ஒவ்வொரு வருடமும் வி.களத்தூரில் உள்ள மதரஸா ஆண்டுவிழாக்கள் நடைபெறும். இந்தவருடம் ரமலான் நெருங்க ஆரம்பித்து விட்டது ஆகையால் வி.களத்தூரில் உள்ள மதரஸாக்களில் ஆண்டுவிழா நடைப்பெற்று வருகிறது.
அந்த வரிசையில் நேற்று முன்தினம் (15.05.17) மாலை 3 மணியிளவில் மில்லத்நகர் மதராஸா நூருல் இஸ்லாம் 23ஆம் ஆண்டு நிறைவு மற்றும் ஐம்பெரும் விழா ஈத்கா திடலில் சிறப்பாக தொடங்கியது.
அந்த வரிசையில் நேற்று முன்தினம் (15.05.17) மாலை 3 மணியிளவில் மில்லத்நகர் மதராஸா நூருல் இஸ்லாம் 23ஆம் ஆண்டு நிறைவு மற்றும் ஐம்பெரும் விழா ஈத்கா திடலில் சிறப்பாக தொடங்கியது.
அதன் ஒரு பகுதியாக மாணவர்களின் ஊர்வலம் ஈத்கா திடலில் இருந்து சரியாக 3 மணியளவில் மதரஸா மாணவ, மாணவிகளின் ஊர்வலம் புறப்பட்டு அனைத்து வீதிகளுக்கு சென்று மீண்டும் ஈத்கா திடலில் நிறைவுற்றது.
ஊர்வலம் புகைப்படங்களை பார்க்க - ஆண்டு விழா ஊர்வலம்! - புகைப்படங்கள்!!
அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளின் சிறப்பு பேச்சு, உரையாடல், கேள்வி பதில் போன்ற நிகழ்ச்சிகள் மேலும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சிகள், புதிய மெளலவிகளுக்கும், ஹாஜிகளுக்கும் பாராட்டும் வாழ்த்துகளும் வழங்கும்போதும், கஷ்புன்நுசூர் முன்னாள் மாணவர்கள் மன்றம் முதலாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மதரஸா மாணவர்களின் பட்டிமன்றம் நிகழ்வு நடைப்பெற்றது
இறுதியாக A. ஹாஜா ஷரீப் b,sc நன்றியுரை நிகழ்த்த, துஆவுடன் விழா நிறைவுற்றது.
நமது ஊரில் வருடம் வருடம் சிறப்பாக நடைப்பெற்று வரும் மதரஸா ஆண்டு விழா இந்த வருடமும் மிக சிறப்பாக நடைப்பெற்றது. நமதூர் இஸலாமிய மக்கள் இதில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
ஆண்டு விழா புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு... இதோ
ஒவ்வொரு வருடமும் வி.களத்தூரில் உள்ள மதரஸா ஆண்டுவிழாக்கள் நடைபெறும். இந்தவருடம் ரமலான் நெருங்க ஆரம்பித்து விட்டது ஆகையால் வி.களத்தூரில் உள...
மேலும் படிக்க »