நமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல், நடுத்தர வீட்டு பையன் என்றால் உருப்படாதவான். ஏழையாக இருந்தால் அவன் ரவுடி. இப்படியோர் தவறான பார்வை சமூகத்ள் பொதுவாக நிலவுகிறது.
இதையெல்லாம் தாண்டி, தாடி, மீசை வளர்ப்பது என்பது கெத்து, வீரம், கம்பீரம் என்ற ஆண்களின் இலச்சினை ஆகும். ஆனால், அனைவருக்கும் தாடி ஒரே மாதிரி வளர்வதில்லை. சிலருக்கு காடு போல அடர்ந்து வளரும், சிலருக்கு மெலிசாக வளரும். சிலருக்கு ஆங்காங்கே மட்டும் தான் முளைக்கும்.
சரியாக தாடி வளரவில்லை என பலரும் வருந்துவது உண்டு. இது அவரவர் ஹார்மோன், மரபணு பொருத்தது. ஆனால், இந்த இயற்கை வளர்ச்சி அளவை சில வழிமுறைகள் பின்பற்றினால் தூண்டிவிட முடியும். அதனால், தாடி வேகமாக வளர வாய்ப்புகள் உண்டு. அவற்றை பற்றி இனிக் காண்போம்...
யூக்கலிப்டஸ் தாடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவிபுரியும். எனவே, யூக்கலிப்டஸை முகத்தின் ஈரப்பதம் காக்க பயன்படுத்தி வரலாம்.
நல்ல உறக்கம் கூட தாடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். ஆம், நீங்கள் தினமும் நன்கு உறங்குவது முகத்தில் இருக்கும் சேதமடைந்த செல்கள் புத்துயிர் பெறவும், அதன் மூலம் முகத்தில் முடியின் வளர்ச்சி அதிகரிக்கவும் பயனளிக்கும்.
வைட்டமின் எ, பி, சி, ஈ போன்றவற்றை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஆம், இவை கேசத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள் ஆகும்.
தினமும் 2.5 மில்லிகிராம் பயோட்டின் எடுத்துக் கொள்வது தாடி வேகமாக வளர உதவும்.
தினமும் உங்கள் முகத்தை இதமான தண்ணீரில் இரண்டு முறை கழுவுங்கள். முகத்தின் சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதால், தாடியின் வளர்ச்சி தூண்டிவிடப்படுகிறது.
மன அழுத்தம் இன்றி நீங்கள் இலகுவாக இருப்பதாலேயே தாடியின் வளர்ச்சியை அதிகரிக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆண், இது ஆரோக்கியத்திற்கும் நல்லது. இலகுவாக இருக்க நீங்கள் தினமும் யோகாவை பின்பற்றலாம்.
உங்கள் டயட்டில் புரதச்சத்து அதிகமாக எடுத்துக் கொள்வதால் தாடியின் வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும். முக்கியமாக இறைச்சி, மீன், முட்டை, நட்ஸ் போன்ற உணவுகள்.
முகத்திற்கு மசாஜ் செய்வதால் முகத்தில் இரத்த ஓட்டம் சீரடையும். இதனால், தாடி வேகமாக வளர வாய்ப்புகள் உண்டு.
தினமும் ஷேவிங் செய்தால் தாடி வேகமாக வளரும் என்பார்கள். இது, இதுவரை ஊர்ஜிதம் செய்யப்படாத விஷயம். இது ஒருவகையான மூடநம்பிக்கை தான்.
நெல்லிக்காய் எண்ணெய் ஓர் சிறந்த இயற்கை நிவாரணி. ஆம், நெல்லி எண்ணெய்யை கொண்டு 15-20 நிமிடங்கள் சருமத்தில் அப்பளை செய்து குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் தாடியின் வளர்ச்சியை தூண்டிவிட முடியும்.
D0nate your k1dney with the sum of 3 crore,For more details,Email: [email protected]
பதிலளிநீக்குWhatsApp +91 8681996093