலோசணை செய்து வருகிறது.

இந்த இஸ்லாமிய கல்வித் திட்டம் அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
 
மாஷா அல்லாஹ்! ஸ்பெயின் பள்ளிக்கூடங்களில் இஸ்லாமியப் பாடங்கள் அறிமுகம்!
மாஷா அல்லாஹ்! ஸ்பெயின் பள்ளிக்கூடங்களில் இஸ்லாமியப் பாடங்கள் அறிமுகம்!

ஸ்பெயின் நாடு சுமார் 800 ஆண்டுகள் முஸ்லீம்களின் ஆட்சியில் இஸ்லாமிய நாடாக இருந்தது. அந்நாட்டை கைப்பற்றிய கிருஸ்துவ ஆட்சியாளர்களான ராணி இ...

மேலும் படிக்க »

Mohamed Farook Mohamed Farook Author
Title: நீர் எந்த ஜமாத்து? - சிறப்பு பதிவு!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
இஸ்லாம் தான் அல்லாஹ்வினால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் . இஸ்லாத்தின் எந்த பிரிவும், பிளவும் இல்லை. இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி பல பிரிவ...
இஸ்லாம் தான் அல்லாஹ்வினால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் . இஸ்லாத்தின் எந்த பிரிவும், பிளவும் இல்லை. இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி பல பிரிவுகளாக பிளவுப்பட்டு இருக்கிறார்கள் முஸ்லிம்கள்!
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய ஒரு ஹதீஸின் கருத்து.. என்னுடைய சமுதாயம் 73 கூட்டமாக பிரியும். அதில் ஒன்றும் மட்டும்தான் சுவர்க்கம் செல்லும் கூட்டம்!

அது எந்த கூட்டம் என்பதை யார் அறிவார்..?
இன்று ஒரு குடும்பத்தில் பெற்றோர்கள் ஒரு ஜமாஅத், பிள்ளைகள் ஒரு ஜமாஅத். அரசியல் கட்சியைப் போன்று பாவித்துக் கொண்டு இருக்கிறார்கள். சண்டையும், சச்சரவுகளும் தான் நிலவுகிறது. 
அவர் இவரை பார்த்து ''நீங்கள் அல்லாஹ்வுக்கே ஷிர்க் செய்கிறீர்கள்'' என்றும், இவர் அவரை பார்த்து ''நீங்கள் அல்லாஹ்வுக்கே ஷிர்க் செய்கிறீர்கள்'' என்றும் கூறிக் கொண்டியிருக்கிறோம். இந்த அவலநிலை நம்மிடத்தில் உருவாகிவிட்டது!

தொப்பி என்பது இஸ்லாத்தின் அடையாள சின்னமாக ஆக்கிவிட்டார்கள்.
ஒருவர் தொப்பி இல்லாமல் பள்ளிக்குள் போகக் கூடாது. ஒருவர் தாடி இல்லாமல் பள்ளிக்குள் போகலாம். தொப்பிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அவர்கள், ஏன் தாடிக்கு கொடுப்பதில்லை? தொப்பியை வைத்து ஒரு பிரச்சனை!

மக்கா, மதீனா பள்ளிகளில் பார்த்தீர்கள் என்றால் அங்கே பெரும்பாலும் மக்கள்கள் தொப்பி இல்லாமல் தான் தொழுவார்கள். அங்கே எந்த பிரச்சனையும் இல்லை. அப்படி தொப்பி போட்டு தான் போனால் என்ன இவர்கள். பிடிவாதம்! வீம்பு! 

ஒருவர் வெளியூர் சென்றால். அவர் அந்த ஊரில் பள்ளிகள் எங்கே இருக்கு என்பதை அறியமாட்டார் (போகாது ஊர் என்று வைத்துக் கொள்வோம்) தொழுகை நேரம் வந்துவிட்டது, அவர் இன்ன நேர தொழுகையை அவர் தொழ வேண்டும். அவர் ஒரு ஆட்டோ நபரிடம் விசாரிக்கிறார். ''பள்ளிவாசல் எங்கே இருக்கிறது..?'' என்று.
 
அந்த ஆட்டோ டிரைவர் கேட்கிறார். ''நீங்கள் எந்த பள்ளிவாசலை கேட்கிறீர்கள்? சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலா? அல்லது தௌஹீத் பள்ளிவாசலா? (இது கதை அல்ல இப்படியெல்லாம் நடக்கிறது) இதை எதற்காக குறிப்பிடுகிறேன் என்றால், மாற்று மத சகோதரர்கள் இஸ்லாத்தை எப்படி விளங்கி வைத்திருப்பார்கள். அவர்களுக்கு நாம் எப்படி இஸ்லாத்தை பற்றி எடுத்து சொல்வது!

இதுப்போன்ற கேள்விகள் வரும்போது நாம் என்ன சொல்வது என்று நாமே குழம்பிவிடுவோம். ஆதங்கத்துடன் எழுதுகிறேன். ஒவ்வொரு ஜமாத்தாரும் நாங்கள்தான் நேரான வழியில் இருப்பதாக எண்ணிக் கொள்கிறார்கள். மற்றவர்களை இழிவாக எண்ணுகிறார்கள் என்பதை மன வேதனையுடன் குறிப்பிடுகிறேன்.

முஸ்லிம்குள்ளே நாம் ஒருவொர்கொருவர் அடித்துக் கொண்டு, சண்டையிட்டுக் கொண்டால் மாற்று மத மக்கள்கள் என்ன நினைப்பார்கள் என்பதை பற்றி கவலையில்லை. இஸ்லாத்தின் எதிரிகள் நம்மை அழிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டு கொண்டுயிருக்கிறார்கள், அதையும் பற்றியும் கவலையில்லை.

ஒரு ஜமாஅத் ஷிர்க் நோட்டிசு ஒட்டுகிறது. இன்னொரு ஜமாஅத் அதை கிழித்து விடுகிறது. ஒரு ஜமாஅத் அழைப்பு விடுகிறது ''ஷிர்க் மாநாட்டிற்கு எல்லோரும் வாருங்கள்'' என்று இன்னொரு ஜமாஅத் அழைக்கிறது. ''தர்கா எழுச்சி மாநாடு எல்லோரும் வாருங்கள்'' என்று. ஒரே தேதியில் இரு அழைப்பு!
இந்த இரு ஜமாஅத் இடையில் முஸ்லிம் மக்கள்கள் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக புரிகிறது! இதனால் ஏற்படும் பின்விளைவுகளை யாரும் சிந்திப்பதில்லை. நாம் முஸ்லிம் என்று சொல்ல விரும்புவதை விட, நாம் இந்த ஜமாஅத்! இந்த இயக்கம் என்று சொல்வதை தான் பார்க்கிறோம்.

வீண் விரயம் செய்யக் கூடாது என்று சொல்கிறார்கள், ஆனால், நல்ல வீண் விரயம் செய்கிறார்கள். சகோதரத்துவத்தை போற்றுவதை விட தங்களின் ஜமாத்தை அல்லது இயக்கதைதான் போற்றுகிறார்கள்! ஒற்றுமை விட ஜமாஅத் தான் முக்கியம்.

 
ஹதீஸ்களை சொல்கின்றோம் என்ற பெயரில் வேற்றுமை படுத்துவது இஸ்லாத்தின் வழிமுறையா? அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்று கொடுத்தது இந்த வழிமுறையிலா..? சிந்திக்க வேண்டாமா? அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்ல போகிறோம்?

அது ஷிர்க்! இது ஷிர்க் என்று சொல்லிக் கொண்டு போகும் ஒரு கூட்டம். மௌலத், கந்தூரி விழா, தர்கா, கொடி, ஊர்வலம், பித்-அத் இப்படி மக்களை வழி கெடுத்துக் கொண்டு போகிறது ஒரு கூட்டம். இனி வரும் நிறைய கூட்டம்!
வரும் காலம் பொற்காலம் அல்ல! பெரும் சோதனை காலம். குழப்பம் சூழ்ந்து கொள்ளும் காலம்! இதுவா? அல்லது அதுவா? என்று மக்கள்கள் குழம்பி நிற்கும் காலம்! ஒருவரையொருவர் புறம் பேசிக் கொண்டு திரியும் காலம். அதை பெரிய பாவமாக நினைக்காத காலம்!

ஒரு ஹதீஸின் கருத்து... விபச்சாரத்தை விட பெரிய பாவம் புறம் பேசுவது! அந்த புறம் இப்பொழுது ஹலால் போல பாவிக்கப்படுகிறது. உலகத்தில் சிறந்த மார்க்கம் இஸ்லாம் தான்! அந்த இஸ்லாத்தில் எந்த வழி சிறந்தது என்று இப்பொழுது பேச ஆரம்பித்து விட்டார்கள். அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்!

நாம் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? நாம் நம் ஈமானை பாதுகாத்து கொள்ள வேண்டும். குழப்பத்தை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேட வேண்டும்! அல்லாஹ் விரும்பும் முஸ்லிமாக நம்மை வாழும் படி ஆக்க வேண்டும். அல்லாஹ் அருள் செய்ய வேண்டும்! 
 
எந்த ஜமாஅத் இருந்தால் எல்லோரும் நம் சகோதரர்கள் தான் . யாரையும் பிரித்து பார்க்க கூடாது. எல்லோருக்கும் ஸலாம் சொல்ல வேண்டும். யாரையும் புறகணிக்க கூடாது! புறம் பேசக் கூடாது. எப்பொழுதும் அல்லாஹ்விடம் துஆச் செய்ய வேண்டும். நமக்கும். மற்றவர்களுக்கும் துஆ கேட்க வேண்டும். அல்லாஹ் விரும்பும் முஸ்லிமாக வாழ வேண்டும். முஸ்லிமாக மரணிக்க வேண்டும்.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
நீர் எந்த ஜமாத்து? - சிறப்பு பதிவு!
நீர் எந்த ஜமாத்து? - சிறப்பு பதிவு!

இஸ்லாம் தான் அல்லாஹ்வினால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் . இஸ்லாத்தின் எந்த பிரிவும், பிளவும் இல்லை. இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி பல பிரிவ...

மேலும் படிக்க »

Mohamed Farook Mohamed Farook Author
Title: நடுநிலை பேணுவது காலத்தின் கட்டாயம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
இஸ்லாமிய சமூகம் இலக்கற்று பயனித்துக் கொண்டிருக்கின்றது. நோக்கம் மறந்த நகர்வுகளால் இலக்குகள் தவறிப் போகும் அபாயத்தை அடிக்கடி நமது உள்...
இஸ்லாமிய சமூகம் இலக்கற்று பயனித்துக் கொண்டிருக்கின்றது. நோக்கம் மறந்த நகர்வுகளால் இலக்குகள் தவறிப் போகும் அபாயத்தை அடிக்கடி நமது உள்ளத்திற்கு உணர்த்த வேண்டியது கட்டாயத் தேவை.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உருவாக்கிய அந்த தன்னிகரற்ற சமூகமானது பரந்த மனப்பான்மையோடும், நடுநிலை பேனும் முக்கியமான பன்போடும், எந்த விஷயத்தையும் நிதானமாக அனுகும் போக்கோடும் சிறந்து விளங்கியதால் தான் அவர்களால் தம் இலக்கை இலகுவாக எய்த முடிந்தது.

நாம் எல்லோரும் சத்தியத்தைத் தேடி ஓயாப் பயணம் மேற்கொண்டிருக்கின்றோம். இல்லை சத்தியத்தில் தான் இருந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் ஒரு துரதிஷ்ட நிலை என்னவென்றால், மார்க்கத்திலுள்ள சில அம்சங்களை அனுகும் விதத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் நம்மை சுக்கு நூறாக உடைத்து சிதறவைத்துள்ளன.

மாறுபட்ட கருத்துக்கள் அகீதாவிலோ அல்லது அடிப்படை அம்சங்களிலோ இருத்தல் தகாதது. ஆனால் கிளை அம்சங்களில் கருத்து முரண்பாடுகள் விளைகின்ற பொழுது, நாம் அந்த இடத்தில்தான் மிகவும் நிதானிக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். ஏனென்றால் நிதானம் தவறுகின்ற போது ஆளுக்கொரு கருத்துக் கொள்ளும் நிலை தோன்றி பின்னர் பல குழுக்கள் தோற்றம் பெற காரணமாகி விடுவதை நம்மால் தவிர்க்க முடியாமல் போய் விடுகின்றன. 

இன்று உலகலவில் ஒரு தாய் மக்களாக இருக்கும் இந்த பரந்து விரிந்து கிடக்கும் இஸ்லாமிய சமூகத்தில் ஒரு தொற்று நோயாகவும் தொடர் நோயாகவும் குழுவாதங்களும், இயக்க வெறிகளும் தாண்டவமாடுகின்றன.

ஒற்றுமையாக, இறுக்கமான உறவோடு உலகத்தின் மாந்தர்களில் தன்னிகரற்று திகழ்த்த இன்னிலை மாறி பளுவிழந்த ஊர்தியாய், துடுப்பிழந்த ஓடமாய் ஆகியதற்கு மேற்கூறிய காரணங்கள் பிரதானமானவையாகும். கருத்து வேறுபாடு ஏற்பட்டு நம்மை நாமே துண்டாடும் போது ஷைத்தானுக்கு நாமே வழி வகுக்கிறோம் என்பதை நன்கு உணரக் கடமைப்பட்டுள்ளோம். துரதிஷ்ட வசமாக இயக்க முரண்பாடுகளும், குழுப் பிரிவினைகளும் ஒட்ட முடியாத துருவங்களாக ஒதுங்கிக் கிடக்கின்றன.

சஹாபாக்களுக்கு மத்தியிலும் ஒரு விஷயத்தில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கத்தான் செய்தன. ஆனால் அவைகள் அவர்களைத் துண்டாடவுமில்லை, பிரிவினைக்கு அப்புனிதர்கள் இடம் கொடுக்கவுமில்லை. அதேவேளை அவர்களால் ஒற்றுமையை எவ்வாறு கட்டிக்காக்க முடிந்தது என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். 

உண்மையில் அவர்களிடத்தில் இருந்த மனத்தூய்மை, பரஸ்பரப் புரிந்துணர்வு, ஒற்றுமைக்காக ஓயாது செயற்பட்டமை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, எந்த ஒன்றையும் நிதானமாகவும், ஆழமாகவும் அனுகிய விதம் போன்ற பன்புகள் தான் கடைசி வரைக்கும் ஒரே கப்பலில் பயணிக்கச் செய்துள்ளது என்பதை இலகுவில் உணர்ந்து கொள்ளலாம்.
நடுநிலை பேணுவது காலத்தின் கட்டாயம்!
நடுநிலை பேணுவது காலத்தின் கட்டாயம்!

இஸ்லாமிய சமூகம் இலக்கற்று பயனித்துக் கொண்டிருக்கின்றது. நோக்கம் மறந்த நகர்வுகளால் இலக்குகள் தவறிப் போகும் அபாயத்தை அடிக்கடி நமது உள்...

மேலும் படிக்க »

எங்களை அல்லாஹ் காப்பாற்றுவான் - ரோஹின்ய சகோதரியின் அசைக்கமுடியாத நம்பிக்கை

Mohamed Farook Mohamed Farook Author
Title: எங்களை அல்லாஹ் காப்பாற்றுவான் - ரோஹின்ய சகோதரியின் அசைக்கமுடியாத நம்பிக்கை
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
மியான்மர் ராணுவத்தினரால் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அனுபவித்த கொடுமைகள் கண்ணீரை வரவழைக்கின்றன.பெண்களை பாலியல் ரீதியாக தாக்குவது சிறுபிள்ளைகளை...
மியான்மர் ராணுவத்தினரால் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அனுபவித்த கொடுமைகள் கண்ணீரை வரவழைக்கின்றன.பெண்களை பாலியல் ரீதியாக தாக்குவது சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காமல் கொன்று குவிப்பது என ராணுவத்தினர் கொடூர செயல்களை புரிந்தனர்.

இந்நிலையில் மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் வசித்த ரொக்சரா தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறுகையில் எங்கள் நாட்டை விட்டு வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்த நாளிலிருந்து குரானை ஓதி வருகிறேன்.என் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன் எங்களை அல்லாஹ் காப்பாற்றுவார்.

எங்கள் நாட்டில் சொந்தமான நிலம் உண்டு தாய்நாட்டை மிகவும் நேசிக்கிறோம்.நள்ளிரவில் என் கணவரை ராணுவத்தினர் கொன்றுவிட்டனர் இதனால் குழந்தைகளுடன் வங்கதேசத்திற்கு வந்தேன். ஐந்து நாட்கள் உணவே இல்லாமல் கஷ்டப்பட்டோம் முகாமில் இருப்பதும் எளிதான காரியமல்ல.இங்கே என் குழந்தைகளுக்கு உணவு கிடைக்கிறது தங்க இடமளித்த வங்கதேச மக்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
எங்களை அல்லாஹ் காப்பாற்றுவான் - ரோஹின்ய சகோதரியின் அசைக்கமுடியாத நம்பிக்கை
எங்களை அல்லாஹ் காப்பாற்றுவான் - ரோஹின்ய சகோதரியின் அசைக்கமுடியாத நம்பிக்கை

மியான்மர் ராணுவத்தினரால் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அனுபவித்த கொடுமைகள் கண்ணீரை வரவழைக்கின்றன.பெண்களை பாலியல் ரீதியாக தாக்குவது சிறுபிள்ளைகளை...

மேலும் படிக்க »

இளம் பெண் அஸ்மா பானுவின் உயிர்காக்க உதவிடுவோம்..!

Mohamed Farook Mohamed Farook Author
Title: இளம் பெண் அஸ்மா பானுவின் உயிர்காக்க உதவிடுவோம்..!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
தஞ்சாவூர் SB மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், இரண்டு கிட்னியும் செயல் இழந்த சகோதரி அஸ்மா பானு (வயது 20) அவர்களுக்கு அவசரமாக கிட்ன...
தஞ்சாவூர் SB மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், இரண்டு கிட்னியும் செயல் இழந்த சகோதரி அஸ்மா பானு (வயது 20) அவர்களுக்கு அவசரமாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சை(Kidney Transplantation) செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சகோதரியின் அறுவை சிகிச்சைக்காக 6 லட்சம் செலவாகும் என மருத்துவமனையில் கூறப்பட்டு அதில் 3 லட்சம் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 3 லட்சம் இருந்தால் தான் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்கிற கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் நல்லுள்ளம் படைத்த சகோதர - சகோதரிகள் உங்களால் முடிந்த உதவியினை சகோதரியின் அறுவை சிகிச்சைக்காக தாமதமின்றி கொடுத்து சகோதரியின் உயிர்காக்க உதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு:
ஷாஜஹான்(தந்தை) 9092817086, 9965105990
அர்ஷத் 9566564101

(குறிப்பு: இந்த தகவல் வடகரை பாய்ஸ் சேவை குழுவினரால் உறுதிப்படுத்தப்பட்டதாகும்.
பதிவிட்ட நாள்: 14/10/2017)

நன்றி - அதிரைபிறை
இளம் பெண் அஸ்மா பானுவின் உயிர்காக்க உதவிடுவோம்..!
இளம் பெண் அஸ்மா பானுவின் உயிர்காக்க உதவிடுவோம்..!

தஞ்சாவூர் SB மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், இரண்டு கிட்னியும் செயல் இழந்த சகோதரி அஸ்மா பானு (வயது 20) அவர்களுக்கு அவசரமாக கிட்ன...

மேலும் படிக்க »

தமிழ் நாட்டில் உள்ள ரோஹிஞ்சா அகதிகள் உணர்வுகள் என்ன?

Mohamed Farook Mohamed Farook Author
Title: தமிழ் நாட்டில் உள்ள ரோஹிஞ்சா அகதிகள் உணர்வுகள் என்ன?
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
மியான்மரில் சிறுபான்மை ரோஹிஞ்சா முஸ்லீம்களுக்கு எதிராக எடுக்கப்படும் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் வன்முறையிலிருந்து தப்பி இந்தியாவுக்கு வந்...
மியான்மரில் சிறுபான்மை ரோஹிஞ்சா முஸ்லீம்களுக்கு எதிராக எடுக்கப்படும் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் வன்முறையிலிருந்து தப்பி இந்தியாவுக்கு வந்த ரோஹிஞ்சா அகதிகளை இந்தியா வெளியேற்றும் என்று இந்திய அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த கருத்து பற்றிய பெரிய அளவு விழிப்புணர்வு இல்லாத நிலையிலேயே சென்னையில் உள்ள ரோஹிஞ்சா அகதிகள் வாழ்கிறார்கள்.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சுசியின் மியான்மாரிலிருந்து, வெளியேறி தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் சிறு எண்ணிக்கையிலான, ரோஹிஞ்சா இன அகதிகள் இங்கு பாதுகாப்பாகவே உணர்வதாகக் கூறுகிறார்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், நெருங்கிய சொந்தங்களுடன் சென்னை வந்துசேர்ந்த 18 ரோஹிஞ்சா அகதி குடும்பங்கள் கேளம்பாக்கம் பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

47 குழந்தைகள் உட்பட 94 நபர்கள் அடிப்படைத் தேவைகளுடன் நலமுடன் இருப்பதாகக் கூறுகிறார்கள். மியான்மாரில் உள்ள ரோஹிஞ்சா இனத்தவர்களுக்கு நேரும் பிரச்சனைகளை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பார்ப்பதாகவும், அது அவர்களுக்கு கவலைதருவதாக கூறுகிறார்கள்.

தமிழகத்தில் தஞ்சமடைந்த ரோஹிஞ்சாக்கள்
இந்தியாவில் சட்டத்திற்கு புறம்பாக வசித்துவரும் ரோஹிஞ்சாக்களை வெளியேற்றுவது குறித்து இந்திய உள்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு பேசியுள்ளார் என்று குறிப்பிட்டபோது அந்த அறிவிப்பைப் பற்றிக் கேள்விப்படவில்லை என்று தெரிவித்தனர்.

''எல்லா இடங்களிலும் எங்களை விரட்டுகிறார்கள். இந்தச் சமயத்தில் தாய் போல எங்களை அரவணைத்துக் கொண்டது தமிழ்நாடுதான்.
இங்கே இருக்கும்வரை எங்களுக்கு பயமில்லை,'' என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் முகமது யூசப் (24).
40 நாளான குழந்தையுடன் எங்கு செல்வது என்று தெரியாமல் நின்றபோது குழந்தையை வைத்துக்கொண்டு என்ன செய்வாய்? இந்தியாவுக்குப் போ என்று முகவர் ஒருவர் சொன்னதால் இந்தியா வந்ததாகக் கூறுகிறார் யூசப்

''கொல்கத்தாவில் ஹௌரா ரயில் நிலையத்தில் வேறு ரயிலுக்கு எங்களை மாற்றிவிட்ட முகவர் எங்கு சென்றார் என்று எங்களுக்குத் தெரியாது. ரயில் நின்ற இடம் சென்னை சென்ட்ரல். எங்களை அகதிகள் என்று அடையாளம் கண்ட உள்ளூர் அதிகாரிகள் எங்களை ஐநா மனிதஉரிமை அலுவலர்களிடம் பேசவைத்தனர்.,'' என்றார் அவர்.

தமிழ் பயிலும் ரோஹிஞ்சா குழந்தைகள்
தமிழக அரசு அளித்த வெள்ள நிவாரண கட்டிடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஐநா உதவியுடன் ரோஹிஞ்சாக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
''முதலில் எங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்துக்கொண்டார்கள்.
அதுவே எங்களுக்கு நிம்மதியைத் தந்தது. மருத்துவ முகாம் நடத்தினார்கள், அட்டை கம்பனிகள், தனியார் நிறுவனங்கள் குப்பை சேகரிக்கும் வேலைகொடுத்தார்கள், சம்பளம் கொடுக்கிறார்கள்,'' என்று நிம்மதி பெருமூச்சுடன் சொல்லிமுடித்தார் யூசப்.

தற்போது பத்தாம் வகுப்பு படிக்கவேண்டிய நூர்கயீதா உள்நாட்டுப் பிரச்சனையால் பள்ளிக்கூடம் போகமுடியவில்லை என்றும் தற்போது தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு அரசுப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் படித்துவருவதாகக் கூறினார்.

''நாங்கள் சென்னையில தினமும் பள்ளிக்கூடம் போறோம். எங்க ஊரில ரக்கையின்ல படிக்க போகமுடியாது. எங்களை அடிப்பாங்க. தீடிர்னு சுடுவாங்க..பயமா இருக்கும், பெரிய அக்காகங்களை நாசம்பண்ணிடுவாங்க,'' என பள்ளிக்கூடம் செல்ல முயன்ற சமயத்தில் நேரந்தவற்றை நினைவு கூர்ந்தார் பள்ளிமாணவி நூர்கயீதா.

''எங்களுக்கும் படிக்கனும், வேலைக்கு போகணும்னு ஆசை இருக்காதா? எங்க அம்மா, அப்பாவோட, சொந்தகாரங்களோட சந்தோசமா இருக்கமுடியாதா? நாங்க நல்ல வாழமுடியாதா?,'' என்று கேட்டார். தங்குவதற்கு இடம், பள்ளிக்கூடம் என அத்தியாவசிய தேவைகள் அகதியாக நிற்கும் வெளிநாட்டில் அளிக்கப்படும்போது ஏன் அவை தாய்நாட்டில் தனக்கு மறுக்கப்பட்டுள்ளது என்பதற்கு நூர்கயீதா விடைகேட்கிறார்.
பள்ளியில் படிக்கும் சிறார்கள் இங்கு பல மதத்தவர்களும் ஒற்றுமையுடன் இருப்பதைப் பார்த்து தங்களது நாட்டில் இந்த ஒற்றுமை ஏற்படாதா என்று ஏங்குகிறார்கள்.

''நாங்க மட்டும் ஏன் அழுதுட்டே இருக்கனுமா?''
இன்னும் மழலை குறையாத இரண்டாம் வகுப்பு மாணவன் முகமது ஷகீப் மியான்மாரில் ரோஹிஞ்சாகளின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் ஒடுக்குமுறையை கண்ணில் பார்த்ததுபோல் சொல்கிறார்.

''இருபது நாட்களுக்கு முன்னால என்னோட அம்மாவோட, அண்ணா தங்கச்சிக்கிட்ட பேசினேன். அவுங்க வீட்ட விட்டு வெளிய வரமுடியாம அங்கேயே இருக்காங்க. சாப்பாடு கூட சாப்பிட முடியல.. கதவு மூலையில நின்னுட்டு இருக்காங்க..நாங்க பேசும்போது ஒரே குண்டுசத்தம். வெளியே போனா புத்திஸ்டுங்க அடிக்கறாங்க..'' என்றார் அவர்.

''தொடர்ந்த ஷகீப், ''வெளிநாட்டுல எங்க மக்கள் நல்ல இருக்காங்க.. எங்க ஊரில ஏன் இப்படி பண்றாங்க? இன்னும் 15 நாள்ல எங்க ஊரில இருந்த எல்லாருமே செத்துடுவாங்கலாம். என்னோட அம்மாகூட அழுவாங்க.. மத்தவங்க சந்தோசமா இருப்பாங்க. நாங்க மட்டும் ஏன் அழுதுட்டே இருக்கனுமா?'' என்றார்.

மியான்மாரில் அமைதி பிறக்க வேண்டும் என்று பெரியவர்கள் தினமும் தொழுகை நடத்துகிறார்கள். தங்களது சொந்த ஊரில் வாழவேண்டும் என்று விருப்பம் இருந்தாலும், அதைவிட தங்கள் இனத்தின் மீது நடத்தப்படும் வன்முறை அவர்களை அச்சத்தின் பிடியில் வைத்துள்ளது.

thanks - http://www.bbc.com/tamil/india-41281666
தமிழ் நாட்டில் உள்ள ரோஹிஞ்சா அகதிகள் உணர்வுகள் என்ன?
தமிழ் நாட்டில் உள்ள ரோஹிஞ்சா அகதிகள் உணர்வுகள் என்ன?

மியான்மரில் சிறுபான்மை ரோஹிஞ்சா முஸ்லீம்களுக்கு எதிராக எடுக்கப்படும் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் வன்முறையிலிருந்து தப்பி இந்தியாவுக்கு வந்...

மேலும் படிக்க »

மியன்மார் ரோகிங்கிய முஸ்லிம்களும் மனித நேயமும்

Mohamed Farook Mohamed Farook Author
Title: மியன்மார் ரோகிங்கிய முஸ்லிம்களும் மனித நேயமும்
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
இந்த பதிவை உதாசீனம் செய்யாதீர்கள் ஈமானிய உணர்வோடு வாசியுங்கள். அன்பின் இஸ்லாமிய உறவுகளே ஈமானிய உணர்வு மட்டும் இல்லையென்றால் எமக்குள் ஏ...
இந்த பதிவை உதாசீனம் செய்யாதீர்கள் ஈமானிய உணர்வோடு வாசியுங்கள்.

அன்பின் இஸ்லாமிய உறவுகளே ஈமானிய உணர்வு மட்டும் இல்லையென்றால் எமக்குள் ஏது சகோதர உணர்வு எம் உறவுகளை எட்டி உதைத்து தீயில் இட்டு எரிக்கும் தீயவர்களின் அட்டகாசத்தினால் சிக்கித்தவிக்கும் எம் உறவுகளுக்கு என்னதான் உதவி செய்ய முடியும் எமக்குள் ஈமானிய உணர்வுதான் உண்டா மியன்மார் கொடும்பாவிகளுக்கெதிராக யுத்தம் செய்து அட்டகாசத்தை அடக்க
பச்சிளம் குழந்தைகள் மாபாவிகளால் கொன்று குவிக்கப்படுகிறது சித்திரை வதைசெய்யப்படுகிறது கழுத்து நெரித்து கொல்லப்படுகிறது கழுத்தறுத்து கொல்லப்படுகிறது இத்தனைக்கும் அந்த பச்சிளம் குழந்தைகள் இந்த ஈவிரக்கமற்ற மனித நாய்களுக்கு செய்த குற்றம்தான் என்ன இவர்கள் தாய் தந்தை மொழிந்த கலிமாவிற்கான தன்டனையா இது அல்லாஹு அக்பர்… அல்லாஹு அக்பர்… அல்லாஹு அக்பர் …

ஒவ்வொரு குழந்தையும் கொல்லப்பட்டு கிடக்கும் நிலையை என்னுடைய குழந்தை கொல்லப்பட்டு கிடக்கிறது என்ற உணர்வோடு ஒவ்வொரு புகைப்படத்தையும் பாருங்கள் அதன் வலி என்னவென்பதை உள்ளம் சொல்லித்தரும் மனம் வருந்தி கண்கலங்கி இந்த பதிவை உங்கள் முன்வைக்கிறோம் உள்ளத்தில் ஈரமுள்ளவர்கள் மட்டும் முன்வாருங்கள் 2 ரக்அத் சுன்னத் தொழுது அல்லாஹ்விடத்தில் அழுது கையேந்தி கேளுங்கள் சத்தியமாக அல்லாஹ் எமது துஆக்களுக்கு விடையளிப்பான்
மேலும் தான்மட்டும் இந்த நல்லகாரியத்தில் ஈடுபடாமல் ஏனயவர்களையும் தூண்டுங்கள் உற்சாகப்படுத்துங்கள் முடியுமானால் உங்களது ஊர்களில் இதற்கான பொதுவான துஆவை பிராத்தனை ஏற்பாடு செய்யுங்கள்




யாஅல்லாஹ் எங்கள் ரப்பே மியென்மார் ரோகிங்கிய முஸ்லிம்களுக்கு உன்னையன்றி உதவிசெய்வோர் யாரும் கிடையாது
எங்கள் கரங்கள் கறைபடிந்த கரங்கள் இருந்தாலும் இருகரமேந்துகிறோம் உண்ணை நோக்கி
பச்சிளம் பாலகர்களை ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கும் மாபாவிகளின் கொட்டத்தை அடக்கிவிடு

அவர்களுக்கு உண்முடிவில் ஹிதாயத் இருக்குமானால் ஹிதாயத்தை நஸீபாக்கிவிடு இல்லையேல் அவர்கள் மீது உண் அழிவு நாசத்தை உண்டாக்கிவிடு

யாஅல்லாஹ் யாரஹ்மானே முளுஉலகமும் ஒன்று சேர்ந்தாலும் உண்ணுடைய அன்பு இல்லாமல் ரோகிங்கிய முஸ்லிம்களுக்கு யாராலும் உதவி செய்ய முடியாது
உண்ணுடைய உதவியை அந்த மக்களுக்கு வழங்கிடுவாயாக…..!!!
மியன்மார் ரோகிங்கிய முஸ்லிம்களும் மனித நேயமும்
மியன்மார் ரோகிங்கிய முஸ்லிம்களும் மனித நேயமும்

இந்த பதிவை உதாசீனம் செய்யாதீர்கள் ஈமானிய உணர்வோடு வாசியுங்கள். அன்பின் இஸ்லாமிய உறவுகளே ஈமானிய உணர்வு மட்டும் இல்லையென்றால் எமக்குள் ஏ...

மேலும் படிக்க »

ரோஹிங்கா முஸ்லிம்களுக்காக 1000 டொன் நிவாரண பொருட்களுடன் துருக்கி கப்பல்!

Mohamed Farook Mohamed Farook Author
Title: ரோஹிங்கா முஸ்லிம்களுக்காக 1000 டொன் நிவாரண பொருட்களுடன் துருக்கி கப்பல்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
ரொஹிங்கியாக்களுக்கான 1000 டொன் நிவாரண பொருட்களை தாங்கிய துருக்கிய கப்பல் மியன்மாரின் ரகைன் மாநிலத்தை வந்தடைந்தது. முதல் கட்டமாக பங்களாதே...
ரொஹிங்கியாக்களுக்கான 1000 டொன் நிவாரண பொருட்களை தாங்கிய துருக்கிய கப்பல் மியன்மாரின் ரகைன் மாநிலத்தை வந்தடைந்தது. முதல் கட்டமாக பங்களாதேஸிலும் மியன்மாரிலும் இடம்பெயர்ந்து வாழும் ஒரு லட்சம் மக்களுக்கான நிவாரணங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என துருக்கியின் சர்வதேச நிவாரண அமைப்பான TIKA அறிவித்துள்ளது.

அதே வேளை துருக்கி அதிபரின் மனைவி அமினா அர்துகான் பங்களாதேஷில் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கிய மக்களுக்கு ஆறுதல் அளிக்க அங்கு வந்துள்ளதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




ரோஹிங்கா முஸ்லிம்களுக்காக 1000 டொன் நிவாரண பொருட்களுடன் துருக்கி கப்பல்!
ரோஹிங்கா முஸ்லிம்களுக்காக 1000 டொன் நிவாரண பொருட்களுடன் துருக்கி கப்பல்!

ரொஹிங்கியாக்களுக்கான 1000 டொன் நிவாரண பொருட்களை தாங்கிய துருக்கிய கப்பல் மியன்மாரின் ரகைன் மாநிலத்தை வந்தடைந்தது. முதல் கட்டமாக பங்களாதே...

மேலும் படிக்க »

பக்ரீத் நாளில் பலி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்: இஸ்லாமியர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். கோரிக்கை!

Mohamed Farook Mohamed Farook Author
Title: பக்ரீத் நாளில் பலி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்: இஸ்லாமியர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். கோரிக்கை!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
பக்ரீத் பண்டிகை நாளில் இஸ்லாமியர்கள் பிராணிகள் பலி கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் சிறுபான்மையினர் பிரிவான முஸ்ல...
பக்ரீத் பண்டிகை நாளில் இஸ்லாமியர்கள் பிராணிகள் பலி கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் சிறுபான்மையினர் பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச் (முஸ்லிம் தேசிய அமைப்பு) கோரிக்கை விடுத்துள்ளது.

பக்ரீத் பண்டிகை இந்த ஆண்டு வரும் சனிக்கிழமை (செப். 2) வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இப்பண்டிகையில் அல்லாவின் பெயரால் முஸ்லிம்கள் ஆடு, எருமை மற்றும் ஒட்டகங்களை பலி கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதை இஸ்லாமியர்கள் தவிர்க்க வேண்டும் என உ.பி.யில் முஸ்லிம் தேசிய அமைப்பினர் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து அந்த அமைப்பின் அமைப்பாளர் சையது ஹசன் கவுசர் கூறும்போது, “முத்தலாக் வழக்கத்தை போல பக்ரீத் நாளில் பலி கொடுப்பதும் தவறான வழக்கம். சவுதி அரேபியாவில் ஹஜ் எனும் புனித யாத்திரை செல்பவர்கள் மட்டும் அங்கு பலி கொடுக்கும் வழக்கம் கொண்டுள்ளனர். இந்த வழக்கம் பொதுவான இஸ்லாமியர்கள் மற்ற இடங்களில் மேற்கொண்டதாக முன்னுதாரணங்கள் இல்லை.

இது பக்ரீத் பண்டிகையில் மேற்கொள்வது இஸ்லாத்திற்கு எதிரானது. இந்த நல்ல நாளில் இஸ்லாமியர்கள் எதையாவது பலி கொடுக்க விரும்பினால் அவர்கள் தங்களின் தீய பழக்கங்கள் மற்றும் குறைகளை பலி கொடுக்க வேண்டும். கர்பாலாவில் இமாம் உசைன் பலி கொடுத்தது போல் இஸ்லாமியர்களும் அதை செய்ய வேண்டும் என தவறாக வழிநடத்தப்படுகிறது. இது இஸ்லாத்திற்கு எதிரானது என்பதை முஸ்லிம்கள் அறியாமல் உள்ளனர்” என்றார்.

இந்தப் பிரச்சினையை அயோத்தி பிரச்சினையுடன் இணைத்து கவுசர் பேசியுள்ளார். பிரச்சினைக்குரிய இடத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தக்கூடாது என குர்-ஆனில் கூறப்பட்டுள்ளதாகவும் இதனால் அயோத்தியில் பாபர் மசூதியை எப்படி கட்ட முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பக்ரீத் பண்டிகைக்கு பலி கொடுப்பதை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை முஸ்லிம் தேசிய அமைப்பினர் ஒரு மாதம் முன்பு தொடங்கினர். குறிப்பாக உ.பி., பிஹார் மற்றும் மேற்கு வங்கத்தில் இப்பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் முஸ்லிம் உலாமாக்களுடன் கூட்டம் நடத்தி பசுக்களை பலி கொடுப்பது இஸ்லாத்திற்கு எதிரானது எனப் பிரச்சாரம் செய்தனர். ‘பசுவில் பால் ஒரு மருந்து’ என நபிகள் நாயகம் தெரிவித்துள்ளதாகக் கூறினர். இந்த பிரச்சாரத்திற்கு உ.பி.யில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சன்னி மறையியல் துறை பேராசிரியர் முப்தி ஜாஹீத் அலி கான் கூறும்போது, “முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறு பிரச்சாரங்களில் ஈடுபடுவது ஆர்எஸ்எஸ் வழக்கமாக உள்ளது. தங்களுடன் முஸ்லிம்கள் சிலரை சேர்த்துக்கொண்டு தவறாகப் பேச வைக்கின்றனர். பக்ரீத் நாளில் குர்பானி (பலி) கொடுக்கக் கூடாது என்பது மிகவும் தவறான கருத்து ஆகும்.

இது அசரத் சையத் இப்ராகீம் காலம் முதல் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் பலி கொடுப்பதற்கு முன் அந்த பிராணியை எப்படி அன்பு செலுத்தி வளர்க்க வேண்டும் எனவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், நம் அன்புக்குரியதை அல்லாவுக்கு அர்ப்பணிக்கிறோம். ஆர்எஸ்எஸ் கூறுவதை இஸ்லாமியர்கள் எவரும் ஒரு பொருட்டாக கருதமாட்டார்கள்” என்றார்.

http://tamil.thehindu.com/india/article19592396.ece
பக்ரீத் நாளில் பலி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்: இஸ்லாமியர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். கோரிக்கை!
பக்ரீத் நாளில் பலி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்: இஸ்லாமியர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். கோரிக்கை!

பக்ரீத் பண்டிகை நாளில் இஸ்லாமியர்கள் பிராணிகள் பலி கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் சிறுபான்மையினர் பிரிவான முஸ்ல...

மேலும் படிக்க »

vkrnajur vkrnajur Author
Title: சவூதி அரேபியாவில் உள்நாட்டு யாத்ரீகர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கத்தார் நாட்டுடனான தங்களுடைய ராஜியரீதியிலான உறவுகளை கடந்த ஜூன் ம...
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கத்தார் நாட்டுடனான தங்களுடைய ராஜியரீதியிலான உறவுகளை கடந்த ஜூன் மாதம் முறித்துக் கொண்டதுடன் தரை மற்றும் வான்வழி போக்குவரத்துக்களையும் துண்டித்துக் கொண்டதும் அறிந்ததே.
இந்நிலையில் அடுத்த மாதம் புனித ஹஜ் கிரிகைகள் துவங்குவதையொட்டி கத்தார் நாட்டிலிருந்து வரும் ஹஜ் பயணிகளுக்கு மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் ஹஜ் கடமைகளை நிறைவேற்ற அனுமதி தந்துள்ளது சவுதி அரேபியா. கத்தார்  ஹஜ் பயணம் மேற்கொள்ளவும் அனுமதியில்லை என்று முன்னதாக வெளியான செய்தியையும் மறுத்துள்ளனர்.
ஹஜ்ஜூக்கு வரும் கத்தார் யாத்ரீகர்கள் ஜெத்தா கிங் அப்துல் அஜீஸ் விமான நிலையம் மற்றும் மதீனா இளவரசர் முஹமது பின் அப்துல் அஜீஸ் விமான நிலையம் ஆகிய 2 விமான நிலையங்கள் வழியாக மட்டுமே வர முடியும். மேலும் அவர்கள் கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தை தவிர்த்து வேறு எந்த விமான சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளனர்.
சவூதி அரேபியாவில் உள்நாட்டு யாத்ரீகர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்!
சவூதி அரேபியாவில் உள்நாட்டு யாத்ரீகர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்!

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கத்தார் நாட்டுடனான தங்களுடைய ராஜியரீதியிலான உறவுகளை கடந்த ஜூன் ம...

மேலும் படிக்க »

vkrnajur vkrnajur Author
Title: மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்கு செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை குறைந்தது!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைந்து வருகிறது. வளைகுடா...
சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைந்து வருகிறது.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளின் பொருளாதார மந்தநிலையால் இந்த சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஈராக்-சிரியாவில் ஐ.எஸ் அமைப்புகளால் ஏற்பட்டுள்ள நிலையற்றத்தன்மை, அந்த பிராந்தியங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2014ம் ஆண்டு சவுதி அரேபியா, குவைத், கத்தார் உள்ளிட்ட 6 நாடுகளுக்கு மொத்தம் 7 லட்சத்து 75 ஆயிரத்து 845 இந்தியர்கள் வேலைக்குச் சென்றிருந்தனர். கடந்தாண்டு புள்ளி விவரப்படி அந்நாடுகளுக்கு வேலைக்குச் சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை, 5 லட்சத்து 7 ஆயிரத்து 296 பேர் மட்டுமே. சவுதி அரேபியாவில் வேலைக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 50 சதவிகிதம் குறைந்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்கு செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை குறைந்தது!
மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்கு செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை குறைந்தது!

சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைந்து வருகிறது. வளைகுடா...

மேலும் படிக்க »

vkrnajur vkrnajur Author
Title: சவூதி, கட்டார், துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (21-07-2017) விலை விபரம்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
குறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் தங்க பிஸ்கட்டின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வடிவத்துக...


குறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் தங்க பிஸ்கட்டின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வடிவத்துக்கு ஏற்றாப் போல் செய்கூலியையும் கொடுக்க வேண்டி வரும். உதாரணத்துக்கு கத்தாரில் 144.50 கத்தார் றியாலுக்கு 22 கரட் செயின் ஒன்றை கொள்வனவு செய்கின்றீர்கள் என்றால் (144.50 + செய்கூலி) மற்றும் செயினின் நிறை போன்றவை கருத்தில் கொள்ளப்படும் என்பதை அறிந்து கொள்ளவும். செய்கூலி வடிவத்துக்கு வடிவம் வேறுபடும்.
சவூதி, கட்டார், துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (21-07-2017) விலை விபரம்!
சவூதி, கட்டார், துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (21-07-2017) விலை விபரம்!

குறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் தங்க பிஸ்கட்டின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வடிவத்துக...

மேலும் படிக்க »

6 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த பயணிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை அமலாகியது!

Mohamed Farook Mohamed Farook Author
Title: 6 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த பயணிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை அமலாகியது!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சர்ச்சைக்குரிய பயண தடை அமலாகியுள்ள நிலையில், ஆறு பிரதான இஸ்லாமிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் ம...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சர்ச்சைக்குரிய பயண தடை அமலாகியுள்ள நிலையில், ஆறு பிரதான இஸ்லாமிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மற்றும் அனைத்து அகதிகளும் தற்போது கடுமையான நுழைவு விதிகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. 

இந்த தடையின் கீழ், அகதிகள் மற்றும் குறிப்பிட்ட இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள், அமெரிக்காவில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது வணிக ரீதியாக தொடர்புகள் இல்லாமல் இருந்தால், அமெரிக்காவுக்குள் நுழைய விசா மறுக்கப்படலாம் அல்லது அவர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படலாம்.
தாத்தா, அத்தை, மாமா, மருமகள், உறவினர்கள் ஆகியோர் "உண்மையான'' உறவுகளாக கருதப்படுமாட்டார்கள்.
இரான், லிபியா, சிரியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாட்டு மக்கள் மற்றும் அனைத்து அகதிகளுக்கும் இந்த விதிகள் பொருந்தும்.

இந்த புதிய பயண தடை அமலாகிய வாஷிங்டன் நேரம் 20:00 மணிக்கு( இந்திய நேரப்படி காலை 5.30 மணி) சிறிது நேரத்திற்கு முன், பெடரல் நீதிபதியிடம் ஹவாய் அரசு விளக்கம் கேட்டதாகத் தெரிய வந்தது .
கடந்த காலத்தில் ஹவாய் அரசு, அமெரிக்க அரசாங்கம், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறி முறையற்ற வகையில் மக்களைத் தவிர்த்து என குற்றம் சாட்டியது.
இந்த வாரத்தொடக்கத்தில், உச்ச நீதிமன்றம் தடையை பாதியளவு உறுதிப்படுத்தி, ஆனால் , அதில் முடக்கப்பட்டிருந்த அதிபரின் முக்கிய கொள்கைகளில் ஒன்றின் மீதான தடை விலக்கியது.
ஆறு வரையறுக்கப்பட்ட ஆறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பயணிகள் மற்றும் அகதிகள் அமெரிக்காவில் தங்களுடைய குடும்ப உறுப்பினர் ஒருவர் உள்ளார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உச்சநீதிமன்றம் அக்டோபரில் தடை மீதான இறுதி முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய விதிகள்படி, அடுத்த 90 நாட்கள் நெருங்கிய உறவினர்கள் அமெரிக்காவில் இல்லாமல் குறிப்பிட்ட ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது.
அமெரிக்காவில், பெற்றோர், மனைவி, குழந்தை, மகன் அல்லது மருமகள், அல்லது உடன்பிறப்பு ஆகியோரில் ஒருவர் இருந்தால் அனுமதி உண்டு
தாத்தா, பாட்டி, அத்தை, மாமாக்கள், உறவினர்கள், மருமகன்கள், மாமியார், உறவினர் குடும்பம் மற்றும் பேரப்பிள்ளைகள் போன்றவர்கள் இருந்தாலும் அனுமதி கிடையாது.
புதிய விதிகளின் கீழ், அமெரிக்காவுடன் வர்த்தக மற்றும் கல்வி உறவுகள் கொண்டவர்களுக்கு விதி விலக்கு தரப்படுகிறது.

வழிகாட்டுதல்களின்படி , ஒரு பயணியின் குறிப்பான உறவு முறையானதாக இருக்க வேண்டும், அமெரிக்காவிற்கும் நுழைவதற்காக ஆவணப்படுத்தப்படும் நோக்கத்திற்காக விதிகளை மீறுவதாக உறவுகள் இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
ஏற்கெனவே செல்லுபடியாகும் விசாக்களைக் கொண்டவர்கள் பாதிக்கப்படுவதில்லை
இரட்டைக் குடியுரிமை கொண்ட பயணிகள், இந்தத் தடையால் பாதிக்கப்படாத நாட்டு பாஸ்போர்ட்டைப் பயன்படுத்திப் பயணித்தால் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அகதிகளுக்கு 120 நாட்களுக்கு தடை விதித்த நீதிமன்றம், அமெரிக்காவில் ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் என ஏதாவது ஒரு தொடர்பை நிரூபிக்க முடியாத அகதிகள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு அரசு தடை செய்துள்ளதை அனுமதித்துள்ளது.
6 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த பயணிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை அமலாகியது!
6 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த பயணிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை அமலாகியது!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சர்ச்சைக்குரிய பயண தடை அமலாகியுள்ள நிலையில், ஆறு பிரதான இஸ்லாமிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் ம...

மேலும் படிக்க »

கோவையில் 5 இஸ்லாமிய மாட்டு வியாபாரிகள் கைது!

Mohamed Farook Mohamed Farook Author
Title: கோவையில் 5 இஸ்லாமிய மாட்டு வியாபாரிகள் கைது!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
 கோவை போத்தனூரை சேர்ந்த மாடு வியாபாரிகள் சந்தையிலிருந்து மாடுகளை வாங்கி வரும் வழியில் காவிகள் செட்டிபாளையத்தில் வைத்து வழிமறித்தனர். இத...
 கோவை போத்தனூரை சேர்ந்த மாடு வியாபாரிகள் சந்தையிலிருந்து மாடுகளை வாங்கி வரும் வழியில் காவிகள் செட்டிபாளையத்தில் வைத்து வழிமறித்தனர்.

இதுவல்லாமல் போத்தனூர் TNTJ வை சேர்ந்த காதர் உட்பட் மாடு வியாபாரிகள் 5 பேரை காவல்துறையினர் காவல்நிலையம் கொண்டு சென்றனர்.

இதை கேட்ட உடனே மாவட்ட நிர்வாகிகள்காவல்துறை உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு பிடித்து வைக்கப்பட்டுள்ள சகோதரர்களை உடனே விடுவிக்குமாறு கேட்டு கொண்டனர் .

அதே சமயம் TNTJ வினர், மாடு வியாபாரிகள், பிற இயக்க சகோதரர்கள் நூற்றுக்கனக்கானோர் ஆத்துபாலம் விரைந்தனர்.

நிலைமையை சுதாரித்த காவல்துறையினர் பிடித்து வைக்கப்பட்டு இருந்த அனைவரையும் விடுவித்தனர். இதனால் கோவையில் கலவரம் ஏற்படுத்த துடிக்கும் காவிகளின் சதி முறியடிக்கபப்ட்டுள்ளது.

- TNTJ கோவை தெற்கு மாவட்டம்
கோவையில் 5 இஸ்லாமிய மாட்டு வியாபாரிகள் கைது!
கோவையில் 5 இஸ்லாமிய மாட்டு வியாபாரிகள் கைது!

 கோவை போத்தனூரை சேர்ந்த மாடு வியாபாரிகள் சந்தையிலிருந்து மாடுகளை வாங்கி வரும் வழியில் காவிகள் செட்டிபாளையத்தில் வைத்து வழிமறித்தனர். இத...

மேலும் படிக்க »

’சவுதி குடியுரிமை’: தவறான தகவல் என ஜாகிர் நாயக் மறுப்பு

Mohamed Farook Mohamed Farook Author
Title: ’சவுதி குடியுரிமை’: தவறான தகவல் என ஜாகிர் நாயக் மறுப்பு
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
இஸ்லாமிய மதப் பிரச்சாரகர் ஜாகிர் நாயக்கிற்கு சவுதி அரேபியா அரசு குடியுரிமை வழங்கியுள்ளதாக வெளியான செய்தியினை அவர் மறுத்துள்ளார். கடந்தா...
இஸ்லாமிய மதப் பிரச்சாரகர் ஜாகிர் நாயக்கிற்கு சவுதி அரேபியா அரசு குடியுரிமை வழங்கியுள்ளதாக வெளியான செய்தியினை அவர் மறுத்துள்ளார்.

கடந்தாண்டு ஜூலை 1ஆம் தேதியன்று, வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவர், இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்கள் தன்னை ஊக்குவித்ததாகக் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதனையடுத்து ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிக் ரிசர்ச் ஃபவுண்டேசன் அமைப்புக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. மேலும் தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றம், ஜாகிர் நாயக்கிற்கு எதிராக ஜாமினில் வெளியே வரமுடியாத பிடிவாரண்டைப் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் ஜாகிர் நாயக்கிற்கு சவுதி அரேபியா அரசு, அந்நாட்டு குடியுரிமை வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியானது. இதனை ஜாகிர் நாயக் மறுத்துள்ளார். இது குறித்து அவர், “இது தவறான தகவல். தவறான தகவல்களை எப்படி ஊடகங்கள் வெளியிடுகின்றன?.” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
’சவுதி குடியுரிமை’: தவறான தகவல் என ஜாகிர் நாயக் மறுப்பு
’சவுதி குடியுரிமை’: தவறான தகவல் என ஜாகிர் நாயக் மறுப்பு

இஸ்லாமிய மதப் பிரச்சாரகர் ஜாகிர் நாயக்கிற்கு சவுதி அரேபியா அரசு குடியுரிமை வழங்கியுள்ளதாக வெளியான செய்தியினை அவர் மறுத்துள்ளார். கடந்தா...

மேலும் படிக்க »

Mohamed Farook Mohamed Farook Author
Title: இந்தியாவில் வரலாற்று சாதனை படைத்த ஆயிஷா சஹீர்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
இந்தியாவின் கேரளா மாநில கோட்டயம் ஜில்லா ஈராட்டுபேட்டை முஸ்லீம் உயர் இரண்டாம் நிலை மகளிர்  பாடசாலை  மாணவி ஆயிஷா சஹீர் இந்தியாவில் கடந்த வா...
இந்தியாவின் கேரளா மாநில கோட்டயம் ஜில்லா ஈராட்டுபேட்டை முஸ்லீம் உயர் இரண்டாம் நிலை மகளிர்  பாடசாலை  மாணவி ஆயிஷா சஹீர் இந்தியாவில் கடந்த வாரம் வெளியான பிளஸ் டூ (+ 2) பரீட்சையில் அணைத்து பாடங்களிலும் 1200 புள்ளிகளுக்கு 1200  புள்ளிகள் எடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவில் சமகாலத்தில் முஸ்லிம்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை இந்துத்துவ அமைப்புகள் நாடு முழுவதும் கட்டவிழ்த்து  வரும் வேளையில் பல சிரமங்களுக்கு மத்தியில் இம் மாணவி அணைத்து பாடங்களிலும் அணைத்து புள்ளிகளையும் பெற்று சாதனை படைத்தது இருப்பது  முஸ்லிம்களுக்கு ஆறுதலை கொடுப்பதாக அமைந்துள்ளது.

வரலாற்று சாதனை படைத்த ஆயிஷா சஹீர் பல்வேறு சமூக அமைப்புக்களால் நாளாந்தம் பரிசுகள் வழங்கி கௌரவிக்க படுவது முக்கிய நிகழ்வாக கேரளா முஸ்லிம்கள் மத்தியில் காணப்படுவது சிறப்பு அம்சமாகும்.
இந்தியாவில் வரலாற்று சாதனை படைத்த ஆயிஷா சஹீர்!
இந்தியாவில் வரலாற்று சாதனை படைத்த ஆயிஷா சஹீர்!

இந்தியாவின் கேரளா மாநில கோட்டயம் ஜில்லா ஈராட்டுபேட்டை முஸ்லீம் உயர் இரண்டாம் நிலை மகளிர்  பாடசாலை  மாணவி ஆயிஷா சஹீர் இந்தியாவில் கடந்த வா...

மேலும் படிக்க »

சென்னையில் நோன்பு வைக்க இலவச சஹர் ஏற்பாடு..!!

Mohamed Farook Mohamed Farook Author
Title: சென்னையில் நோன்பு வைக்க இலவச சஹர் ஏற்பாடு..!!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
சென்னைக்கு நோன்பு காலங்களில் வேலையாக செல்லக்கூடிய சகோதரர்கள் சஹர் உணவிற்கு எவ்வித சிரமும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இறைவனின் மாபெரும...
சென்னைக்கு நோன்பு காலங்களில் வேலையாக செல்லக்கூடிய சகோதரர்கள் சஹர் உணவிற்கு எவ்வித சிரமும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

இறைவனின் மாபெரும் கிருபையினால் சென்னை தி நகரில் ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ள விருதுநகர் ஹலால் ஹோட்டலில் இலவச சஹர் உணவு வழங்கப்படுகிறது.

கடந்த வருடங்களிலும் இதேப்போன்று இலவசமாக சஹர் உணவு வழங்கப்பட்டுள்ளது.

நோன்பு காலங்களில் 30 நாட்களுக்கும் அதிகாலை 3:30 முதல் நோன்பாளிகளுக்கு சுவையான தரமிக்க அசைவ சாப்பாடு வழங்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு சுமார் 250 முதல் 300 நபர்கள் வரை ஏழை பணக்காரர்கள் என்ற வித்தியாசமின்றி சஹர் உணவு சாப்பிட்டு செல்கிறார்கள்.

இது தொடர்பாக உரிமையாளரிடத்தில் இத்தனை பேருக்கு அதுவும் இலவசமாக மாதம் முழுவதும் எப்படி சேவை செய்கிறீர்கள் என்று விசாரித்தபோது….

இந்த சென்னைக்கு சாதாரண ஹோட்டல் வைத்து பிழைக்க ஊரிலிருந்து வந்தோம்…

அல்லாஹ்வுடைய மிகப்பெரிய கருணையால் இன்று நல்ல நிலையில் இருக்கிறோம் என்ற ஒரே வார்த்தையோடு நிறுத்திக்கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்…

அல்லாஹ் அவருக்கு தம்முடைய அருளை மென்மேலும் வாரி வழங்குவானாக….

(அதிகப்படியாக Share செய்து நோன்பாளிகளுக்கு பயனுள்ளதாக ஆக்குங்கள்…)
thanks  - adiraipirai
சென்னையில் நோன்பு வைக்க இலவச சஹர் ஏற்பாடு..!!
சென்னையில் நோன்பு வைக்க இலவச சஹர் ஏற்பாடு..!!

சென்னைக்கு நோன்பு காலங்களில் வேலையாக செல்லக்கூடிய சகோதரர்கள் சஹர் உணவிற்கு எவ்வித சிரமும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இறைவனின் மாபெரும...

மேலும் படிக்க »

Mohamed Farook Mohamed Farook Author
Title: முஸ்லிம் நாடுகளில் தலாக்! - ஒர் பார்வை!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
தபால் அட்டை மூலம் தலாக் அனுப்பியவர் கைது என்ற தலைப்பில் ஒரு செய்தியை இன்றைய தினம் பிரசுரித்திருந்தீர்கள். அச்செய்தியின் பிற்பகுதியில் பாக...
தபால் அட்டை மூலம் தலாக் அனுப்பியவர் கைது என்ற தலைப்பில் ஒரு செய்தியை இன்றைய தினம் பிரசுரித்திருந்தீர்கள். அச்செய்தியின் பிற்பகுதியில் பாகிஸ்தான் வங்கதேசம் உள்ளிட்ட பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் தலாக் சொல்லி விவாகரத்துச் செய்யும் நடைமுறையை தடைசெய்து விட்டன.

இந்தியாவில் மட்டுமே இன்னும் தொடர்கிறது என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகவலானது உலக முஸ்லிம் சமூகத்தின் மீது இட்டுக்கட்டப்பட்ட ஒரு அபாண்டமான பொய்யாகும்.

நான் அறிந்த வகையில் பிலிபைனிலும் வத்திக்கானிலுமே தலாக் - விவாகரத்து முறை அனுமதிக்கப்படுவதில்லை. ஏனைய உலக நாடுகளில் குறிப்பாக மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளில் கூட இது நடைமுறையில் உள்ள ஒரு விடயமாகும்.

இவ்வாறிருக்க எப்படி உலகில் முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் பிரதானமான நாடுகளான பங்கலாதேஷ பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இது தடை செய்ப்பட்டுள்ளது என்று அபாண்டமாக சொல்ல முடியும்.

இவ்விரு நாடுகளிலும் அஹ்லுஸ் ஸுன்னா எனப்படும் ஸுன்னீ முஸ்லிம்களே பெரும்பான்மையானவர்கள். எனவே இஸ்லாம் அனுமதித்துள்ள இத்தகைய விடயங்களை அந்நாடுகள் தடை செய்துள்ளன என்பதானது அந்நாடுகள் இஸ்லாத்தை விட்டும் தூரமாகிவிட்டன என்ற பொருளைக் கொடுத்து விடும்.

எனவே இப்படியான தகவல்களைப் பிரசுரிக்கும் வேளை மிகவும் அவதானம் பேணப்பட வேண்டும் என்று வாசகன் என்ற வகையில் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

பிற்குறிப்பு இந்த செய்தியை பிபிசி தமிழோசை பதிவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் நாடுகளில் தலாக்! - ஒர் பார்வை!
முஸ்லிம் நாடுகளில் தலாக்! - ஒர் பார்வை!

தபால் அட்டை மூலம் தலாக் அனுப்பியவர் கைது என்ற தலைப்பில் ஒரு செய்தியை இன்றைய தினம் பிரசுரித்திருந்தீர்கள். அச்செய்தியின் பிற்பகுதியில் பாக...

மேலும் படிக்க »
பழைய இடுகைகள் முகப்பு
 
Top