"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
25/7/17

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கத்தார் நாட்டுடனான தங்களுடைய ராஜியரீதியிலான உறவுகளை கடந்த ஜூன் மாதம் முறித்துக் கொண்டதுடன் தரை மற்றும் வான்வழி போக்குவரத்துக்களையும் துண்டித்துக் கொண்டதும் அறிந்ததே.
இந்நிலையில் அடுத்த மாதம் புனித ஹஜ் கிரிகைகள் துவங்குவதையொட்டி கத்தார் நாட்டிலிருந்து வரும் ஹஜ் பயணிகளுக்கு மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் ஹஜ் கடமைகளை நிறைவேற்ற அனுமதி தந்துள்ளது சவுதி அரேபியா. கத்தார்  ஹஜ் பயணம் மேற்கொள்ளவும் அனுமதியில்லை என்று முன்னதாக வெளியான செய்தியையும் மறுத்துள்ளனர்.
ஹஜ்ஜூக்கு வரும் கத்தார் யாத்ரீகர்கள் ஜெத்தா கிங் அப்துல் அஜீஸ் விமான நிலையம் மற்றும் மதீனா இளவரசர் முஹமது பின் அப்துல் அஜீஸ் விமான நிலையம் ஆகிய 2 விமான நிலையங்கள் வழியாக மட்டுமே வர முடியும். மேலும் அவர்கள் கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தை தவிர்த்து வேறு எந்த விமான சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.