கடந்த 2015 ஆம் வருடம் வி.களத்தூரில் நடந்த நிகழ்வுகள், வளைகுடா நாட்டில் வாழும் வி.களத்தூர் நிகழ்வுகளை ஒட்டு மொத்தமாக உங்களுக்கு தர உள்ளோம்.
செய்தினை படிக்க ஊதா கலரில் உள்ள லிங்க் கிளிக் செய்தால் முழு விபரங்களை நீங்கள் படிக்கலாம்.
குறிப்பு:- நமக்கு தெரிந்த நமது தளத்தில் வந்த செய்திகள் மட்டும் இதில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
வாங்க நம்ம ஊர்ல நடந்த விசயங்களை பார்க்கலாம்.
---------------------------------------------------------------------------------------------
05.11.2015

---------------------------------------------------------------------------------------------
08.11.2015
வி.களத்தூரில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்!
வி.களத்தூரில் கடந்த சில நாட்களாகவே தினமும் மழை பெய்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே... ஆனால் அந்த மழை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மழை பெய்து விட்டுவிடும் ஆனால் இன்று நமதூரில் காலையில் இருந்தே அடை மழை பெய்து வருகிறது.
வி.களத்தூர் நேற்று முதல் தொடர்ந்து அடை பெய்து வருகிறது. அதேபோல் இன்று அதி காலையில் இருந்தே அடை மழை தற்போது மிண்டும் பெய்ய தொடங்கியது. மழையின் காரணாமாக வி.களத்தூர் ஐடியல் பள்ளி இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. மக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
மழை என்பது இறைவனின் அருட்கொடை “கிராமத்து வாழ்க்கை ரொம்பவும் ரசிக்கும்படி இருக்கும் அதுவும் குறிப்பாக மழைக்காலங்களில் அனுபவிக்கும் சந்தோஷம் யாராலும் மறக்க முடியாது. அதுவும் பாலைவன பூமியில் மழையை பார்ப்பது முடியாத விசயம் ஒன்று.
வி.களத்தூர் ஹிதாயத் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரு நாட்கள் அறிவியல் கண்காட்சி மிக சிறப்பாக நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்வருவதால், பள்ளிகளுக்கு நாளை (16ம் தேதி) விடுமுறை
அளிக்கப்படுவதாக கலெக்டர் தரேஷ் அகமது தெரிவித்துள்ளார். இதனால் நாளை வி.களத்தூரில் உள்ள வி.களத்தூரில் அரசு மேல் நிலைப்பள்ளி, ஹிதாயத் மழலையர் தொடக்கப் பள்ளி, ஐடியல் மழலையர் தொடக்கப் பள்ளி, செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி ,விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
அஸ்ஸலாமு அலைக்கும்... தற்போது வி.களத்தூரில் அதிக கல்யாணம் வெளியூரில் தான் நடைபெறுகிறது இதனால் பல சிறம்பங்கள் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு நமதூர் ஜமாத் நிர்வாகம் புதிய நிக்காஹ் வளாகம் தயார் செய்து உள்ளது. இனி நமதூரில் திருமணம் வைத்து கொள்ள இடம் வசதி உள்ளது.
வி.களத்தூரில் வரும் ஞாயிறு TNTJ நடத்தும் தர்பியா பயற்சி நிகழ்ச்சி இடம் - தவ்ஹீத் மார்கஸ். வி.களத்தூர். சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நமதூர் கல்லாற்றில் நேற்று மாலையில் இருந்து தண்ணீர் அதிகரித்து கொண்டு வந்தது. இரவு 7.00 மணிக்கு மேல் ஆறு முழுவதும் தண்ணீர் சென்றது அதன் புகைப்படம்
அஸ்ஸலாமு அலைக்கும்: 22:11:2015
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டம் நடத்திய தர்பியா பயிற்சி நிகழ்ச்சி நேற்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வி. களத்தூர் மர்கஸில் நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் A.S, இஸ்மாயில் அவர்களை வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம்...
வி.களத்தூர் 10,12, வகுப்பு படித்து முடித்தவர்களுக்கு புதுவாழ்வு திட்டத்தின் கீழ் JCB ஓட்டுனர் பயிற்சி வழங்கி, சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன, சென்று வரும் பேருந்து கட்டணமும்,சாப்பாடும் முற்றிலும் இலவசம். சந்தேகத்திற்கு புது வாழ்வு திட்டத்தின் அலுவலகத்தை அனுகவும்.
வி.களத்தூரிலிருந்து 4கி.மீ தொலைவில் உள்ள பிம்பலூர் அருகே கல்லாற்றில் குறுக்கே நீர்த்தேக்கம் கற்களால் கட்டப்பட்டுள்ளது. அங்கு நீர் பரப்பு அதிகமாகவும், சிற்றருவி போன்று காட்சியளிக்கிறது. அங்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் மாலை நேரத்தில் குளிக்க செல்கின்றன.
தற்போது அரும்பாவூர் எரி திறக்கப்பட்டுள்ளதால். தற்போது வி.களத்தூர் கல்லாற்றில் வெள்ளம் வர வாய்ப்பு அதிக உள்ளதால் யாரும் தண்ணீரில் இறங்க வேண்டாம் தற்போது பதற்றம் நிலவும் காட்சி உங்கள் பார்வைக்கு. தொழிநுட்ப காரணத்தினால் புகைப்படங்கள் எடுக்க வில்லை விரைவில் சரிசெய்யப்படும்..
பெரம்பலூரில் உள்ள விஸ்வகுடி அணை நீர் மட்டம் உயர்ந்தது. அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் வி.களத்தூர் கல்லாற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை இன்று காலை 11.00 மணியளவில் நமது தளத்தின் சார்பாக, பள்ளிவாசலில் அறிவிக்கப்பட்டது.
வி.களத்தூரில் டெங்குச்காய்ச்சலை தடுக்கும் வகையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் நில வேம்பு கசாயம் விநியோகம் செய்வதை கையில் எடுத்துள்ளது. வி.களத்தூர் நகர செயலாளர் முஹம்மது ரபிக் அவர்கள் தலைமையில் தமுமுக தொண்டர்கள் விநியோகம் செய்தனர்.
தற்போது மீண்டும் கனமழை பெய்து வருவதால் சென்னை, கடலூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. கடந்த மாதம் 8ம் தேதி முதல் தமிழகத்தில் அவ்வப்போது கனமழை பெய்து வந்ததால் சென்னை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளக்காடாகின.
வி.களத்தூரில் SDPI கட்சியின் மாநில தலைவர் டிசம்பர் 5ல் வருகையைத்தொடர்ந்து செயல்வீரர்கள் வைத்துள்ள பேனர்கள்.
சென்னை: வெள்ளத்தில் சிக்கி அல்லல்படும் சென்னை மக்கள் கடவுளே கொஞ்சம் கருணை காட்டு என்று கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்து வருகிறார்கள். சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது.
வி.களத்தூர்க்கு வருகை தர இருந்த SDPI கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள்,சந்திப்பு தேதி ஒத்திவைப்பு. சென்னையில் வெள்ள நிவரணம் காரணமாக தலைவர்கள,உறுப்பினர்கள்,மற்றும் தொண்டர்கள் சென்னைக்கு செல்ல இருப்பதால் மக்களை சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தில் பங்கேற்கும் பொருட்டு வி.களத்தூரில் அனைத்து வீடுகளிலும்
வி.களத்தூரில் விடிய விடிய பெய்த அடைமழை!! இதனால் வி.களத்தூர் ஆற்றில் வெள்ளம் அதிகம் காணப்பட்டது.
வி.களத்தூரிலிருந்து சென்னைக்கு வெள்ள நிவாரனத்தை எடுத்துக்கொண்டும்,மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரனப்பணி ஆற்றுவதற்காகவும் SDPI கட்சியின் தோழர்கள் அதிகாலை 3.00 மணி அளவில் சென்றனார்.
★பாபரி மஸ்ஜித் இடிப்பு - மத. சகிப்பின்மையின் அடையாளம்.
★பாபரி மஸ்ஜித் மிட்பு - மத சார்பின்மையின் அடையாளம்.
பாபரி மஸ்ஜித் என்றும் நம் நினைவில்.
நேற்று முதல் வி.களத்தூர் சுற்று வட்டார பகுதியில் மிக மிக கனமழை பெய்தது அதன் காரணமாக வி.களத்தூர், மில்லத்நகரில் சில வீடுகளில் நேற்று இரவே தண்ணீர் புகுந்தது. கல்லாற்றில் தற்போது தண்ணீர் அதிகரித்து வருகிறது. இன்று காலையில் வி.களத்தூர் பகுதிகளில் குடிநீர் வர வில்லை. மில்லத்நகரில் ஒடை தண்ணீர் தெருவில் புகுந்தது.
வி.களத்தூர் வண்ணாரம்பூண்டியில் உடைந்த ஏரியை அடைக்கும் பணியில் ஊராட்சி நிர்வாகம் வி.களத்தூர் வண்ணாரம்பூண்டி அருகில் உள்ள ஏரி உடைந்ததால் மில்லத் நகர் சில தெருக்களில் மேலும் சில இடங்களில் தண்ணீர் புகுந்தது. உடைந்த ஏரியை அடைக்கும் பணியில் வி.களத்தூர் ஊராட்சி மன்றம் இன்று காலையிலிருந்து ஈடுபட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் வெள்ளநிவாரணம் வழங்கியவி்.களத்தூர் வியாபாரிகள் சங்கம்வி்.களத்தூர் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இரண்டு நாட்களாக ஏற்பாடு செய்து 2மினி டெம்போ
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் (சித்தா பிரிவு) வாலிகண்டபுரம் சார்பில் வி.களத்தூர் ஹிதாயத் மழழையர் தொடக்கப்பள்ளியில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.அரசு உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் வி. சைனா தேவி பி.எஸ்.எம்.எஸ். மற்றும் சித்தா மருந்தாளுனர் ஹெச். ஈவ்லின்
வி.களத்தூர் போலிஸ் டேஷன் அருகே உரம் காலி சாக்கு மூட்டை ஏற்றினார்கள் அதிக எடை இருந்ததால் மற்றும் சேறு சகதினாலும் கீழே கவிழ்ந்தது. இதில் அதிஷ்டவசமாக தப்பினர்.
வி.களத்தூர் மக்களே தனியாக வெளியே செல்ல வேண்டாம். ஒரு அன்பான வேண்டுகோள்! நமதூரில் கடந்த சில நாட்களாக கல்லாறு பகுதி, பாலம் பகுதி மில்லத்நகர், அகரம், ஏரி, போன்ற பகுதியில் வெறி நாய் சுற்றுகிறது. இன்று வரை குறைந்தது 15க்கு அதிகமானோர் வரை கடித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காடு பகுதியில் திங்கள்கிழமை (டிச. 28) மின் விநியோகம் இருக்காது. பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு மற்றும் கழனிவாசல் தானியங்கி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்,
08.11.2015
வி.களத்தூரில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்!

---------------------------------------------------------------------------------------------
09.11.2015
வி.களத்தூர் ஐடியல் மழலையர் தொடக்கப் பள்ளி இன்று விடுமுறை!

---------------------------------------------------------------------------------------------
09.11.2015
மழைக்காலமும் வி.களத்தூரும் புகைப்படத்துடன் ஒர் சிறப்பு பார்வை உங்களுக்காக.....

---------------------------------------------------------------------------------------------
11.11.2015
ஹிதாயத் மழலையர் தொடக்க பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி முழு வீடியோ உங்களுக்கு வேண்டுமா....

---------------------------------------------------------------------------------------------
15.11.2015
வி.களத்தூரில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை!

---------------------------------------------------------------------------------------------
16.11.2015
வி.களத்தூரில் ஜாமிஆ மஸ்ஜித் நிக்காஹ் வளாகம் திறப்பு விழா மிக சிறப்பாக நடைப்பெற்றது! முழு விபரங்களுடன்.

---------------------------------------------------------------------------------------------
20.11.2015

---------------------------------------------------------------------------------------------
21.11.2015
வி.களத்தூர் ஆற்றில் தண்ணிர் அதிகரிப்பு!!!

---------------------------------------------------------------------------------------------
22.11.2015
வெளுத்து வாங்கும் மழை வீடுகளில் தஞ்சம் அடைந்த வி.களத்தூர் மக்கள்!

வெளுத்து வாங்கும் மழை வீடுகளில் தஞ்சம் அடைந்த வி.களத்தூர் மக்கள்
லட்சத்தீவு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது.அது போல் இன்று காலையில் இருந்து நமதூரில் அடைமழை பெய்து வந்தது.
லட்சத்தீவு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது.அது போல் இன்று காலையில் இருந்து நமதூரில் அடைமழை பெய்து வந்தது.
---------------------------------------------------------------------------------------------
22.11.2015
ஜாமியா மஸ்ஜித் பள்ளி புதிய வளாகத்தில் முதல் நிக்காஹ்!! - படங்கள்

இன்றைய மணமக்கள்: M. ஐனுதீன் (weds) S. அரபாத்துன்னிஸா.
M. அஜ்மீர் பாஷா(weds) M. முபீனா ஆகிய மணமக்கள் நிக்காஹ் புதிய பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
---------------------------------------------------------------------------------------------
23.11.2015
வி.களத்தூர் மர்கஸ்ஸில் நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி!! - படங்கள்..

---------------------------------------------------------------------------------------------
26.11.2015
வி.களத்தூரில் கொசு மருந்து அடிக்கப்பட்டது!!

---------------------------------------------------------------------------------------------
27.11.2015
வி.களத்தூர் மக்களுக்கு அறிய வாய்ப்பு!!!!

---------------------------------------------------------------------------------------------
30.11.2015
வி.களத்தூரின் சுற்றுலா தளமாக மாறிய கல்லாற்று களிங்கி ஒர் சிறப்பு பார்வை. - புகைப்படங்கள்!!

---------------------------------------------------------------------------------------------
30.11.2015
வி.களத்தூர் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை கல்லாற்றில் தற்போது வெள்ளம் வர உள்ளது பதற்றம் புகைப்படங்கள்!!

---------------------------------------------------------------------------------------------
30.11.2015
வி.களத்தூர் கல்லாற்றில் வெள்ள பெருக்கு புகைப்படத்துடன் முழு விபரங்கள் உங்கள் பார்வைக்கு.....

---------------------------------------------------------------------------------------------
01.12.2015
வி.களத்தூரில் தமுமுக நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்தனர்.

---------------------------------------------------------------------------------------------
02.12.2015
சென்னையில் தவிக்கும் வி.களத்தூர் வாசிகள்..... புகைப்படங்கள்!!

---------------------------------------------------------------------------------------------
03.12.2015
வி.களத்தூரில் SDPI கட்சியின் மாநில தலைவர் டிசம்பர் 5ல் வருகையைத்தொடர்ந்துசெயல்வீரர்கள் வைத்துள்ள பேனர்கள்!!

---------------------------------------------------------------------------------------------
03.12.2015
சென்னை மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க வி.களத்தூர் TNTJ சென்றுள்ளனர்

---------------------------------------------------------------------------------------------
03.12.2015
SDPI கட்சியின் தலைவர் வருகை ஒத்திவைப்பு!

---------------------------------------------------------------------------------------------
04.12.2015
வி.களத்தூரில் தற்போது மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக SDPI கட்சி நீதிதிரட்டப்படுகிறது. (PHOTO UPDATED)

கடைவீதிகளிலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதி மற்றும் உணவு, உடை
---------------------------------------------------------------------------------------------
05.12.2015
வி.களத்தூரில் விடிய விடிய பெய்த அடைமழை!!(PHOTO UPDATED)

---------------------------------------------------------------------------------------------
05.12.2015
வி.களத்தூரிலிருந்து வெள்ள நிவாரணத்திற்கு சென்னைக்கு சென்ற SDPI கட்சியினர்!

---------------------------------------------------------------------------------------------
05.12.2015
நாளை டிசம்பர் 6 - வி.களத்தூரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.

பாபரி மஸ்ஜித் என்றும் நம் நினைவில்.
---------------------------------------------------------------------------------------------
06.12.2015
கன மழை எதிரொலி - மில்லத்நகரில் தெருக்களில் புகுந்த தண்ணீர்! PHOTOS!!

---------------------------------------------------------------------------------------------
07.12.2015
வி.களத்தூர் வண்ணாரம்பூண்டியில் உடைந்த ஏரியை அடைக்கும் பணியில் ஊராட்சி நிர்வாகம்!

---------------------------------------------------------------------------------------------
08.12.2015
வி.களத்தூர் சிறுபான்மை வியாபாரிகள் சங்கத்தினர் விநியோகித்த வெள்ள நிவாரணபொருட்கள்வழங்கினர்! (PHOTO UPDATED)

---------------------------------------------------------------------------------------------
11.12.2015
வி.களத்தூர் ஹிதாயத் மழழையர் தொடக்கப்பள்ளியில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது! - புகைப்படம்

---------------------------------------------------------------------------------------------
14.12.2015
வி.களத்தூர் காவல் நிலையம் அருகே லாரி கவிழ்ந்தது!

---------------------------------------------------------------------------------------------
19.12.2015
வி.களத்தூர் மக்களே தனியாக வெளியே செல்ல வேண்டாம். ஒரு அன்பான வேண்டுகோள்!

---------------------------------------------------------------------------------------------
27.12.2015
வி.களத்தூர், லப்பைக்குடிக்காடு பகுதியில் நாளை டிசம்-28 மின் நிறுத்தம்!

---------------------------------------------------------------------------------------------
28.12.2015
வி.களத்தூர் அரசு மதுக் கடையை அகற்றக் பொதுமக்கள் கோரிக்கை!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் அருகேயுள்ள வண்ணாரம்பூண்டியில் உள்ள அரசு மதுக் கடையை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
---------------------------------------------------------------------------------------------
நவம்பர்,டிசம்பர் இந்த 2 மாதத்தின் நிகழ்வுகள் மட்டும் இதில் இடம் பெற்று உள்ளது.
"வி.களத்தூர் 2015 ஓர் சிறப்பு பார்வை"! தொடர் முடிவு..
தொகுப்பு - மு.முஹம்மது பாரூக்.
இன்ஷா அல்லாஹ் விரைவில் நமது ஊரில் இந்த வருடம் (2015) ஆம் ஆண்டு இறந்தவர்களின் விபரங்கள் விரைவில் உங்கள் பார்வைக்கு...

கடந்த 2015 ஆம் வருடம் வி.களத்தூரில் நடந்த நிகழ்வுகள், வளைகுடா நாட்டில் வாழும் வி.களத்தூர் நிகழ்வுகளை ஒட்டு மொத்தமாக உங்களுக்கு தர உள்ளோம்....
மேலும் படிக்க »