Mohamed Farook Mohamed Farook Author
Title: குழந்தைகளை நேசிப்போர் இறைவனின் அருளைப் பெறுகிறார்கள்! - முஹம்மது நபி (ஸல்)
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
குழந்தைகளுடனும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகுந்த பாசத்துடன் இருந்துள்ளார்கள். குழந்தைகளுடன் எப்படிப் பழக வேண்டும் என்ப...
குழந்தைகளுடனும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகுந்த பாசத்துடன் இருந்துள்ளார்கள். குழந்தைகளுடன் எப்படிப் பழக வேண்டும் என்பதற்கும் அவர் முன்னோடியாக இருந்துள்ளார்கள்.  கைக்குழந்தைகளை உலுக்குவதையோ மேலெறிந்து பிடிப்பதையோ பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்பவில்லை. சற்று வளர்ந்த குழந்தைகளுடன்தான் அவ்வாறு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளையாடினார்கள். கைக்குழந்தைகளின் கழுத்து மென்மையானதால் மூளை பாதிப்படையவோ அல்லது மரண மேற்படவோ வாய்ப்புண்டு.

o முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குழந்தையின் அழுகைக்கு பதிலளித்துள்ளார்கள். ஒரு முறை நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் போது ஒரு குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டு அத்தொழுகையை அவசரமாக தொழுது முடித்தார்கள். நபித்தோழர்கள் காரணம் கேட்க, ''பின்னால் தொழுது கொண்டிருக்கும் தாயின் மனம் பதைபதைக்கும் அல்லவா?'' என்றார்கள்.

o உணவு தேவைப்படும் போதும் சௌகரியமாக இருக்க விரும்பும் போதும் சௌகரியமாக தொடுகை தேவைப்படும் போதும் குழந்தைகள் அழுகையின் மூலம் தெரிவிப்பார்கள் என்பதை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அறிந்திருந்தார்கள்.

o குழந்தைகளுக்கு தேவையான  காரியங்களை ஒழுங்காகச் செய்வதிலும் அவர்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதிலும் தானும் ஈடுபட்டு ஏனைய தோழர்களையும் ஊக்குவித்தார்கள். குழந்தைகள் தன்னை நம்புவதற்கும் ஊக்குவித்தார்கள். அதற்காக தனது அன்பையும் அரவணைப்பையும் காட்டினார்கள்.

o குழந்தைகளை அரவணைத்து உரையாடுவதிலும் நகைச்சுவையாக பேசுவதிலும் ஆர்வம் காட்டினார்கள். குழந்தை ஒரு பிரச்சினையை தீர்க்க முடியாமல் விரக்தியடையும் போது வித்தியாசமான அணுகுமுறையைப் பயன்படுத்தி தீர்த்துள்ளார்கள். பெருநாள் தினத்தில் ஒரு குழந்தை கவலையுற்றிருந்ததைக் கண்டு தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று வேண்டிய உபசரணைகளை செய்தார்கள்.

o அதேபோல் குழந்தைகள் ஆபத்தான காரியம் ஒன்றைச் செய்யும் போது உடனடியாகச் அச்செய்கையிலிருந்து குழந்தையை விடுவித்து பின்னர் அதனால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறியுமுள்ளார்கள். வீதியில் கல்லெறிந்து விளையாடுவதை தடுத்த சம்பவத்தைக் கூறலாம். அதற்குப் பகரமாக சதுரங்க விளையாட்டை அனுமதித்ததை காண முடிகிறது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குழந்தைகளுக்கு உற்சாகமூட்டும் வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்கள். அல்லாஹ்வின் வாள், சுவனத்தின் தலைவர்கள், தாவூதின் புல்லாங்குழல் என்றும் குழந்தைகளின் திறமைகளை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அடிக்கடி கூறுவார்கள். 

o குழந்தைகளுக்கென்று தனியாக நேரம் ஒதுக்கியும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பழகியுள்ளார். ஹஸன், ஹுஸைன், உஸாமா, அனஸ் போன்ற குழந்தைகள் பிறகாலத்தில் வளர்ந்து பெரியவர்களான பின்பும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தங்களுடன் கழித்த அந்த இனிமையான பொழுதுகளை நினைவு படுத்தி கூறியுள்ளார்கள்.

o அண்ணல்முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குழந்தைகளுக்கு பரிசுகளையும் வழங்கியுள்ளார்கள். பரிசு வழங்குவது பாசத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்கள். தொடுகை, ஸ்பரிசம் என்பவற்றை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.

o தலையை தடவுதல், மடியில் வைத்திருத்தல், அணைத்து பிடித்தல், முத்தமிடல், வருடுதல், குழந்தைகளும் தானும் பெரிய துணியால் போர்த்திக் கொண்டு கதகதப்பாக இருத்தல் போன்ற உடலின் தொடுகையால் வரும் பல அன்பு மொழிகளை வெளிப்படத்தியுள்ளார்கள் இவற்றுக்கான சம்பவங்களை சற்று நோக்குவோம்.

o ஒருநாள் காலித் பின் ஸயீத் என்பவர்முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பார்க்க வந்தார். அருடைய பெண் குழந்தையும் அவருடன் வந்த்து. இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அக்குழந்தை நபிகளாரின் முதுகின் மேல்பக்கத்தில் முத்திரை போன்று தசை வளர்ந்திருப்பதை கண்டது. உடனே குழந்தை அதைத்தொட்டு விளையாட ஆரம்பித்த்து. புதிய பொருட்களைக் கண்டால் குழந்தைகளது பார்வை அவற்றில் செல்வது இயற்கையல்லவா?
இதைக் கண்டதும் காலித்துக்கு கோபம் வந்தது. நபிகளுடன் விளையாடுகிறாயா? என்று குழந்தையை தடுத்தார். ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? ''குழந்தை விளையாடட்டும் அதைத் தடுக்க வேண்டாம்'' என்றார்கள்.

o முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எப்பொழுதும் குழந்தைகளை நேசித்து வந்தார்கள். குழந்தைகளைக் கண்டால் ஸலாம் சொல்லுவார். வெளியூருக்குச் சென்று திரும்பி வநதால் தெருக்களில் வரும் குழந்தைகளைத் தமது ஒட்டகத்தின் மீது ஏற்றிக் கொள்வார். 

o முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பழங்கள் அன்பளிப்பாக கிடைத்தால் அவற்றை முதலில் குழந்தைகளுக்கே கொடுப்பார். போரில் குழந்தைகள் கொல்லப்பட்டதாக கேள்விப்பட்டால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகவும் கவலைப்படுவார். 

o ஒருமுறை ஒரு நபித்தோழர் ''நபியவர்களே! அந்தக்குழந்தைகள் முஸ்லிம் குழந்தைகள் அல்ல'' என்றார் அதற்கு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ''யார் குழந்தைகளாக இருந்தாலென்ன குழந்தை குழந்தைதான். எல்லாக் குழந்தைகளும் நேசத்திற்குரியதாகும்'' என்று கூறினார்கள். ''குழந்தைகளை நேசிப்போரும் குழந்தைகளுக்கு சேவை செய்வோரும் இறைவனின் அருளை பெறுகிறார்கள். நரகிலிருந்து விடுதலை அடைகிறார்கள்'' என்று அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
 
விளையாட்டாகவும் பொய் சொல்லாதே
''மகனே இங்கே வா உனக்கு ஒரு சாமான் தருகிறேன்'' என்றாள் அந்தத்தாய். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அங்கு வந்தார்கள்.
''உன் குழந்தைக்கு எந்தப் பொருளைக் கொடுக்க நினைத்தாய்?'' என் கேட்டார்கள்
.
''நாயகமே பேரீச்சம் பழம் கொடுக்கப்போகிறேன்'' என்றாள் அந்த தாய்.
''நீ உன் குழந்தைக்கு எதுவும் கொடுக்கவில்லையானால் நீ பொய் சொன்னதாக இறைவனிடம் எழுதப்படும். விளையாட்டாக கூட பொய் சொல்லக்கூடாது'' என்றார்கள் அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

o மற்றொரு நாள் ஒரு நபித்தோழர் வந்து சுவனம் செல்வதற்கு நான் என்ன நற்செயல் செய்யவேண்டும் என்று கேட்டார். அதற்கு நபிகள் ‘உண்மை’ என்று பதிலளித்தார்கள். ஏனெனில் உண்மை பேசும் மனிதன் எப்போதும் நல்ல காரியத்தையே செயகிறான் அவனிடம் இறை விசுவாசம் ஒளி வீசுகின்றது. நல்ல விசுவாசமுள்ளவன் நிச்சயமாக சுவனத்தில் பிரவேசிக்கிறான் என்பதை முஹம்மது நபி (ஸல்)அவர்கள் அத்தோழருக்கு விளக்கினார்கள்.

o முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குழந்தையாக இருக்கும் போது ஹலீமா என்னும் கிராமத்துப் பெண் அவருக்குப் பால் கொடுத்து வளர்த்தார்கள். நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வளர்ந்து நபிப்பட்டம் பெற்றார்கள். பல ஆண்டுகள் சென்றன. முஸ்லிம்களுக்கும் எதிரிகளுக்கும் நடந்த போரில் ஹலீமாவின் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்களும் முஸ்லிம்களிடம் கைதிகளாக பிடிபட்டனர்.

o ஒருநாள் ஒருபெண் புழுதி படிந்த ஆடையுடன் நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நேராக வந்து ''முஹம்மத் என்ன காரியம் செய்து விட்டீர்? உம்முடைய சிற்றன்னையுள்ள கோத்திரத்தை கைதியாக்கி வீட்டீரே!'' என்றாள். அங்கிருந்தவர்கள் அந்தப்பெண் திடீரென நுழைந்ததையும் துணிச்சலாகப் பேசியதையும் கண்டு வியப்படைந்தார்கள். ஆனால் அவ்வாறு வந்த பெண் தனது செவிலித்தாய் என்றறிந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எழுந்து அந்த அம்மையாரை அன்புடன் வரவேற்று தனது விரிப்பை விரித்து அதன் மீது உட்காரும்படி கூறினார். இனிமையாகப் பேசி, அநத அம்மையாரை மகிழ்வித்தார்கள். ஹலீமாவின் வேண்டுகோளுகிணங்கி எல்லாக் கைதிகளையும் விடுதலை செய்தார்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனக்குப் பால் கொடுத்து வளர்த்த தாய்க்கு இவ்வாறுதான் நன்றி செலுத்தினார்கள். இவ்வாறு தனக்கு உதவி செய்த ஒவ்வொருவருக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இப்படி நன்றி செலுத்தியுள்ளார்கள். மற்றொரு நாள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் இருக்கும் போது அவரது செவிலித்தாய் ஹலீமாவின் கணவர் வந்தார் உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருக்கு தமது விரிப்பின் மூலையில் உட்காருவதற்கு இடமளித்தார்கள். 

சில நிமிடங்களில் செவிலித்தாய் ஹலீமா வநதார். உடனே விரிப்பின் இன்னொரு மூலையில் உட்காருவதற்கு இடமளித்தார்கள். இன்னும் சில வினாடிகளில் ஹலீமாவின் புதல்வி வந்தார். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து நின்று அந்த விரிப்பில் மிகுதியாக இருந்த இடத்தில் தனது பால்குடிச் சகோதரியை உட்கார வைத்தார்கள்.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஏழைச் சிறுவனும்
o அன்று நோன்புப் பெருநாள். அதிகாலையிலிருந்தே பெருநாள் களைகட்டத் தொடங்கியிருந்தது பெருநாளைக் கொண்டாடுவதற்காக ஆயத்தங்களை எல்லோரும் சுறு சுறுப்புடன் செய்து கொண்டிருந்தார்கள். பெருநாள் தொழுகைக்கான நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது. புத்தாடை அணிந்து பெரியவர்களும் குழந்தைகளும் தொழுகைக்காக மைதானத்தை நோக்கி நடக்கலானார்கள். சற்று நேரத்தில் தொழுகை முடிந்த்தும் குழந்தைகள் அங்குமிங்கும் ஓடிவிளையாடிக் கொண்டிருந்தனர். 

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பார்வை அஙகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவனின் பக்கமாக சென்றது. அவன் மெலிந்திருந்தான். அழுக்கடைந்த ஆடையை அணிந்திருந்தான். மைதானத்தில் ஒரு மூலையையில் அமர்ந்து மௌனமாக அழுது கொண்டிருந்தான்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவனை நோக்கி நடந்தார்கள் அவனுடைய தோளில் கைவைத்து அவனது தலையைத் தன்பக்கம் திருப்பினார். மகனே ஏன் அழுகிறாய் என்று அன்பாக கேட்டார். அந்தக் குழந்தை கோபத்துடன் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கையைத் தட்டி விட்டது. என்னைத் தனியாக விட்டுவிடுங்கள் நான் பிரார்த்தனை செய்கின்றேன் என்றான். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அவனுடைய தலையைத் தடவிக் கொண்டு ''மகனே என்ன நடந்த்து?'' என்று கேட்டார்கள்.
அவன் தனது முழங்கால்களுக்கிடையில் முகத்தைப்புதைத்துக் கொண்டு முஹம்மது நபிக்கு எதிராக நடந்த போரில் எனது தநதை மரணித்து விட்டார். 

என்னுடைய தாயார் வேறு ஒருவரை திருமனம் செய்து கொண்டார். என்னுடைய உடைகளையும் அபகரித்துக் கொண்டார். நான் தாயாரிடம் போனேன். அவருடைய புதிய கணவர் என்னைத் துரத்திவிட்டார். நான் என்ன செய்வேன் என்று ஓவென்று அழ ஆரம்பித்தான்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அழுகை வந்தது. அதை அடக்கிக் கொண்டு ''அதுக்கென்ன நானும் ஓர் அநாதைதான் பிறப்பதற்கு முன்பே வாப்பாவை இழந்து விட்டேன்'' என்று கூறினார்கள். சிறுவன் நபிகளை நிமிர்ந்து பார்த்த்தான். அவனுக்கு யார் என்பது நினைவுக்கு வந்தது. அவனுக்கு வெட்கம் வந்துவிட்டது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''நான் உனக்கு தந்தை, ஆயிஷா உன் தாய், ஃபாத்திமா உன் சகோதரி என்று இருந்தால் சந்தோசப்படுவாயா?'' என்று கேட்டார்.

சிறுவன் ஆம் என்றான். அச்சிறுவனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை அழைத்து ''இதோ உனக்கு ஒரு மகன்'' என்றார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அச்சிறுவனை அழைத்துச் சென்று குளிப்பாட்டினார். பின்னர் அவனுக்கு ஆடை அணிவித்தார்கள். அவனுக்கு உண்ண உணவு கொடுத்தார்கள். ''இப்போது வெளியே சென்று குழந்தைகளுடன் விளையாடிவிட்டு வா'' என்றார்கள். அவன் ஆனந்தத்துடன் வெளியேறி மைதானத்தை நோக்கி ஓடினான். 

எல்லா மனிதர்களுக்கும் முன்மாதிரியாக ஏக இறைவனால் அனுப்பிவைக்கப்பட்ட அகிலத்தின் அருட்கொடை நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியைப்பின்பற்றி நாமும் எல்லா குழந்தைகளிடம் அன்பு பாராட்டுவோம்.
குழந்தைகளை நேசிப்போர் இறைவனின் அருளைப் பெறுகிறார்கள்! - முஹம்மது நபி (ஸல்)
குழந்தைகளை நேசிப்போர் இறைவனின் அருளைப் பெறுகிறார்கள்! - முஹம்மது நபி (ஸல்)

குழந்தைகளுடனும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகுந்த பாசத்துடன் இருந்துள்ளார்கள். குழந்தைகளுடன் எப்படிப் பழக வேண்டும் என்ப...

மேலும் படிக்க »

Mohamed Farook Mohamed Farook Author
Title: அனைத்துத் துறையிலும் உலகம் அழியும் வரை வழிகாட்டியவர்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
அனைத்து துறையிலும் உலகம் அழியும் வரை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டி விட்டனர். நாளை ஒருவர் ஒரு கருத்தை புதிதாக இருப்பத...
அனைத்து துறையிலும் உலகம் அழியும் வரை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டி விட்டனர். நாளை ஒருவர் ஒரு கருத்தை புதிதாக இருப்பதை போல் சொல்வார். நன்கு ஆராய்ந்தால் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்கனவே நேரிடையாகவோ மறைமுகமாகவோ அதை சொல்லியோ செய்தோ இருப்பார்கள்.

அப்படிப்பட்ட ஒரு அடிப்படை இல்லை என்றால் அந்த புதுக்கருத்து வெளிரங்கத்தில் எப்படி இருப்பினும் மனிதனுக்கு நன்மை தராது.
மண்ணுலக வாழ்வில் ஒருவர் இயேசு நாதரைப் போல் பிரம்மச்சாரியாக வாழ்ந்து இருந்தால் கிறித்துவமே பரவி இருக்குமா?

மனைவி பிள்ளைகளை விட்டுவிட்டு வெளியேறிய புத்தரின் உதாரணத்தை எத்தனை புத்த சமயத்தினர் பின்பற்ற முடியும்?
இராமரைப் போன்று எத்தனை இந்துக்கள் மார்பு திறந்த ஆடை அணிய முடியும்?. எப்படி இருப்பினும் குளிர் பிரதேசத்தில் யாராலும் அதை கடை பிடிக்க முடியாது.

இயேசு நாதருக்கு சீடர்கள். அவர்களில் ஒருவன் வீணாமல் போய் விட்டான். அவன் ஜுதா என்பதை நம்மில் தெரியாதவர் குறைவு. ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எத்தனை சீடர்கள் என்றால் பலருக்குத் தெரியாது. முஸ்லிம்களில் சிலருக்கும் தெரியாது.
பத்தல்ல பத்தாயிரம் அல்ல, ஒரு இலட்சத்து இருபத்தி நாலாயிரம் சீடர்களை உடையவர்கள் நபிகள் பெருமகனார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் .
 

தமது சீடர்களை தோழர்களாக அன்புடன் அழைத்தவைர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ஒன்றை தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு சமயத் தலைவர் அந்தந்த சமயத்தினருக்கு மட்டும் தான் மறுமையில் அல்லது மரணத்திற்குப் பிறகு (according to their belief) அவர்கள் நம்பிக்கைப்படி பலன் தருவார். உலக வாழ்வில் அல்ல.
ஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டுமே மறுமையிலும் இம்மையிலும் பலன் அளிக்கக் கூடியவர்கள். முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல; அனைவருக்கும், அவர் இறை மறுப்பாளராக இருப்பினும் சரியே.
அனைத்துத் துறையிலும் உலகம் அழியும் வரை வழிகாட்டியவர்!
அனைத்துத் துறையிலும் உலகம் அழியும் வரை வழிகாட்டியவர்!

அனைத்து துறையிலும் உலகம் அழியும் வரை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டி விட்டனர். நாளை ஒருவர் ஒரு கருத்தை புதிதாக இருப்பத...

மேலும் படிக்க »

Mohamed Farook Mohamed Farook Author
Title: மழை காலமும், மார்க்கம் சொல்லும் வழிமுறைகளும்!!!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
‘வறண்ட பூமியை நோக்கி தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம்’ என்பதை அவர்கள் காணவில்லையா? அதன் மூலம் பயிர்களை வெளிப்படுத்து கிறோம். அதிலிருந்து ...
‘வறண்ட பூமியை நோக்கி தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம்’ என்பதை அவர்கள் காணவில்லையா? அதன் மூலம் பயிர்களை வெளிப்படுத்து கிறோம். அதிலிருந்து அவர்களும், அவர்களது கால்நடைகளும் சாப்பிடுகின்றனர். அவர்கள் சிந்திக்க மாட்டார்களா? (அல்குர்ஆன் 32:27)

தற்போது உலகம் முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதுடன் பல இடங்களில் புயல் காற்று, மண் சரிவு, வெள்ளப் பெருக்கு, புவி அதிர்வு, கடல் கொந்தளிப்பு போன்றவையும் ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறுவதுடன், வீடு வாசல்களையும் இழந்து தவிக்கிறார்கள்.

இப்படியான நேரத்தில் சிரமங்களை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள், துன்பங்களை ஏற்றுக் கொள்ள இயலாதவர்கள் இறைவனை நிந்திப்பதையும், வாயார வசைபாடுவதையும் கண்கூடாகக் கண்டுவருகின்றோம். ஆனால் இப்படியான நேரங்களிலெல்லாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மார்க்கம் நமக்குத் தெளிவாக சொல்லித் தந்துள்ளது. 

மார்க்கம் காட்டிய அடிப்படையில் நாம் நடக்கும் போது மழை காலத்தில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களை விட்டும் பாதுகாப்புத் தேடுவதுடன் மார்க்கத்தின் கட்டளைகளையும் பின்பற்றிய நன்மையை பெற்றுக் கொள்ள முடியும்.

இழப்புகள் ஏற்படும் போது என்ன செய்வது?
மழையின் காரணமாக வெள்ளப் பெருக்குகள் ஏற்பட்டு அழிவுகள், இழப்புகள் ஏற்படுகின்றன. இப்படியான நேரங்களில் நாம் படைத்த இறைவனை மறந்து அவனுடைய வழிகாட்டல்களுக்கு மாற்றமாக நடக்கக் கூடாது. மாறாக இறைவன் காட்டிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இழப்புகள் ஏற்படும் போது கீழ்க்காணும் துஆவை ஓதினால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் மாற்றாகத் தருவான் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

إِنَّا للهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ اَللّهُمَّ أْجُرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ وَأَخْلِفْ لِيْ خَيْرًا مِنْهَا
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்,
அல்லாஹும்ம அஃஜுர்னீ பீ[எஃப்] முஸீப(ப்](த்)தி வ அக்லிப்[எஃப்] லீ கைரன் மின்ஹா.

இதன் பொருள் : நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எனது துன்பத்திற்காக நீ கூலி தருவாயாக. மேலும் இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக. (ஆதாரம்: முஸ்லிம் 1525)

மழை பொழியும் போது என்ன செய்வது?
மழை பெய்யும் போது ஓதுவதற்குறிய ஒரு துஆவை நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள் அந்த துஆவை ஓதும் போது நாம் மழையின் மூலமாகவும் மறுமையில் நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

اَللّهُمَّ صَيِّبًا نَافِعًا
அல்லாஹும்ம ஸய்யிப(ப்]ன் நாபி[எஃப்]அன்
இதன் பொருள் : இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்கு! (ஆதாரம்: புகாரி 1032)
  
அளவுக்கு மேல் மழை பெய்தால். - 
சாதாரனமான வழமையான முறையில் மழை பெய்தால் மேற்கண்ட துஆவை ஓதும் படி கற்றுத் தந்த நபியவர்கள்
அளவுக்கு மேல் மழை பெய்யும் போது ஓதுவதற்கு இன்னொரு துஆவையும் கற்றுத் தந்துள்ளார்கள்.

அளவுக்கு அதிகமாக மழை பெய்தால் கீழுள்ள துஆவை ஓத வேண்டும்.

اَللّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا
அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா என்று இரு கைகளையும் உயர்த்தி கூற வேண்டும்.

இதன் பொருள் : இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்காதே! (ஆதாரம்: புகாரி 933, 1015, 1020, 1021, 1033, 6093, 6342)
அல்லது
اَللّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ
அல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபா(ப்]லி வல் ஆஜாமி வள்ளிராபி(ப்] வல் அவ்திய(த்)தி வ மனாபி(ப்]திஷ் ஷஜரி

இதன் பொருள் : இறைவா! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும், கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக. (ஆதாரம்: புகாரி 1013, 1016)
அல்லது
اَللّهُمَّ عَلَى رُءُوْسِ الْجِبَالِ وَالآكَامِ وَبُطُونِ الأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ
அல்லாஹும்ம அலா ருவூஸில் ஜிபா(ப்]லி வல் ஆகாமி வபு(ப்]தூனில் அவ்திய(த்)தி வ மனாபி(ப்]திஷ் ஷஜரி (ஆதாரம்: புகாரி 1017)
 
புயல் வீசும் போது என்ன செய்வது?
தற்போதுள்ள சூல்நிலையில் கடுமையான புயலுடன் கூடிய மழை பெய்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கடுமையான புயலின் மூலம் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தங்க இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலைகள் ஏற்படும் போது நாம் ஓத வேண்டிய துஆவை நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

இந்த துஆவை நாம் ஓதுவதின் மூலம் புயலினால் நமக்கு ஏற்படவிருக்கும் தீங்கை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பான்.
اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாபீ[எஃப்]ஹா வகைர மா உர்ஸிலத் பி(ப்]ஹி. வஅவூது பி(ப்](க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா பீ[எஃப்]ஹா வஷர்ரி மா உர்ஸிலத் பி(ப்]ஹி

இதன் பொருள் : இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (ஆதாரம்: முஸ்லிம் 1496)

மேற்கண்ட அனைத்து செயல்பாடுகளையும் செய்வதின் மூலம் இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெருவோமாக!
மழை காலமும், மார்க்கம் சொல்லும் வழிமுறைகளும்!!!
மழை காலமும், மார்க்கம் சொல்லும் வழிமுறைகளும்!!!

‘வறண்ட பூமியை நோக்கி தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம்’ என்பதை அவர்கள் காணவில்லையா? அதன் மூலம் பயிர்களை வெளிப்படுத்து கிறோம். அதிலிருந்து ...

மேலும் படிக்க »

Mohamed Farook Mohamed Farook Author
Title: ஆடையில்லாமல் எதுவுமில்லை!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
ஆதி மனிதர் ஆதாமும் ஏவாளும் தொடக்கத்தில் நிர்வாணமாக இருந்தனர். ஆனால் அவர்கள் நிர்வாணமாக இருக்கிறோம் என்பதை அறியாமல் இருந்தார்கள். எப...
ஆதி மனிதர் ஆதாமும் ஏவாளும் தொடக்கத்தில் நிர்வாணமாக இருந்தனர். ஆனால் அவர்கள் நிர்வாணமாக இருக்கிறோம் என்பதை அறியாமல் இருந்தார்கள்.

எப்போது அவர்கள் அறிவுக் கனியை உண்டார்களோ அப்போதுதான் தாங்கள் நிர்வாணமாக இருப்பதை உணர்ந்தார்கள். அவர்கள் தங்கள் பாலுறுப்புகள் வெளிப்படையாகத் தெரிவதைப் பார்த்து வெட்கப்பட்டார்கள். உடனே அத்தி மர இலைகளைப் பறித்துத் தங்கள் பாலுறுப்புகளை மறைத்துக் கொண்டார்கள்.
ஆடை மனிதனின் முதல் கண்டுபிடிப்பு. அந்த ஆடையே மனிதனை மற்ற உயிரினங்களிலிருந்து பிரித்தது; உயர்த்தியது.

ஆடைத் தத்துவம் அற்புதமானது.
யோனத்தன் ஸ்விஃப்ட் ‘மனிதனே ஆடைதான்’ என்கிறார். அதாவது மனிதன் தோன்றுவதற்கு முன் பூமி நிர்வாணமாக இருந்தது. அறிவியலின் சாரமே ஆடை பற்றிய தத்துவத்தில் அடங்கியிருக்கிறது என்கிறார் கார்லைல்.
ஆடையில்லாமல் எதுவுமில்லை.

கண்ணுக்கு இமை ஆடை. விண்ணுக்கு மேகம் ஆடை. மண்ணுக்குக் கடல் ஆடை. இதயத்திற்கு எண்ணங்களே ஆடை. ஆன்மாவுக்கு உடல் ஆடை. மதமே மனிதனின் ஆடைதான். சொல் பொருளின் ஆடை. ‘பத்துக்கு மேலாடை பதினொன்று’என்று கூறி அசத்துகிறார் உவமைக் கவிஞர் சுரதா.

சமணர்களில் ஒரு பிரிவினர் திகம்பரர். அவர்கள் நிர்வாணமாக இருப்பார்கள். கேட்டால் ‘நாங்கள் நிர்வாணத்தையே உடுத்தியிருக்கிறோம்’என்கிறார்கள்.
காவெண்ட்ரி நாட்டு அரசி காடிவா, மக்களை வரிக் கொடுமையிலிருந்து நீக்குவதற்கு மன்னன் விதித்த நிபந்தனைப்படி வீதிகளில் குதிரையில் நிர்வாணமாக ஊர்வலம் வந்தாள்.

அதை வருணித்த டென்னிசன் ‘அவள் கற்பை ஆடையாக உடுத்தி வந்தாள்’ என்கிறார்.(!!!)

இதே காட்சியை நான் ‘அவள் மக்கள் இமைகளையே ஆடையாக உடுத்தி வந்தாள்’ என்று எழுதியிருக்கிறேன்.
கணவன் - மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்க வந்த திருக்குர்ஆன், ஆண்களை நோக்கி, ‘அவர்கள் உங்களுக்கு ஆடை; நீங்கள் அவர்களுக்கு ஆடை’ என்கிறது. அதாவது மனைவி கணவனுக்கு ஆடை. கணவன் மனைவிக்கு ஆடை.
உணவு, உடை, உறையுள் மூன்றும் மனிதனுக்கு இன்றியமையாத தேவைகள்.

கணவன்- மனைவி உறவை உணவாகவோ, உறையுளாகவோ கூறாமல் உடையாகக் கூறுகிறது குர்ஆன்.

உணவுக்குப் பிச்சை கேட்டே பிழைத்துக் கொள்ளலாம். வாடகை வீட்டிலேயே வாழ்க்கையை ஓட்டிவிடலாம். ஆடை விஷயத்தில் அப்படி இருக்க முடியுமா? ஆண்டிக்குக் கூடக் கோவணம் ஒன்று சொந்தமாகத் தேவை.
ஆடை ஆழமான அர்த்தங்களையுடைய அற்புதமான குறியீடு.

மனிதன் மட்டுமே ஆடை அணிகிறான். மற்றைய உயிரினங்கள் அணிவதில்லை. அதைப் போலவே உயிரினங்களுக்குப் பொதுவான பாலுறவைத் திருமணம் என்ற ஒன்றால் ஒழுங்காக்கிக் கொண்டவன் மனிதனே.
திருமணத்திற்கு முன் ஆணும் பெண்ணும் ஆடை அணிந்திருந்தாலும் நிர்வாணிகளே.

ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் உடுத்திக் கொள்ளும்போதுதான் அவர்கள் கௌரவம் பெறுகிறார்கள்.
ஆண் பெண்ணுக்காகவே நெய்யப்படுகிறான். பெண் ஆணுக்காகவே நெய்யப்படுகிறாள்.

திருமணம் என்றாலே ஆடை அவிழ்ப்பதற்கு என்று நினைக்கிறார்கள். ஆனால், திருமணம் என்பதே ஆடை உடுப்பது என்கிறது குர்ஆன்.
ஆடை நமக்குப் பிடித்திருக்க வேண்டும். அதற் காகத்தான் அதை நாமே தேர்ந்தெடுக்கிறோம். நாம் விரும்பித் தேர்ந்தெடுத்ததை அணியும் போதுதான் நாம் மகிழ்கிறோம். திருமண உறவும் அப்படித்தான். விரும்பியதைத் தேர்ந் தெடுக்க வேண்டும். இல்லையென்றால் உடுத்த முடியாது.

ஆடை நமக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும். இயற்கை ஒவ்வோர் ஆணையும் பெண்ணையும் ஆயத்த ஆடையாகவே தயாரிக்கிறது. அதில் பொருத்தமானதையே நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். பத்துப் பொருத்தம் பார்க்கிறார்கள். ஆனால், மனப் பொருத்தம் பெரும்பாலும் பார்ப்பதில்லை. அது முக்கியம்.

ஆடை மானத்தைக் காக்கிறது. திருமணமும் மானத்தைக் காக்கிறது. பால் இச்சை பயங்கரமானது. அது மனிதனை அவமானப் படுகுழியில் தள்ளிவிடக்கூடியது. திருமண உறவில் ஆணும் பெண்ணும் ஒருவர் பால் இச்சையை மற்றவர் தணிக்கின்றனர். இதனால் ஒருவர் மானத்தை மற்றொருவர் காக்கின்றனர்.

ஆடை மறைக்கிறது. அதைப் போலவே கணவனும் மனைவியும் ஒருவர் குற்றங்குறைகளை மற்றவர் மறைக்க வேண்டும்.
கணவன் என்ற ஆடை கட்டிக் கொண்டிருப்பதால் ஒரு பெண் தவறான பார்வைகளிலிருந்து மறைக்கப்படுகிறாள். கணவனும் அப்படியே.
ஆடை தட்பவெப்பம், அழுக்கு போன்ற வற்றிலிருந்து பாதுகாக்க அணியப்படுகிறது. கணவனும் மனைவியும் துன்பம் தாக்காமல் 

ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக இருக்கின்றனர். அது மட்டுமல்ல; இருவரும் ஒருவருக்கொருவர் குளிருக்குக் கதகதப்பாகவும் வெயிலுக்கு இதமாகவும் இருக்கிறார்கள்.
ஆடை கெளரவத்திற்காக அணியப்படுகிறது. கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் கெளரவம் உண்டாக்குகிறவர்களாக இருக்க வேண்டும்.
சீருடை அடையாளத்திற்காக அணியப்படுகிறது. அதுபோலவே கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அடையாளமாக இருக்க வேண்டும்.
ஆடையை நாகரிகம், பண்பாட்டுக்காக அணிகிறோம். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் நாகரிகம் பண்பாட்டை உண்டாக்குகிறவர்களாக இருக்க வேண்டும்.

ஆடையை சுகத்திற்காக அணிகிறோம். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் சுகம் தருகிறவர்களாக இருக்க வேண்டும்.
ஆடையை அழகுக்காக அணிகிறோம். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் அழகுபடுத்துபவராக இருக்க வேண்டும்.
 
ஆடை அழுக்கானால் நாம் அதைத் தூக்கி எறிந்துவிடுவதில்லை. சலவை செய்து அணிந்துகொள்கிறோம். கணவனிடமோ மனைவியிடமோ குறைகள் தோன்றினால் தூக்கி எறிந்துவிடக் கூடாது. அந்தக் குறைகளை நீக்க முயல வேண்டும்.

ஆடை கொஞ்சம் கிழிந்தால் நாம் அதைத் தூக்கி எறிந்துவிடுவதில்லை. தைத்து அணிந்து கொள்கிறோம். கணவன் மனைவியரிடையே கோபதாபங்கள் ஏற்பட்டால் பிரிந்துவிடக்கூடாது. சமாதானம் என்ற தையலால் ஒன்று சேர்ந்துவிடவேண்டும்.
ஆனால் ஆடை அணியவே முடியாதபடி சுருங்கிப் போனால், தைக்கவே முடியாதபடி கிழிந்துபோனால், சலவை செய்யவே முடியாதபடி அழுக்காகிப் போனால், அதாவது ஆடை யின் பயனை அது தராது போனால், அந்த ஆடையை வைத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. தூக்கி எறிந்துவிட்டுப் புதிய ஆடையை வாங்கிக்கொள்ள வேண்டியது தான்.

இன்பமாக இருப்பதற்குத்தான் இல்லறம்; துன்பப்படுவதற்கல்ல. கசப்பும் வெறுப்பும் முற்றி இருவரும் சேர்ந்து வாழவே முடியாது என்ற நிலை வந்துவிட்டால், பிறகு இல்லறம் என்பதற்கே அர்த்தமில்லை. இருவரும் பிரிந்து தமக்குப் பிடித்தமான புதிய உறவுகளை உண்டாக்கிக்கொள்வதே நல்லது.

‘ஆடை’ என்ற ஒரே ஒரு குறியீடு கணவன் மனைவிக்குரிய இலக்கணங்கள் அத்தனை யையும் உணர்த்துவது வியப்புக்குரியது.

கவிக்கோ அப்துல் ரகுமான்  
ஆடையில்லாமல் எதுவுமில்லை!
ஆடையில்லாமல் எதுவுமில்லை!

ஆதி மனிதர் ஆதாமும் ஏவாளும் தொடக்கத்தில் நிர்வாணமாக இருந்தனர். ஆனால் அவர்கள் நிர்வாணமாக இருக்கிறோம் என்பதை அறியாமல் இருந்தார்கள். எப...

மேலும் படிக்க »

Mohamed Farook Mohamed Farook Author
Title: ஓரிறைக் கொள்கையை தகர்க்கும் ஒடுக்கத்து "புதன்"
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
இஸ்லாமிய ஹிஜ்ரா நாள்காட்டியில் ஸஃபர் மாதத்தில் அன்றைய அரபு மக்கள் வணிக நோக்கத்திற்காக சிரியா போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வது வழக்...
இஸ்லாமிய ஹிஜ்ரா நாள்காட்டியில் ஸஃபர் மாதத்தில் அன்றைய அரபு மக்கள் வணிக நோக்கத்திற்காக சிரியா போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வது வழக்கம். எனவே தான் இம்மாதத்திற்கு ஸஃபர்-பயணம் என்ற பெயர் வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. 

இம்மாதத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்ததால் அந்த மாதம் (ஸஃபர்) பீடை மாதம் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் இருந்து வருகின்றது. இந்த மாதத்தில் திருமணம் போன்ற நல்ல காரியங்கள் எதுவும் செய்யக் கூடாது என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். 

இப்படி நம்புவதற்கும், அதன் அடிப்படையில் செயல்படுவதற்கும் அனுமதி உண்டா? என்று அல்குர்ஆன் நபிவழி அடிப்படையில் நாம் ஆய்வு செய்வதற்கு முன், இது ஒரு மூட நம்பிக்கை தான் என்பதற்குரிய வேறு சில காரணங்களைப் பார்ப்போம்.

ஒரு நேரம், ஒரு நாள், ஒரு மாதம் எல்லோருக்கும் நன்மை செய்யக்கூடியது என்று நம்புவதும், அல்லது எல்லோருக்கும் கெடுதி செய்யக்கூடியது என்று நம்புவதும், இறைவன் ஏற்படுத்தியுள்ள நியதிக்கு மாற்றமானதாகும். ஒருவருக்கு மிகவும் நன்மைகள் வந்தடைந்த நாள், இன்னொருவனுக்கு கேடுகள் வந்தடைந்த நாளாக இருப்பதைத் தான் நடைமுறையில் நாம் காண முடிகிறது. 

ஒரு நாளில் ஒருவருக்கு அழகான குழந்தை பிறந்திருக்கும்; அவருக்குப் பக்கத்து வீட்டில் உள்ள ஒருவர் அதே நாளில் மரணமடைந்திருப்பார். நல்லநாள் என்று ஒன்று இருக்குமானால் உலக மக்கள் அனைவருக்கும் அந்த நாளில் நல்லவையே நடக்க வேண்டும்; கெட்ட நாள் என்று ஒன்று இருக்குமானால் உலக மக்கள் அனைவருக்கும் அந்த நாளில் கெட்டவை மட்டுமே சம்பவிக்க வேண்டும். 

எந்த நாளாக இருந்தாலும் அதில் சிலருக்கு நல்லவை ஏற்படுவதும், சிலருக்கு கெட்டவை ஏற்படுவதும் தான் நடைமுறை உண்மை. இதைப் புரிந்து கொள்ள பெரிய ஆதாரம் தேவையில்லை. தங்கள் வாழ்க்கையிலேயே அனைவரும் அனுபவரீதியாக உணர முடியும்.

ஸஃபர் மாதத்தில் நபியவர்கள் நோய் வாய்ப் பட்டதினால் அந்த மாதமே பீடை மாதம் என்றால், ஸஃபர் மாதத்தில் நபியவர்கள் மேற்கொண்ட ஹிஜ்ரத் பயணம் மகத்தான வெற்றியை ஏற்படுத்தியுள்ளதே. அந்த பயணத்திற்குப் பின்பு தான், இஸ்லாம் தனக்கென ஒரு நாட்டையே நிறுவ முடிந்தது; சிந்திக்க தெரிந்தவர்களுக்கு இவை போதுமானதாகும். இதே ஸஃபர் மாதத்தின் இறுதி புதன்கிழமையில் தான் நபியவர்கள் குணமடைந்து குளித்தார்களாம். 

அதனால் நாமும் ஒடுக்கத்துப் புதன் அன்று குளித்து நமது முஸீபத்துக்களை நீக்க வேண்டுமாம். இந்த மூட நம்பிக்கையின் பெயரால் பல மடமைகள் நடக்கின்றன. அதாவது அன்றைய தினம் கடல், குளம், ஏரி, அருவி போன்ற நீர்நிலைகளில் குளிப்பது, பனை ஓலை, பீங்கான் தட்டுகளில் ஏதேதோ எழுதி கரைத்துக் குடிப்பது போன்ற நடவடிக்கைகள் இஸ்லாத்திற்கு நேர் எதிரானதாகும். அந்த நளை பீடை நாள் என்று ஒதுக்குவது அல்லாஹ்வுக்கு இணை வைப்பதான செயலாகும்.

அல்லாஹ் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ''ஆதமின் மகன் என்னை வருத்தப்படுத்துகிறான். (அதாவது) காலத்தை அவன் திட்டுகிறான். ஆனால் நானோ காலமாக இருக்கிறேன். காலத்தின் அனைத்து அதிகார மும் என் கைவசமே உள்ளது. இரவையும் பகலையும் நானே மாறி மாறி வரச் செய்கிறேன்''. (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5/4826, 6/6181)
 
அறியாமைக் கால அரபு மக்கள் எது நடந்தாலும் அதைக் காலத்துடன் இணைத்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். காலம்-தான் அவரை அழித்து விட்டது; மோசமான காலம்; நாசமான காலம் என்றெல்லாம் அறியாமைக்கால மக்கள் பேசி வந்தனர். காலம் என்பது சம்பவங்கள் நிகழும் ஒரு நேரமே தவிர, அதற்கு ஆக்குகின்ற, அழிக்கின்ற ஆற்றல் எதுவும் கிடையாது. இரவு பகல் மாற்றமே காலமாகும். அப்படியிருக்க, ஒருவர் காலத்தை சபிக்கின்றார் என்றால், காலமாற்றத்தை உருவாக்கும், ஆக்கத்தையும், அழிவையும் ஏற்படுத்தும் அல்லாஹ்வையே அவர் சபிக்கின்றார் என்று அர்த்தம். அல்லாஹ்வை அவர் சபிப்பதன் மூலம் அல்லாஹ்வுக்கு எந்த தீங்கையும் அவர் ஏற்படுத்திட முடியாது என்றாலும், அல்லாஹ்வின் கோபத்திற்கு அவர் ஆளாகித் தமக்கு தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார். எனவே தான் அல்லாஹ் நானே காலமாக இருக்கிறேன், அதாவது கால மாற்றத்தை ஏற்படுத்துகின்றவன் என்கிறான். (1: ஃபத்ஹுல் பாரி)

''ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது. அவன் தான் எங்கள் பாதுகாவலன் என்று (நபியே) கூறுவீராக!'' (அல்குர்ஆன் 9:51)

அல்லாஹ்வின் விதியை மாற்றக் கூடிய ஆற்றல் கடல், குளம், ஏரி, அருவிகளில் குளிப்பது, மற்றும் ஓலை, தட்டுகளில் எழுதி கரைத்துக் குடிப்பது இவற்றில் இருப்பதாக நம்புவது ஷிர்க் (இணை வைத்தல்) ஆகும். குறிப்பிட்ட தினத்தில் முஸீபத்து இறங்கினாலோ, அவற்றின் பரிகாரமாக ஏதாவது செய்ய வேண்டும் என்றிருந்தாலோ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட வேறு யார் அதை அறிவித்துத் தர முடியும்? ஏனெனில் (இறை நம்பிக்கையாளர்கள்) உங்களிலிருந்து ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பப்படுவது அவருக்கு மிக்க வருத்தத்தை ஏற்படுத்தும். மேலும் அவர் உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர். இறைநம்பிக்கையளர்கள் மீது கருணையும் இரக்கமும் உடையவர் என்று அல்லாஹ் தனது நெறி நூலாகிய அல்குர்ஆனில் தவ்பா என்ற 9வது அத்தியாயத்தில் 128வது வசனத்தில் கூறுவதை சிந்திப்பீர்களாக!

அகில உலகத்திற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்டவர், நம்பிக்கையாளர்கள் மீது இரக்கமுடையவர், நம்பிக்கையாளர்கள் துன்பப்படுவதை சகிக்காதவர் இந்த நாளின் முஸீபத்தை பற்றி அறிவிக்காமல் சென்றுவிட்டார்களா?

சின்ன நகஸு(சு), பெரிய நகஸு(சு) என்றெல்லாம் கணித்து மக்களுக்குத் தொண்டு(?) செய்கிறோம் என்று கூறுகின்றவர்களும், பால்கிதாபு, மோர்கிதாபு என்று சொல்லி மக்களை மடமையிலேயே நீடித்திருக்க வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளவர்களும் கொஞ்சம் சிந்திப்பீர்களாக!
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள்: என்மீது சொல்லப்படும் பொய் (உங்களில்) ஒருவரின் மீது சொல்லப்படும் பொய்யைப் போன்ற தன்று, யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்!

சொல்லப்படும் பொய்யைப் போன்றதன்று, யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்! (அறிவிப்பாளர்: முகீரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரி: 1291)

ஒடுக்கத்துப் புதனுக்கு சொல்லபப்படுகின்ற காரணமே முதலில் சரியில்லை :

ஸஃபர் மாதத்தின் இறுதியில் குளித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குணமடைந்தது பூரண குணமல்லவே, அதற்கு இருவாரங்கள் கழித்து அவர்கள் மரணத்தைத் தழுவிக் கொண்டனரே! (இன்னாலில்லாஹிஸ) சரியான அறிவிப்பின் படி வியாழக்கிழமை அன்று குளித்து விட்டு, மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று மக்களுக்கு நீண்ட பிரசங்கம் (ஜும்ஆ) செய்தார்கள் என்று தானே உள்ளது (ஆதாரம்: அல்பிதாயா, வன்னி ஹாயா) இந்த அடிப்படையில் ஓடுக்கத்து வியாழன் என்றெல்லவா சொல்ல வேண்டும்?

அன்றைய அரபு மக்கள் ஷவ்வால் மாதத்தை பீடை மாதமாகக் கருதி இருந்தனர். அந்த நாளில் எந்த நல்ல காரியங்களையும் நடத்தாது இருந்தனர். மடமை எண்ணத்தை தகர்த்தெறியும் வகையில் அறிவுப் பேரொளி அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், நான் ஷவ்வாலில் தான் திருமண முடிக்கப்பட்டேன். ஷவ்வாலில் தான் என் இல்லறத்தைத் துவங்கினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு என்னை விட உகந்த மனைவியாக யார் இருந்தார்கள்? என்று கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம், அஹ்மத்)

.....நீங்கள் பீடை மாதம் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்ற ஷவ்வாலில் திருமணம் முடித்த நான் எவ்வளவு மகிழ்வோடு வாழ்ந்து இருக்கிறேன் என்று அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கேட்டது இன்று ஸஃபர் மாதத்தை பீடையாகக் கருதுவோருக்கு பொருந்தாதா? சிந்தியுங்கள்!

இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் இந்த ஒடுக்கத்து புதனில் புதைந்து இருக்கின்றன. இக்கேள்விகள் அனைத்தும் சாதாரணமானவை அல்ல; இறை நம்பிக்கையா? இறை நிராகரிப்பா (குஃப்ரா)? என்பதை எடை போடும் ஜீவாதார மான கேள்விகள்.

எனவே ஒடுக்கத்து புதனை ஓரங்கட்டுவோம்; அதன் நிழலில் கூட நிற்க மாட்டோம் என சபதம் ஏற்போம். அல்லாஹ் போதுமானவன்.
ஓரிறைக் கொள்கையை தகர்க்கும் ஒடுக்கத்து "புதன்"
ஓரிறைக் கொள்கையை தகர்க்கும் ஒடுக்கத்து "புதன்"

இஸ்லாமிய ஹிஜ்ரா நாள்காட்டியில் ஸஃபர் மாதத்தில் அன்றைய அரபு மக்கள் வணிக நோக்கத்திற்காக சிரியா போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வது வழக்...

மேலும் படிக்க »

உள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள் (வீடியோ)

Mohamed Farook Mohamed Farook Author
Title: உள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள் (வீடியோ)
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
உள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள்┇Sura Al Wakkiya ᴴᴰ┇ Emotional Recitation | vkalathurexpress

உள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள்┇Sura Al Wakkiya ᴴᴰ┇ Emotional Recitation | vkalathurexpress

உள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள் (வீடியோ)
உள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள் (வீடியோ)

உள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள்┇Sura Al Wakkiya ᴴᴰ┇ Emotional Recitation | vkalathurexpress

மேலும் படிக்க »

Mohamed Farook Mohamed Farook Author
Title: நீர் எந்த ஜமாத்து? - சிறப்பு பதிவு!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
இஸ்லாம் தான் அல்லாஹ்வினால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் . இஸ்லாத்தின் எந்த பிரிவும், பிளவும் இல்லை. இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி பல பிரிவ...
இஸ்லாம் தான் அல்லாஹ்வினால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் . இஸ்லாத்தின் எந்த பிரிவும், பிளவும் இல்லை. இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி பல பிரிவுகளாக பிளவுப்பட்டு இருக்கிறார்கள் முஸ்லிம்கள்!
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய ஒரு ஹதீஸின் கருத்து.. என்னுடைய சமுதாயம் 73 கூட்டமாக பிரியும். அதில் ஒன்றும் மட்டும்தான் சுவர்க்கம் செல்லும் கூட்டம்!

அது எந்த கூட்டம் என்பதை யார் அறிவார்..?
இன்று ஒரு குடும்பத்தில் பெற்றோர்கள் ஒரு ஜமாஅத், பிள்ளைகள் ஒரு ஜமாஅத். அரசியல் கட்சியைப் போன்று பாவித்துக் கொண்டு இருக்கிறார்கள். சண்டையும், சச்சரவுகளும் தான் நிலவுகிறது. 
அவர் இவரை பார்த்து ''நீங்கள் அல்லாஹ்வுக்கே ஷிர்க் செய்கிறீர்கள்'' என்றும், இவர் அவரை பார்த்து ''நீங்கள் அல்லாஹ்வுக்கே ஷிர்க் செய்கிறீர்கள்'' என்றும் கூறிக் கொண்டியிருக்கிறோம். இந்த அவலநிலை நம்மிடத்தில் உருவாகிவிட்டது!

தொப்பி என்பது இஸ்லாத்தின் அடையாள சின்னமாக ஆக்கிவிட்டார்கள்.
ஒருவர் தொப்பி இல்லாமல் பள்ளிக்குள் போகக் கூடாது. ஒருவர் தாடி இல்லாமல் பள்ளிக்குள் போகலாம். தொப்பிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அவர்கள், ஏன் தாடிக்கு கொடுப்பதில்லை? தொப்பியை வைத்து ஒரு பிரச்சனை!

மக்கா, மதீனா பள்ளிகளில் பார்த்தீர்கள் என்றால் அங்கே பெரும்பாலும் மக்கள்கள் தொப்பி இல்லாமல் தான் தொழுவார்கள். அங்கே எந்த பிரச்சனையும் இல்லை. அப்படி தொப்பி போட்டு தான் போனால் என்ன இவர்கள். பிடிவாதம்! வீம்பு! 

ஒருவர் வெளியூர் சென்றால். அவர் அந்த ஊரில் பள்ளிகள் எங்கே இருக்கு என்பதை அறியமாட்டார் (போகாது ஊர் என்று வைத்துக் கொள்வோம்) தொழுகை நேரம் வந்துவிட்டது, அவர் இன்ன நேர தொழுகையை அவர் தொழ வேண்டும். அவர் ஒரு ஆட்டோ நபரிடம் விசாரிக்கிறார். ''பள்ளிவாசல் எங்கே இருக்கிறது..?'' என்று.
 
அந்த ஆட்டோ டிரைவர் கேட்கிறார். ''நீங்கள் எந்த பள்ளிவாசலை கேட்கிறீர்கள்? சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலா? அல்லது தௌஹீத் பள்ளிவாசலா? (இது கதை அல்ல இப்படியெல்லாம் நடக்கிறது) இதை எதற்காக குறிப்பிடுகிறேன் என்றால், மாற்று மத சகோதரர்கள் இஸ்லாத்தை எப்படி விளங்கி வைத்திருப்பார்கள். அவர்களுக்கு நாம் எப்படி இஸ்லாத்தை பற்றி எடுத்து சொல்வது!

இதுப்போன்ற கேள்விகள் வரும்போது நாம் என்ன சொல்வது என்று நாமே குழம்பிவிடுவோம். ஆதங்கத்துடன் எழுதுகிறேன். ஒவ்வொரு ஜமாத்தாரும் நாங்கள்தான் நேரான வழியில் இருப்பதாக எண்ணிக் கொள்கிறார்கள். மற்றவர்களை இழிவாக எண்ணுகிறார்கள் என்பதை மன வேதனையுடன் குறிப்பிடுகிறேன்.

முஸ்லிம்குள்ளே நாம் ஒருவொர்கொருவர் அடித்துக் கொண்டு, சண்டையிட்டுக் கொண்டால் மாற்று மத மக்கள்கள் என்ன நினைப்பார்கள் என்பதை பற்றி கவலையில்லை. இஸ்லாத்தின் எதிரிகள் நம்மை அழிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டு கொண்டுயிருக்கிறார்கள், அதையும் பற்றியும் கவலையில்லை.

ஒரு ஜமாஅத் ஷிர்க் நோட்டிசு ஒட்டுகிறது. இன்னொரு ஜமாஅத் அதை கிழித்து விடுகிறது. ஒரு ஜமாஅத் அழைப்பு விடுகிறது ''ஷிர்க் மாநாட்டிற்கு எல்லோரும் வாருங்கள்'' என்று இன்னொரு ஜமாஅத் அழைக்கிறது. ''தர்கா எழுச்சி மாநாடு எல்லோரும் வாருங்கள்'' என்று. ஒரே தேதியில் இரு அழைப்பு!
இந்த இரு ஜமாஅத் இடையில் முஸ்லிம் மக்கள்கள் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக புரிகிறது! இதனால் ஏற்படும் பின்விளைவுகளை யாரும் சிந்திப்பதில்லை. நாம் முஸ்லிம் என்று சொல்ல விரும்புவதை விட, நாம் இந்த ஜமாஅத்! இந்த இயக்கம் என்று சொல்வதை தான் பார்க்கிறோம்.

வீண் விரயம் செய்யக் கூடாது என்று சொல்கிறார்கள், ஆனால், நல்ல வீண் விரயம் செய்கிறார்கள். சகோதரத்துவத்தை போற்றுவதை விட தங்களின் ஜமாத்தை அல்லது இயக்கதைதான் போற்றுகிறார்கள்! ஒற்றுமை விட ஜமாஅத் தான் முக்கியம்.

 
ஹதீஸ்களை சொல்கின்றோம் என்ற பெயரில் வேற்றுமை படுத்துவது இஸ்லாத்தின் வழிமுறையா? அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்று கொடுத்தது இந்த வழிமுறையிலா..? சிந்திக்க வேண்டாமா? அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்ல போகிறோம்?

அது ஷிர்க்! இது ஷிர்க் என்று சொல்லிக் கொண்டு போகும் ஒரு கூட்டம். மௌலத், கந்தூரி விழா, தர்கா, கொடி, ஊர்வலம், பித்-அத் இப்படி மக்களை வழி கெடுத்துக் கொண்டு போகிறது ஒரு கூட்டம். இனி வரும் நிறைய கூட்டம்!
வரும் காலம் பொற்காலம் அல்ல! பெரும் சோதனை காலம். குழப்பம் சூழ்ந்து கொள்ளும் காலம்! இதுவா? அல்லது அதுவா? என்று மக்கள்கள் குழம்பி நிற்கும் காலம்! ஒருவரையொருவர் புறம் பேசிக் கொண்டு திரியும் காலம். அதை பெரிய பாவமாக நினைக்காத காலம்!

ஒரு ஹதீஸின் கருத்து... விபச்சாரத்தை விட பெரிய பாவம் புறம் பேசுவது! அந்த புறம் இப்பொழுது ஹலால் போல பாவிக்கப்படுகிறது. உலகத்தில் சிறந்த மார்க்கம் இஸ்லாம் தான்! அந்த இஸ்லாத்தில் எந்த வழி சிறந்தது என்று இப்பொழுது பேச ஆரம்பித்து விட்டார்கள். அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்!

நாம் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? நாம் நம் ஈமானை பாதுகாத்து கொள்ள வேண்டும். குழப்பத்தை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேட வேண்டும்! அல்லாஹ் விரும்பும் முஸ்லிமாக நம்மை வாழும் படி ஆக்க வேண்டும். அல்லாஹ் அருள் செய்ய வேண்டும்! 
 
எந்த ஜமாஅத் இருந்தால் எல்லோரும் நம் சகோதரர்கள் தான் . யாரையும் பிரித்து பார்க்க கூடாது. எல்லோருக்கும் ஸலாம் சொல்ல வேண்டும். யாரையும் புறகணிக்க கூடாது! புறம் பேசக் கூடாது. எப்பொழுதும் அல்லாஹ்விடம் துஆச் செய்ய வேண்டும். நமக்கும். மற்றவர்களுக்கும் துஆ கேட்க வேண்டும். அல்லாஹ் விரும்பும் முஸ்லிமாக வாழ வேண்டும். முஸ்லிமாக மரணிக்க வேண்டும்.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
நீர் எந்த ஜமாத்து? - சிறப்பு பதிவு!
நீர் எந்த ஜமாத்து? - சிறப்பு பதிவு!

இஸ்லாம் தான் அல்லாஹ்வினால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் . இஸ்லாத்தின் எந்த பிரிவும், பிளவும் இல்லை. இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி பல பிரிவ...

மேலும் படிக்க »

Mohamed Farook Mohamed Farook Author
Title: அந்த ஏழுபேரில் நாமும் ஒருவராக...
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
கீழ்காணும் ''ஹதீஸை'' நாம் ஒவ்வொருவரும் மனதில் இருத்திக்கொள்வோம். இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த ஏழு பேரில் ஒருவராக...
கீழ்காணும் ''ஹதீஸை'' நாம் ஒவ்வொருவரும் மனதில் இருத்திக்கொள்வோம். இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த ஏழு பேரில் ஒருவராகவாவது நாம் இருக்க வேண்டும் என்று முயற்சி எடுப்போம், ''அர்ஷின் நிழல்'' நமக்கும் வேண்டுமே. 

மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்வோம்; அவர்களுக்கும் 'அந்த அர்ஷின் நிழல்' கிடைக்க வேண்டுமல்லவா?

இதோ அந்த ஏழுபேர்;
அபூஹுரைராரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ''ஏழுபேர், இவர்களுக்கு தன் நிழலைத்தவிர வேறு நிழல் இல்லாத அந்த (மறுமை நாளில்) தன் அர்ஷின் நிழலில் அல்லாஹ் நிழல் தருவான். 

(1) நீதமான அரசன்.

(2) அல்லாஹ்வை வணங்குவதில் ஈடுபடும் வாலிபர்.

(3) பள்ளிவாசல்களில் தன் உள்ளத்தைப் பறி கொடுத்த மனிதர்.

(4) அல்லாஹ்வுக்காக பிரியம் கொண்டு, அவனுக்காகவே ஒன்று சேர்ந்து, அவனுக்காகவே பிரிந்தும் நிற்கின்ற இருவர்.

(5) அழகும், குடும்பப் பெருமையும் நிறைந்தப் பெண் விபச்சாரத்திற்கு அழைத்தும், ''நான் அல்லாஹ்வைப் பயப்படுகிறேன்'' என்று கூறும் நபர்.

(6) தன் வலது கை செய்யும் செலவை இடது கைக்குத் தெரியாமல் அதை மறைத்துக் கொண்டு தர்மம் செய்கின்ற ஒருவர்.

(7) கலப்பற்ற நிலையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து, இதனால் கண்கள் கண்ணீரைச்சிந்தும் ஒருவர்'' என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அந்த ஏழுபேரில் நாமும் ஒருவராக...
அந்த ஏழுபேரில் நாமும் ஒருவராக...

கீழ்காணும் ''ஹதீஸை'' நாம் ஒவ்வொருவரும் மனதில் இருத்திக்கொள்வோம். இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த ஏழு பேரில் ஒருவராக...

மேலும் படிக்க »

பெண்ணின் வளர்ச்சியைக் கண்டு உமர் (ரலி) என்ன கூறினார் தெரியுமா..?

Mohamed Farook Mohamed Farook Author
Title: பெண்ணின் வளர்ச்சியைக் கண்டு உமர் (ரலி) என்ன கூறினார் தெரியுமா..?
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
ஒரு பெண்.... அதுவும் முஸ்லிம் பெண்... பன்னாட்டளவில் வணிகம் செய்யலாமா? ஹின்த் பின் உத்பா (ரலி) உமர் அவர்களிடம் வந்து “நான் வணிகம் செய்ய ...
ஒரு பெண்.... அதுவும் முஸ்லிம் பெண்... பன்னாட்டளவில் வணிகம் செய்யலாமா? ஹின்த் பின் உத்பா (ரலி) உமர் அவர்களிடம் வந்து “நான் வணிகம் செய்ய விரும்புகிறேன். பண வசதி இல்லை. அரசுக் கருவூலத்திலிருந்து எனக்குக் கொஞ்சம் கடன் தந்து உதவுங்கள்” என்றார். நம்ம ஊர் ஆசாமிகளாய் இருந்தால் என்ன சொல்லியிருப்பார்கள்? குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பைத்தான் இஸ்லாம் பெண்கள் மீது சுமத்தியுள்ளது...போய் வீட்டில் கணவனுக்குப் பணிவிடை செய்... என்று அதட்டி அனுப்பியிருப்பார்கள்.

ஆனால் உமர் அவர்கள் அந்தப் பெண்ணுக்கு அரசுக் கருவூலத்திலிருந்து நான்காயிரம் திர்ஹம் கடனாகத் தருகிறார். கடனுதவி பெற்ற பெண் ‘வணிகம் செய்ய உள்ளூர் மதீனா மார்க்கெட்டே போதும்.... ஒரு பெட்டிக் கடை வைத்துப் பிழைப்பை ஓட்டலாம்’ என்று நினைத்தாரா? ஊஹூம்..... சிரியா செல்கிறார்... அதாவது பன்னாட்டு வணிகம்... வணிகத்தில் ஈடுபடுகிறார்... பெரும் லாபம் ஈட்டுகிறார். வெற்றிகரமான பெண் தொழில் அதிபராக மதீனா திரும்புகிறார்.

அந்தப் பெண்ணின் வளர்ச்சியைக் கண்டு உமர் மனம் மகிழ்ந்து என்ன கூறினார் தெரியுமா? “எனக்கு வசதி இருந்திருந்தால் உங்களுக்கு அளித்த கடன் தொகையை உங்களுக்கே நன்கொடையாக அளித்திருப்பேன். ஆனால் அரசுப் பொதுக் கருவூலத்திலிருந்து வழங்கப்பட்ட தொகை. ஆகவே கடனாகத்தான் தர முடிந்தது” என்று கூறி அந்தப் பெண்ணை வரவேற்றார்.

அது மட்டுமல்ல உடனடியாக உமர்(ரலி) அவர்கள் ஓர் அறிவிப்பையும் வெளியிட்டார். “அரசிடமிருந்து கடன் உதவி பெற்று இதுபோல் வணிகம் செய்ய யார் விரும்பினாலும் அவர் என்னிடம் வரட்டும். ”“யார் விரும்பினாலும்” என்பதில் பெண்களும் உட்படுவர். இஸ்லாம் வானளாவிய வாழ்வியல். - -சிராஜுல்ஹஸன்
பெண்ணின் வளர்ச்சியைக் கண்டு உமர் (ரலி) என்ன கூறினார் தெரியுமா..?
பெண்ணின் வளர்ச்சியைக் கண்டு உமர் (ரலி) என்ன கூறினார் தெரியுமா..?

ஒரு பெண்.... அதுவும் முஸ்லிம் பெண்... பன்னாட்டளவில் வணிகம் செய்யலாமா? ஹின்த் பின் உத்பா (ரலி) உமர் அவர்களிடம் வந்து “நான் வணிகம் செய்ய ...

மேலும் படிக்க »

vkrnajur vkrnajur Author
Title: சுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்! என்ன தீர்வு!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
நேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...
நேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வேன். இதை செய்யவில்லை என்றால், ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும். எனக்கு விரைவில் திருமணம் ஆக இருக்கிறது. திருமணமானவுடன் மனைவியை ஊரில் விட்டு விட்டு அரபு நாடுகளுக்கு வரலாமா?

தெளிவு : “மனிதன் நன்மையைக் கோருவது போலவே தீமையையும் கோருகிறான். (ஏனெனில்) மனிதன் அவசரக்காரனாக இருக்கிறான்”. என அல்லாஹ்(ஜல்) பரிசுத்த நெறி நூலின் 17:11 வசனத்தில் தெரிவிக்கிறான். ஹராமான செயல்களில் ஈடுபடும்படி ஆகிவிடும் என்பதற்காக, தங்கள் அவசரப்பட்டு விட்டீர்கள் எனத் தெரிகிறது.

“இதைச் செய்ய்வில்லையென்றால், ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்” என தாங்கள் கூறுவதிலிருந்து தங்களின் (Will – Power) மன உறுதியில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனத்தெரிகிறது.
ஹராமானதில் ஈடுபட்டுவிடக்கூடாது என்பதற்காக, தங்கள் மேற்கொண்ட வழி மட்டும் ஹலாலானதா என ஒரு விநாடி சிந்தித்துப் பாருங்கள். பொருளீட்டுவதற்காக, வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டவன் அது பாவனம் என்பதை உணர்ந்த பின், வீடுகளில் கொள்ளையடிக்க முயல்வானா? உழைத்து பொருளீட்டவே முயல்வான். அது போல சுய இன்பம் தேவைப்பட்ட உடனே, திருமணம் செய்திருக்கலாமே!”உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவருக்கு திருமணம் செய்து வையுங்கள்” என்பது அல்லாஹ்வின் கட்டளை. அல்குர்ஆன் 24:32

“திருமணம் செய்யாதவர்கள் ஒழுக்கம் பேணட்டும்”. அல்குர்ஆன் 24:33 என்று அல்லாஹ் கட்டளையிட்டிருக்கும்போது, தாங்கள் ஒழுக்கத்தைப் பேணாமல் இருந்து விட்டீர்கள்.
அது மட்டுமின்றி, ஹராமானதைத் தடுக்க ஹலாலானதை தேடிக் கொண்டதைப் போலல்லவா நியாயம் கற்பிக்கிறீர்கள். “மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள்” எனும் 10:44 ஆம் வசனம் நமக்கு படிப்பினைத் தரவேண்டும்.

“எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும், அதனை அவர் கண்டு கொள்வார். எவன் ஓர் அணுவளவு பாவம் செய்திருந்தாலும், அதனையும் அவன் (மறுமையில்) கண்டு கொள்வான்”. அல்குர்ஆன் 99:7,8
இந்த இறை வசனங்களின்படி, சுய இன்பம் நன்மையான காரியமாக கணக்கெடுக்கப்படுமா அல்லது பாவமான காரியமாக கணக்கிடப்படுமா? என வினவினால், சாதாரண அறிவுள்ளவன் கூட அதை பாவமான காரியம் என கலபமாகக் கூறிவிடுவான். அமல்களை பதிவு செய்து கொண்டிருக்கும் வானவர்கள் சுய இன்பம் செய்வதை நன்மையில் பதிவாரா? பாவமான பதிவார் என சிந்தித்துப் பாருங்கள்.

காமத்தை மனைவியின் துணையோடு மட்டுமே தணித்துக் கொள்ள வேண்டும் என்றும், திருமணம் செய்ய வசதியற்றவர்கள் நோன்பு நோற்கட்டும் என்றும் இஸ்லாம் அறிவுறுத்துகிறது தாங்கள் விரைவில் மணம் முடிக்க இருக்கிறீர்கள்.

“அல்லாஹ் உங்களுக்காக உங்களிலிருந்தே மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான்ஸ..” அல்குர்ஆன் 16:72. என்ற இறைவசனத்தில் மனைவியரை அல்லாஹ் உங்களுக்காகத் தந்திருப்பதாகக் கூறும்போது, அந்த மனைவியை விட்டுவிட்டு வெளிநாடு செல்லும்போது, பிரிந்திருக்கும் கணவனும் ஒழுக்கக்கேட்டை அடையலாம். அப்பிரிவால் மனைவியும் வழி தவறலாம். எனவே ஒருவருக்கொருவர் தத்தமது ஒழுக்கம் மற்றும் நற்பண்புகளின் அடிப்படையில், பரஸ்பரம் ஒப்புக்கொள்ள முடியுமேயானால், பிரிவு பாதிப்பை ஏற்படுத்தாது. அப்படிப்பட்ட சூழ்நிலை இல்லாத இடங்களில், வரம்பு மீறல்கள் நடந்து கொண்டிருப்பதை கேள்விப்பட்டுக் கொண்டுதானிருக்கிறோம். எனவே, பிரிவு கணவன்-மனைவி இருவரில் பரிபூரண சம்மதத்துடுனே அமைய வேண்டும்.

நாங்கள் தேடிக்கொண்ட மாற்று வழி ஹராமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.தொழாதவர்கள் சுய இன்பம் செய்தால், அவர்களுக்கு இறையச்சம் இல்லை என்று கூறிவிடலாம். ஆனால் தாங்கள் தொழகிறீர்கள். தங்களது தொழுகையைக் கொண்டு தங்களுக்கு ஒரு பயனும் ஏற்படவில்ல என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்தியிருப்பதைப் பாருங்கள். சிறந்த தொழுகைக்கான அளவு கோலாக அல்லா1் வர்ணிப்பதைப் பாருங்கள்.

“தொழுகை மானக்கேடானவற்றையும், பாவத்தையும் விட்டும் (மனிதர்களைத் தடுக்கும்)”என்ற 29:45 இறை வசனத்திற்கு பயந்து, “சுய இன்பம்” எனும் மானக் கேடான ஹராமான வழியை உடனே விட்டுவிடுங்கள்.
சுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்! என்ன தீர்வு!
சுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்! என்ன தீர்வு!

நேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...

மேலும் படிக்க »

சொர்க்கம்! முஸ்லிம்களுக்கு மட்டுமா? - சிறப்பு பதிவு!

Mohamed Farook Mohamed Farook Author
Title: சொர்க்கம்! முஸ்லிம்களுக்கு மட்டுமா? - சிறப்பு பதிவு!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
கேள்விக்குறியுடன் முடிந்த இவ்வாக்கியத்தை பார்த்ததும், சிலர் முகத்தில் ஆச்சரியக்குறி! பலர் முகத்தில் கோபத்தின் அறிகுறி! ஆனால் உண்மையில் - ...
கேள்விக்குறியுடன் முடிந்த இவ்வாக்கியத்தை பார்த்ததும், சிலர் முகத்தில் ஆச்சரியக்குறி! பலர் முகத்தில் கோபத்தின் அறிகுறி! ஆனால் உண்மையில் - கேள்விக்குறியுடன் முடிந்த அவ்வாக்கியமே உண்மை.

பார்த்தீர்களா... உலகத்தை படைத்து அனைத்து மக்களையும் இரட்சிக்கும் கடவுள் இப்படி பாரபட்சமாக நீதி செலுத்தலாமா.? - என போர்க்கொடி தூக்கும் சக மனித நல விரும்பிகள் அதற்கு முன்பாக இஸ்லாம் ஏன் அவ்வாறு கூறுகிறது என்பதை அறிய நடுநிலை சிந்தனையை மேற்கொள்ளவேண்டும் என அன்புடன் அழைக்கின்றேன்.

இந்நிலையில் யாராக இருந்தாலும் ஒரு விசயத்தில் உடன் பட வேண்டும். ஒன்று, இஸ்லாத்தின் அடிப்படையில் இக்கோட்பாட்டை விளங்குவதற்கு முன் வர வேண்டும், அவ்விளக்கங்களில் உடன்பாடு இல்லையென்றால் குறைந்தபட்சம் சமுக நிலை ஒப்பிட்டு அடிப்படையிலாவது அதை ஏற்க முன் வர வேண்டும்.

முதலில் சமுக நிலை ஒப்பிடு - புரிதலுக்காக...
ஒரு தேர்ந்த பள்ளியில் மாணவர்கள் சேர்வதாக இருந்தால் முதலில் அப்பள்ளியின் சட்டத்திட்டங்களுக்கு உடன்பட்ட பிறகே அப்பள்ளியில் சேர்க்கப்படுவர்.மாறாக சமுக அந்தஸ்து பெற்றவராக இருப்பினும், பொருள் வளம் நிரம்ப பெற்றவராக இருப்பினும், மக்கள் மத்தியில் நற்பெயர் கொண்டவராக இருந்தாலும்-மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காக அப்பள்ளியில் அவரது சேர்க்கை இருக்காது.

வேண்டுமானால் அச்சேர்க்கைக்கான கூடுதல் காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். இன்னும் சொல்லப்போனால் மேற்குறிப்பிட்ட பண்புகள் பெற்றிருப்பினும் அப்பள்ளியின் சட்டத்திட்டங்களுக்கு உடன்படவில்லையென்றால் அப்பள்ளியில் சேர்க்கவே படமாட்டார் ஏனெனில் அப்பள்ளியின் செயல் திட்டங்கள் யாவருக்கும் பொதுவாக முன்னரே வகுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எந்த ஒரு மாணவனும், ஒன்று அப்பள்ளியின் வரையறைக்கு உட்பட்டு அதில் சேரலாம் அல்லது தன் சுய விருப்பத்தின் பேரில் அப்பள்ளியில் சேராமலும் இருக்கலாம்.சேர்ந்த மாணவர்களை மட்டுமே அப்பள்ளியின் நிர்வாகம் கட்டுப்படுத்தும். அஃதில்லாத ஏனைய மக்களை அப்பள்ளி கட்டும் படுத்தாது தம் மாணவர்கள் என்றும் சொல்லாது,அப்படி ஒரு நிலையை அத்தகையோரும் எதிர்ப்பார்க்கவும் மாட்டார்கள்.

மேலும் கல்விப்பயிலும் தம் மாணவர்களை மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கும்.அதன் விளைவால் அவர் பெற்ற வெற்றிக்காக அவருக்கும் பாராட்டும்,வெகுமதியும் அப்பள்ளி வழங்கும். மாறாக அப்பள்ளியின் சட்டடத்திட்டங்களை பேணாத, படிக்கவும் செய்யாத ஏனையோர் பாராட்டையோ, வெகுமதியையோ எதிர்ப்பார்க்கவும் கூடாது, எதிர்ப்பார்ப்பதில் எத்தகையே நியாயமும் கிடையாது (இங்கு ஒரு +)எனினும் அப்பள்ளியின் அடிப்படை சட்டத்திட்டங்களை உணர்ந்து கல்வி பயில விரும்பும் எவராக இருப்பினும் அவரின் செயல் திறன் அடிப்படையில் அவருக்கு வெகுமதியோ பாராட்டோ வழங்கப்படும். (இங்கு ஒரு -)
இந்த சம கால நிகழ்வு உதாரணத்தை ஒப்பிடாக கொண்டு (அளவு கோலாக அல்ல)மேற்காணும் தலைப்பின் கீழ் செல்லுங்கள்.,

  இஸ்லாத்தின் பார்வையில்... 
முஸ்லிம்-என்ற பதத்தை அறிந்துக் கொள்வதற்கு முன் இஸ்லாம் மீதான காழ்ப்புணர்ச்சியின் காரணமாக குர்-ஆன் மீது வைக்கப்படும் முதல் மற்றும் பொதுவான குற்றச்சாட்டான "காஃபிர்" என்ற பதம் குறித்து அறிவோம்.
காஃபிர் யார் ..?
காஃபிர்- இந்த ஒரு வார்த்தை மதம் சார்ந்த /சாரா மக்களால் அருவறுக்கத்தக்க வகையில் பார்க்கப்படுகிறது. இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகள் குறித்து குர்-ஆன் கூறும் போது ஓரிறைவனை நிராகரிப்போரை, அவனுக்கு இணை கற்பிப்போரை அவன் கூறும் வழிமுறைகளை பின்பற்றாதவர்களை, சட்டத்திட்டங்களை ஏற்காதோரை காஃபிர்கள் என்கிறது.
அதன் விளைவாக அவர்களுக்கு "சொர்க்கமும்" கிடைக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் பொதுவாக ஒருவருக்கு கிடைக்கப்பெறும் பரிசோ,கூலியோ அவரின் நன்னடத்தை மற்றும் சொல்லிற்கிணங்க மேற்கொண்ட செயல்களுக்கே கொடுக்கப்படும், எனும்போது இறைவனின் கட்டளைக்கிணங்க செயல் பாடாத காஃபிர்களுக்கு சொர்க்கம் மட்டும் கொடுக்க வேண்டும் என கேட்பது என்ன நியாயம்?

இங்கு ஒரு விசயம்., காஃபிர் என்ற வார்த்தைக்கு நேரடி அர்த்தம் இறை நிராகரிப்பாளர் என்பதே ஆகும். குர்-ஆனில் சில வார்த்தைகள் ஏனைய மொழிபெயர்ப்புகளிலும் அதன் மூல(அரபி)மொழியிலேயே பயன்படுத்தப்படுகின்றன. ஈமான்(இறையச்சம்), தக்வா(பயபக்தி), தவ்பா(பாவ மன்னிப்பு), ஸலாம்(சாந்தி), முனாஃபிக் (நயவஞ்சகன்) போன்றவைகள் அவற்றில் சில,

அதன் அடிப்படையிலே காஃபிர் என்ற வார்த்தையும் குர்-ஆனிய மூலமொழியிலேயே உபயோகப்படுத்தப்படுகிறது. ஒருவேளை அச்சொல்லின் அவசியம் உணர்ந்தோ, விளங்குவதற்கு எளிதாக இருப்பதற்கோ அவ்வாறு பயன்ப்படுத்தப்பட்டிருக்கலாம்.
ஏனெனில் நிய்யத்,அமல்,பர்ளூ,சுன்னத், போன்ற வார்த்தைக்கு நிகரான தமிழ் சொற்கள் இருப்பினும் பெரும்பாலும் முஸ்லிம்கள் அதனை நடைமுறையில் அரபி(மொழி)யிலேயே பயன்படுத்துவதிலிருந்து மேற்கூறிய செயல்முறை காரணமே சரியானது என்பது தெளிவாகிறது.
இதையும் மீறி காஃபிர் என்ற பதம் கேவலப்படுத்துவதற்கோ, மததுவேசத்திற்கோ பயன்படுத்தபடுவதாக யாரும் கூறுவாரானால் அதனை தக்க சான்றுகளோடு நிறுவட்டும்.
 
யார் முஸ்லிம் ?
தாடி வைப்பதோ தொப்பி அணிவதோ, முஸ்லிம் குடும்பத்தில் பிறப்பதோ ஒருவன் முஃமீன் என்பதற்கு போதுமானதன்று. இவை முஸ்லிம் என்பதற்கான சமுக குறியீடுகள் தான். மாறாக யாராக இருப்பினும்,, எக்குடும்பத்தில் பிறப்பினும் "ஒரே இறைவனை ஏற்று அவனது இறுதித் தூதரை உண்மைப்படுத்தி இறைவன் கூறிய நேரிய பாதையில் தமது செயல்களை யார் தம் வாழ்வில் அமைத்து கொள்கிறார்களோ அவர்கள் தான் -"முமீன்கள்".
இறை பார்வையில் அவன் சொல்லிற்கிணங்க செயல்ப்பட்ட தூயவர்கள். அதற்காகவே அவர்களுக்கு சொர்க்கம் தருகிறான். இதில் எங்கிருந்து வந்தது பாரபட்ச நிலை? போர்க்கொடி தூக்குவோர்கள் விளக்குவார்களா?

மேலும் சிறு விளக்கம்...
குர்-ஆன் மற்றும் அல்லாஹ் (என்ற அரேபிய சொல்லுக்கு கடவுள் என்றுதான் அர்த்தம்) இவ்வுலக அனைத்து மக்களுக்கும் பொதுவானவை தவிர முஸ்லிம் என்ற சமுகத்திற்கு மட்டும் உண்டானவை அல்ல.
மாறாக கடவுள் தேர்ந்தெடுத்தது (குர்-ஆன் அடிப்படையில், நபிகாளாரின் வழிகாட்டுதலுகிணங்க வாழ்வை அமைத்துக்கொண்ட)"முஸ்லிம்களை" -அது தான் உண்மையும் கூட! (முஸ்லிம் -பெயர் காரணம் முதல் பத்தியில் மிக தெளிவாக)

ஏனெனில் குர்-ஆன் மொத்த மனித சமுதாயத்திற்கும் பொதுவானது என்பதை விளகக தன்னை இவ்வாறே அறிமுகப்படுத்துகிறது.
. . . இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை" என்றுங் கூறுவீராக.-6:90 மேலும் பார்க்க (42:7, 81:27)
அதைப்போலவே அல்லாஹ் என்ற (அரேபிய கடவுள் அல்ல) உலகத்தின் ஒரே கடவுள் தன்னை குர்-ஆனில் அனைத்து மக்களின் இரட்சகன் என்ற தன்னை பிரகடனப்படுத்துகிறான்.

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகளாம். -2:21
ஏனைய வசனங்களிலும் இறைக்குறித்து மேலும் பார்க்க (11:123, 18:28, 39:3,11,14, 53:62, 94:8)
அல்லாஹ் விடுத்து அவனுக்கு இணைக்கற்பிக்கும் வகையிலோ,அவனது தன்மைக்கு பொருந்தாத நிலை தவிர்த்து ஏனைய பெயர்களால் அவனை அழைக்கலாம் எனவும் குர்-ஆன் விளிக்கிறது

"நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள்; எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன" என்று (நபியே!) கூறுவீராக இன்னும், உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர்; மிக மெதுவாகவும் ஓதாதீர். மேலும் இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தியமான வழியைக் கடைப்பிடிப்பீராக -17:110 (மேலும் பார்க்க (7:180, 20:8, 40:3, 57:3, 59:22-24)

மக்களை மாய்க்கும் போலி மதச்சடங்குகள் அழித்து மனித நேயம் காக்க விரும்புவதாக கூறி இஸ்லாத்தையும் அத்தகையை பட்டியலில் சேர்க்காதீர்கள். புரோகித விலங்கொடைத்து மனித இறைத்தொடர்புக்கு இடையில் எதனையும், எவரையும் எற்படுத்தாதே எனக்கூறிய மனித நேய மார்க்கம்!

படைப்பாளன் அனைத்து படைப்புகளையும் சமமாக பார்க்கும் பொழுது படைப்பினம் மட்டும் படைத்தவன் குறித்து பாகுபாடு பார்ப்பதேன்....? (பெரும்பான்மை மக்களால் மிக தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட மிக அழகான வாசகம்) படைத்தவன் அல்லாது படைப்பினங்களை வணங்குவோரும்,படைப்பினங்களை தாண்டி படைத்தவன் அல்ல என சொல்வோரும் படத்தவன் சொல்வதை மட்டும் கேட்க மறுப்பதேன்?
அல்லாஹ் மிக அறிந்தவன்
சொர்க்கம்! முஸ்லிம்களுக்கு மட்டுமா? - சிறப்பு பதிவு!
சொர்க்கம்! முஸ்லிம்களுக்கு மட்டுமா? - சிறப்பு பதிவு!

கேள்விக்குறியுடன் முடிந்த இவ்வாக்கியத்தை பார்த்ததும், சிலர் முகத்தில் ஆச்சரியக்குறி! பலர் முகத்தில் கோபத்தின் அறிகுறி! ஆனால் உண்மையில் - ...

மேலும் படிக்க »

நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பார்ப்பதின் இஸ்லாமிய வரையறை!பெண்ணுக்கு ஆணைப்பார்ப்பதற்கு அனுமதி வழங்குகின்றது!

vkrnajur vkrnajur Author
Title: நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பார்ப்பதின் இஸ்லாமிய வரையறை!பெண்ணுக்கு ஆணைப்பார்ப்பதற்கு அனுமதி வழங்குகின்றது!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
ஓவ்வொரு மனிதனுக்கும் தனது துணை இப்படி, இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கள் இருக்கலாம். இவ்வெதிர்பார்ப்புக்கள் திருமணத்...
ஓவ்வொரு மனிதனுக்கும் தனது துணை இப்படி, இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கள் இருக்கலாம். இவ்வெதிர்பார்ப்புக்கள் திருமணத்திற்கு முன்னர் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் திருமண வாழ்க்கை ஜொலிக்கும். இன்றைய சமூக சூழலில் பெண்ணுக்குறிய இந்த உரிமை கொடுக்கப்படும் வீதம் மிகவும் குறைந்துள்ளது.

சில வேளை பெற்றோர் மாப்பிள்ளையை காட்டாமலே ”நான் கீறிய கோட்டை எனது பிள்ளை தாண்டாது” என இருமாப்பாக சொல்லிக் கொண்டு நேரடியாக திருமண ஒப்பந்தங்கள் நடை பெறுகின்றமை பெண்ணுக்கு இழைக்கும் பெரும் கொடுமை என்று சொல்லலாம்.
அற்ப பணத்திற்காக தனது பிள்ளையை UK மற்றும் America மாப்பிள்ளைக்கு விற்றுவிடக் கூடிய பெற்றோர் பெண்ணுக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கா? இல்லையா? என்பதைக் கேட்கத் தவறிவிடுகின்றனர். இதனால் சமூக அமைப்பில் பல்வேறு சிக்கல்கள் குறிப்பாக தலாக் மற்றும் கணவன் இருக்க இன்னொருவனோடு ஓடிப்போகும் சமபவங்கள் இடம் பெருவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது.
”யார் ஒருவர் பெண்ணை நிச்சயிக்க முற்படுகிறாரோ அவர் அவளின் சில உறுப்புக்களை பார்க்க முடியுமானால் பார்த்துக் கொள்ளட்டும்” (ஹதீஸின் சுருக்கம்) (அபூதாவுத் 2082, அஹ்மத் 3:360)]

திருமணத்தை ஆகுமாக்கிய மார்க்கம் இஸ்லாம்
இறைவனால் தன்னை வணங்குவதற்காகவே படைக்கப்பட்ட இனங்களுல் மனித இனம் சிரேஷ்டமானது. இவ்வினத்தைப்படைத்த இறைவன் இவ்வுலகில் வாழ்வதற்கு தேவையான எல்லா வஸ்துக்களையும் வசப்படுத்தி கொடுத்து மனிதனது விருப்பு வெறுப்புக்களையும் தட்டிக்கழிக்காது எண்ணிளடங்கா அருட்கொடைகளையும் வாய்ப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளான். மனிதனை இரு இனங்களாக ஒரு ஆண் மற்றும் பெண்ணிலிருந்து படைத்த அந்த இறைவன் அந்த இரு இனமும் சங்கமிக்கும் திருமணம் எனும் வரப்பிரசாதத்தையும் ஆகுமாக்கியுள்ளான்.
”உங்களில் வாழ்கை துணையில்லாதவருக்கும், உங்களுடைய ஆண் அடிமைகளுக்கும், இன்னும் நல்லொழுக்கமுல்ல அடிமைப் பெண்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன்னுடைய பேரருளைக் கொண்டு அவர்களை செல்வந்தர்களாக்கி வைப்பான். மேலும் அல்லாஹ் மிக்க விசாலமானவன் நன்கறிந்தவவன்” (சூரதுன் நூர் 32) என அல்லாஹ் தன் திருமறையயில் திருமணத்தை ஆகமாக்குவதை காணலாம்.
அவ்வாறே அவனால் அனுப்பப்பட்ட நபிமார்களும் திருமணம் முடித்து குடும்பம் நடத்தியவர்களாகவே அதிகமானகவர்களை நம்மால் கண்டுக் கொள்ள முடிகிறது.
குறிப்பாக இறுதித் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூட இந்த வழிமுறையை எடுத்துக்கொண்டதோடு முழு இளைஞர் சமுதாயத்தையும் பார்த்து ”வாலிபர்களே உங்களில் யார் (உடல் மற்றும் ஏனைய) சக்தி பெறுவாரோ அவர் திருமணம் முடித்துக் கொள்ளட்டும். நிச்சயமாக அது (திருமணம் கற்பைக் காத்துக் கொள்வதற்கும் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுவதற்கும் (போதுமானது)…..” (புகாரி 5065, முஸ்லிம் 1400) என தெளிவாகவே திருமணம் முடித்துக் கொள்ளும்படியும் அதனால் ஏற்படக்கூடிய பிரதிபலன்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்கள்.
இவ்வாறு இஸ்லாமிய சட்டமூலத்தின் அடிப்படைகளே திருமணத்தைப் பற்றி தெளிவுபடுத்திக் கொண்டிருக்க இன்று எத்தனையோ மதங்கள் தங்களது மதப்பெரியார்களுக்கு இந்த மனித உரிமையை வழங்காது இருப்பது வேடிக்கையானது. இதன் விளைவாக மதகுருமார்களினதும் பாதிரிமார்களினதும் சில்மிசங்கள் கற்பழிப்பு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் என்ற தலைப்புக்களில் நாலாந்தம் ஊடகங்களில் அரகேற்றப்படுகின்றன.
இவற்றை விளக்குவது இக்கட்டுரையின் நோக்கம் கிடையாது, என்றாலும் இஸ்லாம் வழங்கியிருக்கக்கூடிய இவ்வடிப்படை உரிமையை சில முஸ்லிம்களே புரிந்து கொள்ளாது இருப்பதை கண்டுகொள்லாமல் இருந்துவிட முடியாது. எனவே வாழ்க்கையில் ”சாதித்து விட்டுத்தான் திருமணம்” என சாட்டுப்போக்கு சொல்லுபவர்கள் திருமணம் முடித்து வாழ்ந்து காட்டுவதும் ஒரு சாதனை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கடமையாக்கப்பட்ட திருமணத்தின் மூலம் ஒரு பெண்ணை அடைந்துக் கொள்ள முயலும் ஒரு ஆணுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பார்ப்பதன் சட்டங்களை நோக்குவோம்.
பொதுவாகவே பெரும்பான்மையான உலமாக்கள் பெண்ணைப் பார்ப்பதற்கு அனுமதி வழங்குகின்றனர். பின்வரும் சான்றுகளைக் கொண்டு இக்கருத்தை உறுதிசெய்ய முடிகிறது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விழித்து அல்லாஹ் கூறுகின்றான்,
”பின்னர் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களைத்தவிர வேறு பெண்கள் உமக்கு ஆகுமாக்கப்படவில்லை. இன்னும் அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் அவர்களை (உம்முடைய மனைவியராக) இவர்களைக் கொண்டு நீர் மாற்றிக் கொள்வதும உமக்கு (அனுமதி) இல்லை. அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் கண்காணிக்கின்றவனாக இருக்கின்றான்”. (சூரதுல் அஹ்ஸாப் 52)
இங்கு அல்லாஹ் பெண்களின் அழகு கவரப்படுவதாக கூறுகின்றான். உண்மையில் அழகு பார்ப்பதன் மூலம்தான் புலப்படும் என்பது வெள்ளிடைமலை. எனவே நிச்சயிக்கப்பட்ட பெண்ணை பார்க்க முடியும் என விளங்க முடிகின்றது.

இவ்வாறே அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் ஒரு செய்தியில்…
”நான் நபியவர்களிடம் இருந்த போது அவரிடம் ஒரு மனிதர் வந்து அவர் அன்ஸாரியப் பெண்ணை திருமணம் முடித்தாக (நிச்சயிக்கப்பட்டதாக) கூறினார் அவரிடம் நபியவர்கள் ”நீர் அவளைப் பார்த்தாயா?” ஏன வினவவே, அவரோ இல்லை என்றார். சென்று அவளைப் பார்ப்பீராக நிச்சயமாக அன்ஸாரிகளின் கண்களில் ஏதோ உண்டு என நபியவர்கள கூறினார்கள்”. (முஸ்லிம் 1424, நஸாயி 6:69) அவ்வாரே ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதை நான் கேட்டேன்
”யார் ஒருவர் பெண்ணை நிச்சயிக்க முற்படுகிறாரோ அவர் அவளின் சில உறுப்புக்களை பார்க்க முடியுமானால் பார்த்துக் கொள்ளட்டும்” (ஹதீஸின் சுருக்கம்) (அபூதாவுத் 2082, அஹ்மத் 3:360)
இவ்வாறு பல செய்திகள் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களைத் தொட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளமையால் பெண்ணைப் பார்ப்பது ஆகுமாக்கப்பட்ட ஒன்றாக இருக்கின்றது. அதேவேளை, இமாம் மாலிக்கைத்தொட்டும் நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பார்க்க முடியாது என்ற கருத்தை ”காபி” என்ற நூலில் இமாம் இப்னு அப்துல் பர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இவர் இக்கருத்தை கூறக்காரணம் பொதுவாக பல்வேறு ஹதீஸ்கள் பெண்களைப் பார்ப்பதை தடை செய்துள்ளதை ஆதாரமாகக் கொள்கின்றார். என்றாலும் பிரத்யேகமாக நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பார்ப்பதற்கு மேற்குறிப்பிட்ட ஆதாரங்கள் காணப்படுவதனால் ”முடியாது” எனும் கருத்து வலு இழந்து போகிறது.
எந்த இடங்களைப் பார்க்கலாம்
1. பொதுவாக பெண்கள் வெளிப்படுத்தக்கூடிய இரு கைகளையும் மற்றும் முகத்தைப் பார்ப்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. என்றாலும் பெரும்பான்மையான உலமாக்கள் இவ்விரு உறுப்புக்களையும் பார்ப்பதுடன் சுருக்கிக் கொள்ளவேண்டும் என்கின்றனர். ஆனால் ஹன்பலி மத்ஹபின் கருத்துப்படி இரு கைகள், கால் மற்றும் ஒரு பெண் சாதாரணமாக வீட்டில் இருக்கும் போது வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் உறுப்புக்களைப் பார்க்கலாம் என்கின்றனர்.
2. இக்கருத்துக்கு ஆதாரமாக நபியவர்கள் விஷேடமாக பெண்ணைப் பார்க்கும் படி ஏவியிருப்பதில் இருந்து அவள் எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இரு கைகளையும் முகத்தையும் பார்ப்பதைச் சொல்லவரவில்லை. மாறாக அவள் வீட்டில் இருக்கும் போது வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் உறுப்புக்களைப் பார்ப்பதைக் குறிக்கும் என்கின்றனர்.
3. அதேவேளை அல்அவ்சகி அவர்கள் பெண்ணின் அவயங்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பார்க்கலாம் என்கின்றார்.

இவ்வாறு பல கருத்துக்கள் இருந்த போதிலும் பெரும்பான்மையான உலமாக்களின் கருத்தான முதலாவது கருத்தே ஏற்றமானது எனலாம். காரணம் இரு கைகள் முகம் என்பவற்றைத் தாண்டி ஒரு பெண்ணைப் பார்ப்பதன் மூலம் வேறு விதமான குற்றச்செயல்கள் நடப்பதற்கு காரணமாக அமைந்து விடும் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் அறியவேண்டியதில்லை.
எனவே இதிலிருந்து நிச்சயிக்கப்பட்ட பெண்ணை சில வரையரைகளுடன் பார்க்க வேண்டும் அது நபி வழியாகும் என்பதை விளங்கின்றோம். இன்று சில சகோதரர்கள் அவள் ”அஜ்னபி பெண்” அவளை எவ்வாறு பார்ப்பது? என கேள்விகளைக் கேட்டுக்கொண்டு நபிவழிக்கு மாற்றமாக குருட்டுத் திருமணம் செய்கின்றனர். இது பிழையான விடயமாகும். காரணம் இவ்வாறு ஒரு பெண்ணைப் பார்க்காமல் திருமணபந்தத்தில் இணைவதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளை திருமணத்திற்குப் பின்னால் எதிர்நோக்கலாம்.
ஓவ்வொரு மனிதனுக்கும் தனது துணை இப்படி, இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கள் இருக்கலாம். இவ்வெதிர்பார்ப்புக்கள் திருமணத்திற்கு முன்னர் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் திருமண வாழ்க்கை ஜொலிக்கும்.
இதே வேளை இன்றும் சிலர் நபியவர்பகள் பார்க்கச்சொல்லியிருக்கிறார்கள்தானே என சொல்லிக் கொண்டு முடியைப்பார்ப்பது, நடையைப்பார்ப்பது என பட்டியலை நீட்டிக்கொண்டு செல்வார்கள். இக்கருத்தை உடையவர்களும் நபியவர்கள் பார்க்கச் சொன்னது வரையருக்கப்பட்டது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதற்கும் மேல் ஒருவருக்கு கட்டாயம் சில விடயங்களைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற தேவை ஏற்பட்டால் ஆணின் சகோதரி அல்லது தாயின் மூலமாக இவ்விடயங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டுமே தவிர பெண்பார்க்கும் படலத்தை பெரும் பரீட்சை மண்டபம் போன்று ஆக்கிக்கொண்டு குறித்த பெண்ணை துருவித்துருவி நீண்டநேரம் பார்க்கக் கூடாது. காரணம் ஒரு பெண்ணும் ஆணும் தனித்து இருக்கும் போது ஷைத்தான் மூன்றாவது நபராக இருக்கின்றான் (அஹ்மத் 01:18, திர்மதி 1171) எனக் கூறியுள்ள செய்தியை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதே வேளை நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆணும் பெண்ணுமாக தனித்திருப்பது அனுமதித்ததாக காண முடியவில்லை. மாறாக ஒரு ஆண் பெண்ணோடு தனித்திருக்க நேரிட்டால் குறித்த பெண்ணின் கிட்டிய உறவுக்காரர் இல்லாமல் தனித்திருக்க வேண்டாம் (புகாரி 3006, முஸ்லிம் 1341) என பொதுவாகவே நபியவர்கள் வழிகாட்டியுள்ளமை பெண்பார்க்கும் படலத்திற்கும் பொருந்தும் என நினைக்கின்றேன்.
எப்போது பெண்ணைப் பார்க்கவேண்டும்?
ஒரு ஆண், தான் திருமணம் முடிக்க எல்லா வகைகளிலும் தயார் என்பதில் உறுதியான பின்னர் தனது துணையை தெரிவு செய்வதற்கு முற்படவேண்டும். இதற்கு மாற்றமாக திருமணம் முடிப்பதற்கு நான்கு வருடங்களுக்கு முன்னிருந்தே நாற்பது வீட்டிற்கு ஏறி இறங்கி பெண்பார்க்கின்றோம் என்ற பெயரால் வீண் விரயமாக பணத்தை இரைத்து பெண்மக்களைப் பெற்ற பெற்றோரின் வயிற்றிலும் அடிக்கும் நடவடிக்கையை எமது சமூகம் விட்டு விட வேண்டும்.
இந்நடைமுறையானது பொருளாதார ரீதியில் மாத்திரமின்றி ஒரு ஆண் ஏதோ ஒரு பெண்ணை பார்த்து விட்டு வந்தபின்னர், தனக்கு இப்பொழுது திருமணம் முடிக்க முடியாது என்பதை நேரடியாக சொல்லாமல் பெண் கொஞ்சம் உயரம் அல்லது கட்டை கொஞ்சம் நிறம் காணாது என்றெல்லாம் இலேசாக சொல்லி விடும்போது குறித்த பெண் பாரிய மன உலைச்சலுக்கு ஆளாகின்றாள் என்பதனையும் நமது மாப்பிள்ளைமார் மறந்து விட்டனர்.
பெண்ணின் அனுமதி கேட்க வேண்டுமா?
பெண்பார்ப்பதற்கு குறித்த பெண்ணின் அனுமதி கேட்கத்தேவையில்லை என்பது பெரும்பான்மையான உலமாக்களின் கருத்தாகும். இமாம் மாலிக் அவர்கள் பெண்ணுக்கு அறியப்படுத்திய பின்னால் பார்த்தால் அவள் தன்னை அழகுபடுத்திக் கொள்வதற்கு முடியுமாக இருக்கும் என கூறிய போதிலும் பெரும்பான்மையான உலமாக்களின் கருத்து மிகவும் ஏற்றதாகத் தெரிகின்றது.
காரணம் ஒரு ஆண் சில வேளை பெண்ணை விரும்பலாம். சில வேளை விரும்பாமலும் இருக்கலாம். விரும்பவில்லை என்றாலும் கூட குறித்த பெண்ணுக்கு விடயம் தெரியாததால் அவளுக்கு உலவியல் ரீதியான தாக்கங்கள் ஏற்படப்போவதில்லை. எனவே பெண்ணின் அனுமதியில்லாமலும் குறித்த பெண்ணை பார்ப்பதற்கு ஆணுக்கு அனுமதிக்க முடியும். அதே வேளை இந்த விடயத்தில் பெண்ணை இச்சையோடு பார்ப்பது மார்க்கத்தில் கண்டிக்கப்பட்ட அம்சங்களாகும்.
நிழற்படத்தின் மூலம் (Photo) நவீன கருவிகள்(video, messenger) போன்றவற்றினூடாக பெண் பார்க்க முடியுமா?
பொதுவாக நபியவர்கள் பெண்ணை பார்ப்பதற்கு அனுமதித்த செய்திகளில் இருந்து மேற்குறிப்பிட்ட நவீன ஊடகங்களின் ஊடாக அவளைப்பார்ப்பதற்கு அனுமதி அளிக்க முடிகின்றது.
இது விடயத்தில் மிகவும் தெளிவாகவும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதியாகவும் இருக்கும் பட்சத்தில் அனுமதிக்க முடிகின்றது. என்றாலும் இன்றைய சூழலில் அதிகமான தில்லுமுல்லுகள் தங்கையைக் காட்டி அக்காவைக் கொடுக்கும் கில்லாடி வேளைகள் இடம் பெருவதாலும் தரகர்களின் திருவிளையாடல்கள் மலிந்து போய் உள்ளதாலும் இதனை பலர் அனுமதிப்பது கிடையாது.
இஸ்லாத்தில் எந்த விடயத்திலும் ஏமாற்றுதலுக்கு இடமில்லை என்பதனை குறித்த தரப்பினர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அதே வேளை அனுமதிக்க முடியாது என்பவர்களின் வாதத்திற்கு வழு சேர்க்க பின்வரும் விடயங்களை முன்வைக்கின்றனர்.
o நிழற்பிரதியைப் பொறுத்தவரையில் ஒரு பெண்ணின் யதார்த்தமான உருவத்தை நவீன கருவிகளைக் கொண்டு பல்வேறு மாற்றங்கள் செய்து அழகு படுத்தலாம்.
o இதற்கு எதிர்மறையாக நேரடியான தோற்றத்திற்கு மாற்றமான அசிங்கமான தோற்றத்தைக்கூட புகைப்படங்கள் ஏற்படுத்தலாம்.
o இவ்வாறான புகைப்படங்கள் அல்லது messenger ஊடாக பெண்ணைப்பார்த்து விட்டு சில நயவஞ்சகர்கள் குறித்த பெண்ணை இணையத்தின் internet ஊடாக கேவலப்படுத்த முனையலாம்.
எனவே இது போன்ற காரணங்களினால் இவ்வாரான நவீன வசதிகளினூடாக பெண் பார்ப்பதை தவிர்த்துக் கொள்வது மிகவும் ஏற்றமானது. வேறு வழியில்லாமல் இவ்வழிகளில்தான் பார்த்து ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் இரு தரப்பும் சரியான முறையில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பெண்ணுடன் கைலாகு செய்வது அல்லது உறுப்புக்களைத் தொடுவது கூடாது
இன்று சர்வசாதாரணமாகிப்போன கைலாகு (handshaking) செய்வது பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையில் இடம்பெறுவதையோ, உறுப்புக்களைத் தொடுவதையோ இஸ்லாம் அங்கீகரிக்க வில்லை. நபியவர்கள் தெளிவாகவே
”நான் பெண்ணுடன் கைலாகு செய்ய மாட்டேன்” (திர்மதி 1597, நஸாயி 4181, இப்னுமாஜா 2874, அஹ்மத் 6:357) என கூறியுள்ளார்கள்.
நபி வழியை எமது வழியாகக் கொண்ட. மேலைத்தேயரின் நாகரீகத்திற்கு ஒப்பாகி ஆண், பெண் கைலாகு செய்வதையும் ஏனைய உறுப்புக்களை தொடுவதையும் தவிர்த்துக் கொள்வது கட்டாயமானதாகும். அதே வேளை முக்கியமான தேவைகளுக்கு அல்லாமல் வீணாக, குறித்த பெண்ணோடு தொலை பேசியினூடாக அரட்டை அடிப்பதும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
பெண்ணுக்கு ஆணைப்பார்க்க முடியுமா?
தொடர்ந்து ஒரு ஆண் பெண் பார்ப்பதன் ஒழுங்கு முறைகளையும் சில சட்டங்களையும் அவதானித்தோம். தற்போது ஒரு பெண்ணுக்கு ஆணைப்பார்க்க முடியுமா என்று பார்ப்போம். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆணைப் போன்றே தனக்கு வரவிருக்கும் கணவர் எவ்வாரெல்லாம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இருக்கலாம். எனவே இஸ்லாம் பெண்ணின் விருப்பு வெறுப்பிற்கும் செவி சாய்த்து பெண்ணுக்கு ஆணைப்பார்ப்பதற்கு அனுமதி வழங்குகின்றது.

இன்றைய சமூக சூழலில் பெண்ணுக்குறிய இந்த உரிமை கொடுக்கப்படும் வீதம் மிகவும் குறைந்துள்ளது. சில வேளை பெற்றோர் மாப்பிள்ளையை காட்டாமலே ”நான் கீறிய கோட்டை எனது பிள்ளை தாண்டாது” என இருமாப்பாக சொல்லிக் கொண்டு நேரடியாக திருமண ஒப்பந்தங்கள் நடை பெருகின்றமை பெண்ணுக்கு இழைக்கும் பெரும் கொடுமை என்று சொல்லலாம்.
அற்ப பணத்திற்காக தனது பிள்ளையை UK மற்றும் America மாப்பிள்ளைக்கு விற்றுவிடக் கூடிய பெற்றோர் பெண்ணுக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கா? இல்லையா? என்பதைக் கேட்கத் தவறிவிடுகின்றனர். இதனால் சமூக அமைப்பில் பல்வேறு சிக்கல்கள் குறிப்பாக தலாக் மற்றும் கணவன் இருக்க இன்னொருவனோடு ஓடிப்போகும் சமபவங்கள் இடம் பெருவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது.
நாம் ஏற்கனவே பெண்ணின் அனுமதி இல்லாமல் ஆண் பெண்ணைப் பார்க்கலாம் என்று சொன்னோம் அதனால் ஏற்படும் பிரதிபலனையும் கோடிட்டுக் காட்டினோம். ஆனால் ஆண் அவ்வாறு பார்த்து விரும்பியதன் பின்னர் நேரடியாக திருமண ஒப்பந்தத்திற்கு செல்லமுடியாது.
சில வேளை பாரிய வயது வித்தியாசமான கிழவர்கள் கூட பெண்கள் அனுமதியில்லாமல் அவளைப்பார்த்து விரும்பலாம். அதன் பின்னால் பெண்ணின் அனுமதியையும் பெற்று அவள் பார்த்து OK சொன்னால்தான் பெண்ணுக்குறிய உரிமைகளை வழங்கியவர்களாகவும் அவளின் மனோநிலையை மதித்தவர்களாகவும் ஆக முடியும்.
எனவே இவ்விடயத்தில் ஆண்கள் கரிசனை செலுத்தி, தான் பார்த்து விரும்பிய அந்தப்பெண்ணுக்கு தன் மேல் விருப்பம் இருக்கிறதா? என்பதை அவள் ஆணைப்பார்த்து உறுதி செய்து கொள்வதற்கும் திருமணத்திற்கு முன் இஸ்லாம் கூறும் விதிமுறைகளைக் கடைப்பிடித்து இருமணங்கள் சங்கமிக்கும் திருமண வாழ்வில் இணைந்து ஈருலகிலும் வெற்றிபெற அல்லாஹ் துணைபுரிவாணாக!
நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பார்ப்பதின் இஸ்லாமிய வரையறை!பெண்ணுக்கு ஆணைப்பார்ப்பதற்கு அனுமதி வழங்குகின்றது!
நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பார்ப்பதின் இஸ்லாமிய வரையறை!பெண்ணுக்கு ஆணைப்பார்ப்பதற்கு அனுமதி வழங்குகின்றது!

ஓவ்வொரு மனிதனுக்கும் தனது துணை இப்படி, இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கள் இருக்கலாம். இவ்வெதிர்பார்ப்புக்கள் திருமணத்...

மேலும் படிக்க »

குறை சொல்லிப் புறம்பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்

Mohamed Farook Mohamed Farook Author
Title: குறை சொல்லிப் புறம்பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
''குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணி...
''குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத் தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான். ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும். அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும். நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும். நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக). (அல்குர்ஆன்104:1-9)

இன்று புறம் பேசுவது மனிதர்களிடையே ஒரு பொழுது போக்கு போல் ஆகிவிட்டது. இது இம்மை மறுமை இரண்டிலும் மனிதனை நாசமாக்கிவிடும். ஆனால் அதை அவர்கள் உணர்வதே இல்லை. புறும் என்பது ஒருவருடைய குறையை அவருக்குப் பின்னால் பேசுவதாகும். இச்செயலை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இருந்தபோதும் புறம் பேசாத மக்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். காரணம் அக்குற்றத்தின் கடுமையை மக்கள் சரியாக உணரவில்லை.

கொலை, களவு, விபச்சாரம், மது அருந்துவது போன்றவை தீய நடத்தை என்பதை ஏற்றுக் கொள்ளும் மனிதன்; புறம் பேசுவதை சாதாரணமான குற்றமாக நினைக்கின்றானோ என்னவோ அதைப்பற்றி கவலையே படாதவனாக காலம் தள்ளிக் கொண்டிருக்கிறான். அதிலும் சிலருக்கு மற்றவர்களை குறை சொல்லாவிட்டால் தூக்கமே வராது என்றுகூட சொல்லலாம். மற்றவர்களைப்பற்றி எதையேனும் அவிழ்த்து விடவேண்டுமே! இல்லையென்றால் உண்ட உணவு செரிக்காதே என்கின்ற ரகமும் உண்டு.
அதுவும் நம்மில் சிலருக்கு அடுத்தவர்களை பற்றி பேசவில்லை என்றால் தலை வெடித்து விடும். 

அது அடுத்தவர்களை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று கொஞ்சம் கூட சிந்திப்பதில்லை. இதனால் எத்தனை குடும்பங்கள் சீரழிந்திருக்கிறது என்பது எல்லோரும் அறிந்ததே.

0 புறம் பேசுவதால் ஏற்படும் தீமைகளில் முதன்மையானது, புறம் பேசுபவர் அல்லாஹ்வின் வெறுப்புக்குள்ளாகி விடுகிறார். அல்லாஹ்வின் வெறுப்புக்குள்ளாகிறார் எனும்போது அதைவிட பெறும் கைசேதம் வேறு என்னவாக இருக்க முடியும்?

0 புறம் பேசுபவர்கள் பொய் சொல்வதற்கும் தயங்காதவர்களாகவே இருப்பார்கள். ஏனெனில் தனக்குப் பிடிக்காத ஒருவரைப்பற்றி குறை சொல்லும்போது இயற்கையாகவே பொய் அந்த இடத்தில் இரக்கை கட்டி பறக்க ஆரம்பித்துவிடும். ஆக! புறம் சொல்லக்கூடியவர் பொய்யனாகவும் மாறிவிடுகிறார்.

0 புறம் பேசுவது விபச்சாரத்தைவிடக் கொடியது என்கிறார்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். விபச்சாரம் ஒரு மோசமான குற்றம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் புறம் கூறுவது அதைவிட கொடிய பாவம் என்பதை மனிதன் உணர்கிறானா என்றால் இல்லையென்னு தான் சொல்ல வெண்டும். ஏனெனில் உணர்ச்சியின் உந்துதலால் விபச்சாரம் செய்பவன்கூட அதை மறைவாகத்தான் செய்கிறான். ஆனால் அதைவிடக் கொடிய பாவமென இஸ்லாம் கூறும் புறம்பேசுதல் பகிரங்கமாகவே இடம், பொருள், ஏவல், என்று எந்த வரைமுறையுமில்லாமல் எல்லா இடங்களிலும், நேரங்களிலும் எவ்வித பயமுமின்றி வீறு நடை போடுகிறது. இந்த வீறு நடை காட்டும் பாதை நரகம் என்பதை எத்தனை பேர் உணர்வார்கள்?

0 புறம் பேசுவது இறந்துவிட்ட தனது சகோரனின் இறைச்சியை உண்பதற்கு சமம் என்கிறது திருக்குர்ஆன். அலட்சியமாக எண்ணிவிடாதீர்கள், ஏனெனில் இதை கூறுவது அல்லாஹ்வின் அருள்மறை. ''மேலும் உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேச வேண்டாம். உங்களில் எவராவது இறந்த தம்முடைய சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள்.'' (49:12)

0 புறம் பேசுபவர்கள் மறுமை நாளில் கடுமையான வேதனை செய்யப்படுவார்கள் தமது கரங்களினாலே அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள் என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

0 புறம் பேசுவதால் உள்ளம் இருளடைந்துவிடும். நிம்மதி பரிபோய்விடும். தொடர்ந்து புறம் பேசக்கூடியவர் தனது உறவு வட்டாரங்களை, நட்பு வட்டாரங்களை வெகு சீக்கரம் இழந்து விடுவார். அவர் வீட்டை விட்டு இறங்கினாலே ஷைத்தானுக்கு மிகப்பெரும் கொண்டாட்டம்தான். ஆஹா! இன்றைக்கு நாம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் நமக்கு உதவி செய்ய ஆள் வந்து விட்டார் என்று அடுத்த தெருவுக்கு சென்றாலும் சென்றுவிடும்.

0 புறம் பேசுபவர்கள் கோழையாகவே கருதப்படுவர். ஏனெனில், தைரியமுள்ளவர்களாக இருந்தால் அடுத்தவரின் குறையை நேருக்கு நேர் பேசிடுவார்கள்.

0 புறம் பேசியவன் யாரைப்பற்றி புறம் பேசினானோ அவர் மன்னிக்காதவரை அல்லாஹ்வும் மன்னிப்பதில்லை என்கிறது இஸ்லாம்.

0 புறம் பேசுவதால் ஏற்படும் மிகப்பெரும் நஷ்டம் என்னவெனில், புறம் பேசியவன் இவ்வுலகில் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த அத்தனை நன்மைகளையும் அவன் யாரைப் பற்றி புரம் பேசினானோ அவனுக்கு மறுமையில் வழங்க வேண்டிய நிலைக்கு ஆளாவான் என்று சொல்வதைவிட புறம் சொன்னவனின் நன்மைகள் பிடுங்கப்பட்டு புறம் பேசப்பட்டவனிடம் கொடுக்கப்படும். அதோடு முடிந்ததா என்றால் அதுதான் இல்லை! புறம் பேசியவனிடம் நன்மைகள் குறைவாக இருந்தால், புறம் பேசப்பட்டவனின் பாவங்கள் இந்த புறம் பேசியவனின் தலையில் வந்து விழும். ஆக, புறம் பேசியவன் தான் சேகரித்து வைத்திருந்த நன்மைகளை இழப்பதோடு புதிதாக பாவச்சுமையையும் பெற்றுக்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவான்.

''மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஜிப்ரீலே, அவர்கள் யார் என்று கேட்டேன். இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம் பேசியவர்கள்) மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள் என்று விளக்கமளித்தார்கள்.''(அறிவிப்பாளர் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்;: அஹ்மது)

''ஒருவர் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே, இன்னவள் அதிகமாக நோன்பு பிடிக்கிறாள், அதிகமாக தான தர்மங்கள் செய்கிறான். ஆனால் அப்பெண் பக்கத்து வீட்டினருக்கு தன் நாவால் துன்பம் தருகிறாள். என கேட்டபோது அவள் நரகத்தில் இருப்பாள் என நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே இன்னவள் குறைவாக நோன்பு நோற்பாள் தர்மங்கள் செய்கிறாள் தொழுகிறாள். இக்த் என்ற இடத்தில் உள்ள காளை மாடுகளை தர்மம் செய்கிறாள்  - ஆனால் தன் நாவால் பக்கத்து வீட்டாருக்கு துன்பம் தருவதில்லையே என கேட்ட போது இந்த பெண் சுவனத்தில் இருப்பாள் என நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விளக்கம் அளித்தார்கள்.''(அறிவிப்பவர்: அபூஹுரைராரளியல்லாஹு அன்ஹு நூல்கள்: அஹ்மத், பைஹகீ)

புறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர் என்பதை அறிது கொள்வோம். மரணித்த பிறகு கப்ரிலும், மறுமையிலும் மிகக் கொடிய தண்டனைகளைப் பெற்றுத் தரும் மிக மிக தீய செயலான புறம் பேசுவதை விட்டும் முஃமினான ஒருவர் அவசியம் தவிர்த்திருக்க வேண்டும்.
மனிதன் புறம்பேசுவதால் எவ்வளவு பெரிய இழப்புக்குள்ளாக நேரிடுகிறது என்பதை சிந்தித்துப்பார்த்தால் சீர்பெற முடியும்.

புறம் பேசுவதை விட்டும் நம்மை தற்காத்துக் கொள்ளும் வழிகள்:
மற்றவர்களைப்பற்றி நல்லவைகளையே நினைப்போம். நல்லவைகளையே எடுத்துச் சொல்வோம். ஒருவர் மரணமடைந்துவிட்டால் அவரிடமுள்ள குறைகளை கூறாமல் அவர் செய்த நன்மைகளை எடுத்துக்; கூறும்படி இஸ்லாம் கூறுகிறதல்லவா, உயிருடன் இருப்பவர்களுக்கும் இதே அளவு கோளை மேற்கொள்வோம்.

எவரேனும் புரம் பேசினால், முதலில் நாம் அவரை தடுக்க வேண்டும். நம்மால் தடுக்க இயலவில்லை என்றால் நாம் அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றுவிட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் நாமும் அப்பாவத்தில் சிக்கிக் கொள்வோம். இக்கொடிய பாவத்திலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாக்க அதகமதிகமாக அவனிடம் உதவி தேடுவோம்.
- எம்.ஏ. முஹம்மது அலீ
குறை சொல்லிப் புறம்பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்
குறை சொல்லிப் புறம்பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்

''குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணி...

மேலும் படிக்க »
பழைய இடுகைகள் முகப்பு