"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
6/4/17

தபால் அட்டை மூலம் தலாக் அனுப்பியவர் கைது என்ற தலைப்பில் ஒரு செய்தியை இன்றைய தினம் பிரசுரித்திருந்தீர்கள். அச்செய்தியின் பிற்பகுதியில் பாகிஸ்தான் வங்கதேசம் உள்ளிட்ட பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் தலாக் சொல்லி விவாகரத்துச் செய்யும் நடைமுறையை தடைசெய்து விட்டன.

இந்தியாவில் மட்டுமே இன்னும் தொடர்கிறது என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகவலானது உலக முஸ்லிம் சமூகத்தின் மீது இட்டுக்கட்டப்பட்ட ஒரு அபாண்டமான பொய்யாகும்.

நான் அறிந்த வகையில் பிலிபைனிலும் வத்திக்கானிலுமே தலாக் - விவாகரத்து முறை அனுமதிக்கப்படுவதில்லை. ஏனைய உலக நாடுகளில் குறிப்பாக மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளில் கூட இது நடைமுறையில் உள்ள ஒரு விடயமாகும்.

இவ்வாறிருக்க எப்படி உலகில் முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் பிரதானமான நாடுகளான பங்கலாதேஷ பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இது தடை செய்ப்பட்டுள்ளது என்று அபாண்டமாக சொல்ல முடியும்.

இவ்விரு நாடுகளிலும் அஹ்லுஸ் ஸுன்னா எனப்படும் ஸுன்னீ முஸ்லிம்களே பெரும்பான்மையானவர்கள். எனவே இஸ்லாம் அனுமதித்துள்ள இத்தகைய விடயங்களை அந்நாடுகள் தடை செய்துள்ளன என்பதானது அந்நாடுகள் இஸ்லாத்தை விட்டும் தூரமாகிவிட்டன என்ற பொருளைக் கொடுத்து விடும்.

எனவே இப்படியான தகவல்களைப் பிரசுரிக்கும் வேளை மிகவும் அவதானம் பேணப்பட வேண்டும் என்று வாசகன் என்ற வகையில் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

பிற்குறிப்பு இந்த செய்தியை பிபிசி தமிழோசை பதிவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.