வி.களத்தூரில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏற்ப்பட்ட வெள்ளத்தின் வீடியோ தொகுப்பு உங்களுக்காக.... vkalathur வி.களத்தூர் 2005 | millathnagar மி...

வி்.களத்தூர் வபாத்து செய்தி!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் வபாத்து செய்தி! நடுத் தெருவில் கோட்டையாம் வீடு அப்துல் வஹாப் அவர்களின் மனைவி ஹசினா பீ என்பவர் (15-12-17) சுமார்காலை 5.30...
வி.களத்தூரில் வரும் சனிக்கிழமை மாபெரும் பொதுக்கூட்டம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் சுன்னத் வல் ஜமாத் (மற்றும்) சுன்னத் ஜமாத் பேரியக்கம் இணைந்து நடத்தும் உத்தம நபியின் உதய தின விழா இன்ஷா அல்லாஹ் வரும் 09.12.201...
தொடர் மழை ஏதிரொலி :- மில்லத்நகர் தெருவில் புகுந்த மழைநீர்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூரில் கடந்த ஒரிரு நாட்களாக மழை பெய்து வருகிறது நேற்று முதல் சிறு இடைவேளை விட்டு மழை விடாமல் பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை ...
வி.களத்தூர் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
பழைய புகைப்படம் வி.களத்தூரில் கடந்த ஒரிரு நாட்களாக மழை பெய்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே... ஆனால் அந்த மழை ஒரு குறிப்பிட்ட நேரத்தி...
வி.களத்தூர் கல்லாற்றில் தண்ணீர் வர தொடங்கியது!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாகவும் சில இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது. நமதூர் மேற்குத்தொடர்ச்சி மலைகளிலும் மழை பெய்துள்ளது. கடந்த ...
வி.களத்தூரில் விட்டு விட்டு வெளுத்து வாங்கும் மழை!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
பழைய படம் வி.களத்தூரில் நேற்றும் இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று அவ்வப்போது மிதமான மழை பெய்து வந்த நிலையில் இ...
குழந்தைகளை நேசிப்போர் இறைவனின் அருளைப் பெறுகிறார்கள்! - முஹம்மது நபி (ஸல்)
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
குழந்தைகளுடனும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகுந்த பாசத்துடன் இருந்துள்ளார்கள். குழந்தைகளுடன் எப்படிப் பழக வேண்டும் என்ப...
அனைத்துத் துறையிலும் உலகம் அழியும் வரை வழிகாட்டியவர்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
அனைத்து துறையிலும் உலகம் அழியும் வரை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டி விட்டனர். நாளை ஒருவர் ஒரு கருத்தை புதிதாக இருப்பத...
வி.களத்தூரில் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு பற்றி விளக்ககூட்டம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
மேலும் விபரங்களுக்கு ........ கீழே நோட்டீஸ் இணைப்பு

நமதூரில் கற்க கசடற கல்வி நிறுவனம் & கல்வி அறக்கட்டளை நடத்தும் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு பற்றி விளக்ககூட்டம் இன்ஷா அல்லாஹ் வரும் (2...
வி.களத்தூரை பற்றி... (பகுதி - 10)
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:

நமதூருக்கு பெருமையை சேர்க்கும் வி.களத்தூர் ஜாமிஆ மஸ்ஜித் பற்றி பார்ப்போம் -
புதிய பள்ளிவாசல் கட்ட 1991-ம் ஆண்டு அடிக்கல் நாட்டி பள்ளி வேலைகள் பூர்த்தியாக 11ஆண்டுகள் தேவைப்பட்டது.
கடந்த 18.05.2001 வெள்ளிக் கிழமை ஹிஜ்ரி 1422 சபர் பிறை - 23 யில் ஊர் மக்கள், பல முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் முன்னிலையில் மதியம் 12.00 மணியளவில் வி.களத்தூர் ஜாமிஆ மஸ்ஜித் திறக்கப்பட்டது.
உடலாலும், உழைப்பாலும், பொருளாலும் உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கு மிக மகிழ்ச்சியான நாட்களில் இதுவும் ஒன்று கூட என கூறலாம். ஊரேல்லாம் மகிழ்ச்சியில் இருந்த நாட்களில் இதுவும் ஒன்று.
அன்று காலை 9.00 மணியளவில் நிஷ்வான் அரபி மதரஸா அருகில் பள்ளிவாசல் திறப்பு விழா கூட்டம் நடைப்பெற்றது.
இன்றும் கம்பிரமாக இருக்கும் வி.களத்தூர் ஜாமிஆ மஸ்ஜித் பலரின் உடல், மன உழைப்பின் சாட்சி
அடுத்த பதிவில் சந்திப்போம்.....
ஆக்கம் – முஹம்மது பாரூக்.

நமதூரைப் பற்றி தொடராக பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக 10வது பகுதியை பார்க்கலாம். நமதூருக்கு பெருமையை சேர்க்கும் வி.களத்தூர் ஜாமிஆ ...


மழை காலமும், மார்க்கம் சொல்லும் வழிமுறைகளும்!!!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:

இதன் பொருள் : நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எனது துன்பத்திற்காக நீ கூலி தருவாயாக. மேலும் இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக. (ஆதாரம்: முஸ்லிம் 1525)

மழை பொழியும் போது என்ன செய்வது?
அளவுக்கு மேல் மழை பெய்தால். -
சாதாரனமான வழமையான முறையில் மழை பெய்தால் மேற்கண்ட துஆவை ஓதும் படி கற்றுத் தந்த நபியவர்கள்
அளவுக்கு மேல் மழை பெய்யும் போது ஓதுவதற்கு இன்னொரு துஆவையும் கற்றுத் தந்துள்ளார்கள்.
அளவுக்கு அதிகமாக மழை பெய்தால் கீழுள்ள துஆவை ஓத வேண்டும்.
இதன் பொருள் : இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்காதே! (ஆதாரம்: புகாரி 933, 1015, 1020, 1021, 1033, 6093, 6342)
அல்லது
اَللّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ
அல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபா(ப்]லி வல் ஆஜாமி வள்ளிராபி(ப்] வல் அவ்திய(த்)தி வ மனாபி(ப்]திஷ் ஷஜரி
இதன் பொருள் : இறைவா! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும், கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக. (ஆதாரம்: புகாரி 1013, 1016)
அல்லாஹும்ம அலா ருவூஸில் ஜிபா(ப்]லி வல் ஆகாமி வபு(ப்]தூனில் அவ்திய(த்)தி வ மனாபி(ப்]திஷ் ஷஜரி (ஆதாரம்: புகாரி 1017)

புயல் வீசும் போது என்ன செய்வது?
தற்போதுள்ள சூல்நிலையில் கடுமையான புயலுடன் கூடிய மழை பெய்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கடுமையான புயலின் மூலம் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தங்க இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலைகள் ஏற்படும் போது நாம் ஓத வேண்டிய துஆவை நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.
இந்த துஆவை நாம் ஓதுவதின் மூலம் புயலினால் நமக்கு ஏற்படவிருக்கும் தீங்கை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பான்.
اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாபீ[எஃப்]ஹா வகைர மா உர்ஸிலத் பி(ப்]ஹி. வஅவூது பி(ப்](க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா பீ[எஃப்]ஹா வஷர்ரி மா உர்ஸிலத் பி(ப்]ஹி
இதன் பொருள் : இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (ஆதாரம்: முஸ்லிம் 1496)
மேற்கண்ட அனைத்து செயல்பாடுகளையும் செய்வதின் மூலம் இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெருவோமாக!
‘வறண்ட பூமியை நோக்கி தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம்’ என்பதை அவர்கள் காணவில்லையா? அதன் மூலம் பயிர்களை வெளிப்படுத்து கிறோம். அதிலிருந்து ...
ஆடையில்லாமல் எதுவுமில்லை!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:

எப்போது அவர்கள் அறிவுக் கனியை உண்டார்களோ அப்போதுதான் தாங்கள் நிர்வாணமாக இருப்பதை உணர்ந்தார்கள். அவர்கள் தங்கள் பாலுறுப்புகள் வெளிப்படையாகத் தெரிவதைப் பார்த்து வெட்கப்பட்டார்கள். உடனே அத்தி மர இலைகளைப் பறித்துத் தங்கள் பாலுறுப்புகளை மறைத்துக் கொண்டார்கள்.
ஆடை மனிதனின் முதல் கண்டுபிடிப்பு. அந்த ஆடையே மனிதனை மற்ற உயிரினங்களிலிருந்து பிரித்தது; உயர்த்தியது.
ஆடைத் தத்துவம் அற்புதமானது.
யோனத்தன் ஸ்விஃப்ட் ‘மனிதனே ஆடைதான்’ என்கிறார். அதாவது மனிதன் தோன்றுவதற்கு முன் பூமி நிர்வாணமாக இருந்தது. அறிவியலின் சாரமே ஆடை பற்றிய தத்துவத்தில் அடங்கியிருக்கிறது என்கிறார் கார்லைல்.
ஆடையில்லாமல் எதுவுமில்லை.
கண்ணுக்கு இமை ஆடை. விண்ணுக்கு மேகம் ஆடை. மண்ணுக்குக் கடல் ஆடை. இதயத்திற்கு எண்ணங்களே ஆடை. ஆன்மாவுக்கு உடல் ஆடை. மதமே மனிதனின் ஆடைதான். சொல் பொருளின் ஆடை. ‘பத்துக்கு மேலாடை பதினொன்று’என்று கூறி அசத்துகிறார் உவமைக் கவிஞர் சுரதா.
சமணர்களில் ஒரு பிரிவினர் திகம்பரர். அவர்கள் நிர்வாணமாக இருப்பார்கள். கேட்டால் ‘நாங்கள் நிர்வாணத்தையே உடுத்தியிருக்கிறோம்’என்கிறார்கள்.
காவெண்ட்ரி நாட்டு அரசி காடிவா, மக்களை வரிக் கொடுமையிலிருந்து நீக்குவதற்கு மன்னன் விதித்த நிபந்தனைப்படி வீதிகளில் குதிரையில் நிர்வாணமாக ஊர்வலம் வந்தாள்.
அதை வருணித்த டென்னிசன் ‘அவள் கற்பை ஆடையாக உடுத்தி வந்தாள்’ என்கிறார்.(!!!)
இதே காட்சியை நான் ‘அவள் மக்கள் இமைகளையே ஆடையாக உடுத்தி வந்தாள்’ என்று எழுதியிருக்கிறேன்.
கணவன் - மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்க வந்த திருக்குர்ஆன், ஆண்களை நோக்கி, ‘அவர்கள் உங்களுக்கு ஆடை; நீங்கள் அவர்களுக்கு ஆடை’ என்கிறது. அதாவது மனைவி கணவனுக்கு ஆடை. கணவன் மனைவிக்கு ஆடை.
உணவு, உடை, உறையுள் மூன்றும் மனிதனுக்கு இன்றியமையாத தேவைகள்.
கணவன்- மனைவி உறவை உணவாகவோ, உறையுளாகவோ கூறாமல் உடையாகக் கூறுகிறது குர்ஆன்.
உணவுக்குப் பிச்சை கேட்டே பிழைத்துக் கொள்ளலாம். வாடகை வீட்டிலேயே வாழ்க்கையை ஓட்டிவிடலாம். ஆடை விஷயத்தில் அப்படி இருக்க முடியுமா? ஆண்டிக்குக் கூடக் கோவணம் ஒன்று சொந்தமாகத் தேவை.
ஆடை ஆழமான அர்த்தங்களையுடைய அற்புதமான குறியீடு.
மனிதன் மட்டுமே ஆடை அணிகிறான். மற்றைய உயிரினங்கள் அணிவதில்லை. அதைப் போலவே உயிரினங்களுக்குப் பொதுவான பாலுறவைத் திருமணம் என்ற ஒன்றால் ஒழுங்காக்கிக் கொண்டவன் மனிதனே.
திருமணத்திற்கு முன் ஆணும் பெண்ணும் ஆடை அணிந்திருந்தாலும் நிர்வாணிகளே.
ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் உடுத்திக் கொள்ளும்போதுதான் அவர்கள் கௌரவம் பெறுகிறார்கள்.
ஆண் பெண்ணுக்காகவே நெய்யப்படுகிறான். பெண் ஆணுக்காகவே நெய்யப்படுகிறாள்.
திருமணம் என்றாலே ஆடை அவிழ்ப்பதற்கு என்று நினைக்கிறார்கள். ஆனால், திருமணம் என்பதே ஆடை உடுப்பது என்கிறது குர்ஆன்.
ஆடை நமக்குப் பிடித்திருக்க வேண்டும். அதற் காகத்தான் அதை நாமே தேர்ந்தெடுக்கிறோம். நாம் விரும்பித் தேர்ந்தெடுத்ததை அணியும் போதுதான் நாம் மகிழ்கிறோம். திருமண உறவும் அப்படித்தான். விரும்பியதைத் தேர்ந் தெடுக்க வேண்டும். இல்லையென்றால் உடுத்த முடியாது.
ஆடை நமக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும். இயற்கை ஒவ்வோர் ஆணையும் பெண்ணையும் ஆயத்த ஆடையாகவே தயாரிக்கிறது. அதில் பொருத்தமானதையே நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். பத்துப் பொருத்தம் பார்க்கிறார்கள். ஆனால், மனப் பொருத்தம் பெரும்பாலும் பார்ப்பதில்லை. அது முக்கியம்.
ஆடை மானத்தைக் காக்கிறது. திருமணமும் மானத்தைக் காக்கிறது. பால் இச்சை பயங்கரமானது. அது மனிதனை அவமானப் படுகுழியில் தள்ளிவிடக்கூடியது. திருமண உறவில் ஆணும் பெண்ணும் ஒருவர் பால் இச்சையை மற்றவர் தணிக்கின்றனர். இதனால் ஒருவர் மானத்தை மற்றொருவர் காக்கின்றனர்.
ஆடை மறைக்கிறது. அதைப் போலவே கணவனும் மனைவியும் ஒருவர் குற்றங்குறைகளை மற்றவர் மறைக்க வேண்டும்.
கணவன் என்ற ஆடை கட்டிக் கொண்டிருப்பதால் ஒரு பெண் தவறான பார்வைகளிலிருந்து மறைக்கப்படுகிறாள். கணவனும் அப்படியே.
ஆடை தட்பவெப்பம், அழுக்கு போன்ற வற்றிலிருந்து பாதுகாக்க அணியப்படுகிறது. கணவனும் மனைவியும் துன்பம் தாக்காமல்
ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக இருக்கின்றனர். அது மட்டுமல்ல; இருவரும் ஒருவருக்கொருவர் குளிருக்குக் கதகதப்பாகவும் வெயிலுக்கு இதமாகவும் இருக்கிறார்கள்.
ஆடை கெளரவத்திற்காக அணியப்படுகிறது. கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் கெளரவம் உண்டாக்குகிறவர்களாக இருக்க வேண்டும்.
சீருடை அடையாளத்திற்காக அணியப்படுகிறது. அதுபோலவே கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அடையாளமாக இருக்க வேண்டும்.
ஆடையை நாகரிகம், பண்பாட்டுக்காக அணிகிறோம். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் நாகரிகம் பண்பாட்டை உண்டாக்குகிறவர்களாக இருக்க வேண்டும்.
ஆடையை சுகத்திற்காக அணிகிறோம். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் சுகம் தருகிறவர்களாக இருக்க வேண்டும்.
ஆடையை அழகுக்காக அணிகிறோம். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் அழகுபடுத்துபவராக இருக்க வேண்டும்.

ஆடை அழுக்கானால் நாம் அதைத் தூக்கி எறிந்துவிடுவதில்லை. சலவை செய்து அணிந்துகொள்கிறோம். கணவனிடமோ மனைவியிடமோ குறைகள் தோன்றினால் தூக்கி எறிந்துவிடக் கூடாது. அந்தக் குறைகளை நீக்க முயல வேண்டும்.
ஆடை கொஞ்சம் கிழிந்தால் நாம் அதைத் தூக்கி எறிந்துவிடுவதில்லை. தைத்து அணிந்து கொள்கிறோம். கணவன் மனைவியரிடையே கோபதாபங்கள் ஏற்பட்டால் பிரிந்துவிடக்கூடாது. சமாதானம் என்ற தையலால் ஒன்று சேர்ந்துவிடவேண்டும்.
ஆனால் ஆடை அணியவே முடியாதபடி சுருங்கிப் போனால், தைக்கவே முடியாதபடி கிழிந்துபோனால், சலவை செய்யவே முடியாதபடி அழுக்காகிப் போனால், அதாவது ஆடை யின் பயனை அது தராது போனால், அந்த ஆடையை வைத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. தூக்கி எறிந்துவிட்டுப் புதிய ஆடையை வாங்கிக்கொள்ள வேண்டியது தான்.
இன்பமாக இருப்பதற்குத்தான் இல்லறம்; துன்பப்படுவதற்கல்ல. கசப்பும் வெறுப்பும் முற்றி இருவரும் சேர்ந்து வாழவே முடியாது என்ற நிலை வந்துவிட்டால், பிறகு இல்லறம் என்பதற்கே அர்த்தமில்லை. இருவரும் பிரிந்து தமக்குப் பிடித்தமான புதிய உறவுகளை உண்டாக்கிக்கொள்வதே நல்லது.
‘ஆடை’ என்ற ஒரே ஒரு குறியீடு கணவன் மனைவிக்குரிய இலக்கணங்கள் அத்தனை யையும் உணர்த்துவது வியப்புக்குரியது.
கவிக்கோ அப்துல் ரகுமான்
ஆதி மனிதர் ஆதாமும் ஏவாளும் தொடக்கத்தில் நிர்வாணமாக இருந்தனர். ஆனால் அவர்கள் நிர்வாணமாக இருக்கிறோம் என்பதை அறியாமல் இருந்தார்கள். எப...
வி.களத்தூரை பற்றி... (பகுதி - 9)
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
நமதூருக்கு பெருமையை சேர்க்கும் வி.களத்தூர் ஜாமிஆ மஸ்ஜித் பற்றி பார்ப்போம் -
ஐக்கிய அரசு அமீரகத்தை சேர்ந்த தொழிலதிபர் அல்ஹாஜ் ஷேக் முஹம்மது தைய்யூப் அவர்களும் இப்பள்ளி கட்ட பெரும் நிதி உதவி செய்தார்
பெரம்பலூர் மாவட்டத்திலேயே இரண்டாவது பெரிய பள்ளிவாசல் வி.களத்தூர் ஜாமிஆ மஸ்ஜித் என்பது குறுப்பிடத்தக்கது.
வின்முட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கும் “மினார் 110 அடி உயரம்” கொண்டதாகும்.
இந்த மினார் சுற்றியிருக்கும் கிராமங்களுக்கு வி.களத்தூரை அடையாளம் காட்டும் சின்னமாக அமைந்துள்ளது.
இத்தனை சிறப்புமிக்க பலரின் உழைப்பின் மூலம் உருவான இந்த பள்ளிவாசல் திறப்பு விழா காண பல ஊர்களுக்கு அழைப்பு விடப்பட்டது.
அதனின் புகைப்படம் -
அடுத்த பதிவில் சந்திப்போம்.....
ஆக்கம் – முஹம்மது பாரூக்.
நமதூரைப் பற்றி தொடராக பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக 9வது பகுதியை பார்க்கலாம். நமதூருக்கு பெருமையை சேர்க்கும் வி.களத்தூர் ஜாமிஆ ...


ஓரிறைக் கொள்கையை தகர்க்கும் ஒடுக்கத்து "புதன்"
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:

இம்மாதத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்ததால் அந்த மாதம் (ஸஃபர்) பீடை மாதம் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் இருந்து வருகின்றது. இந்த மாதத்தில் திருமணம் போன்ற நல்ல காரியங்கள் எதுவும் செய்யக் கூடாது என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு நேரம், ஒரு நாள், ஒரு மாதம் எல்லோருக்கும் நன்மை செய்யக்கூடியது என்று நம்புவதும், அல்லது எல்லோருக்கும் கெடுதி செய்யக்கூடியது என்று நம்புவதும், இறைவன் ஏற்படுத்தியுள்ள நியதிக்கு மாற்றமானதாகும். ஒருவருக்கு மிகவும் நன்மைகள் வந்தடைந்த நாள், இன்னொருவனுக்கு கேடுகள் வந்தடைந்த நாளாக இருப்பதைத் தான் நடைமுறையில் நாம் காண முடிகிறது.
ஒரு நாளில் ஒருவருக்கு அழகான குழந்தை பிறந்திருக்கும்; அவருக்குப் பக்கத்து வீட்டில் உள்ள ஒருவர் அதே நாளில் மரணமடைந்திருப்பார். நல்லநாள் என்று ஒன்று இருக்குமானால் உலக மக்கள் அனைவருக்கும் அந்த நாளில் நல்லவையே நடக்க வேண்டும்; கெட்ட நாள் என்று ஒன்று இருக்குமானால் உலக மக்கள் அனைவருக்கும் அந்த நாளில் கெட்டவை மட்டுமே சம்பவிக்க வேண்டும்.
எந்த நாளாக இருந்தாலும் அதில் சிலருக்கு நல்லவை ஏற்படுவதும், சிலருக்கு கெட்டவை ஏற்படுவதும் தான் நடைமுறை உண்மை. இதைப் புரிந்து கொள்ள பெரிய ஆதாரம் தேவையில்லை. தங்கள் வாழ்க்கையிலேயே அனைவரும் அனுபவரீதியாக உணர முடியும்.
ஸஃபர் மாதத்தில் நபியவர்கள் நோய் வாய்ப் பட்டதினால் அந்த மாதமே பீடை மாதம் என்றால், ஸஃபர் மாதத்தில் நபியவர்கள் மேற்கொண்ட ஹிஜ்ரத் பயணம் மகத்தான வெற்றியை ஏற்படுத்தியுள்ளதே. அந்த பயணத்திற்குப் பின்பு தான், இஸ்லாம் தனக்கென ஒரு நாட்டையே நிறுவ முடிந்தது; சிந்திக்க தெரிந்தவர்களுக்கு இவை போதுமானதாகும். இதே ஸஃபர் மாதத்தின் இறுதி புதன்கிழமையில் தான் நபியவர்கள் குணமடைந்து குளித்தார்களாம்.
அதனால் நாமும் ஒடுக்கத்துப் புதன் அன்று குளித்து நமது முஸீபத்துக்களை நீக்க வேண்டுமாம். இந்த மூட நம்பிக்கையின் பெயரால் பல மடமைகள் நடக்கின்றன. அதாவது அன்றைய தினம் கடல், குளம், ஏரி, அருவி போன்ற நீர்நிலைகளில் குளிப்பது, பனை ஓலை, பீங்கான் தட்டுகளில் ஏதேதோ எழுதி கரைத்துக் குடிப்பது போன்ற நடவடிக்கைகள் இஸ்லாத்திற்கு நேர் எதிரானதாகும். அந்த நளை பீடை நாள் என்று ஒதுக்குவது அல்லாஹ்வுக்கு இணை வைப்பதான செயலாகும்.
அல்லாஹ் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ''ஆதமின் மகன் என்னை வருத்தப்படுத்துகிறான். (அதாவது) காலத்தை அவன் திட்டுகிறான். ஆனால் நானோ காலமாக இருக்கிறேன். காலத்தின் அனைத்து அதிகார மும் என் கைவசமே உள்ளது. இரவையும் பகலையும் நானே மாறி மாறி வரச் செய்கிறேன்''. (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5/4826, 6/6181)

அறியாமைக் கால அரபு மக்கள் எது நடந்தாலும் அதைக் காலத்துடன் இணைத்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். காலம்-தான் அவரை அழித்து விட்டது; மோசமான காலம்; நாசமான காலம் என்றெல்லாம் அறியாமைக்கால மக்கள் பேசி வந்தனர். காலம் என்பது சம்பவங்கள் நிகழும் ஒரு நேரமே தவிர, அதற்கு ஆக்குகின்ற, அழிக்கின்ற ஆற்றல் எதுவும் கிடையாது. இரவு பகல் மாற்றமே காலமாகும். அப்படியிருக்க, ஒருவர் காலத்தை சபிக்கின்றார் என்றால், காலமாற்றத்தை உருவாக்கும், ஆக்கத்தையும், அழிவையும் ஏற்படுத்தும் அல்லாஹ்வையே அவர் சபிக்கின்றார் என்று அர்த்தம். அல்லாஹ்வை அவர் சபிப்பதன் மூலம் அல்லாஹ்வுக்கு எந்த தீங்கையும் அவர் ஏற்படுத்திட முடியாது என்றாலும், அல்லாஹ்வின் கோபத்திற்கு அவர் ஆளாகித் தமக்கு தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார். எனவே தான் அல்லாஹ் நானே காலமாக இருக்கிறேன், அதாவது கால மாற்றத்தை ஏற்படுத்துகின்றவன் என்கிறான். (1: ஃபத்ஹுல் பாரி)
''ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது. அவன் தான் எங்கள் பாதுகாவலன் என்று (நபியே) கூறுவீராக!'' (அல்குர்ஆன் 9:51)
அல்லாஹ்வின் விதியை மாற்றக் கூடிய ஆற்றல் கடல், குளம், ஏரி, அருவிகளில் குளிப்பது, மற்றும் ஓலை, தட்டுகளில் எழுதி கரைத்துக் குடிப்பது இவற்றில் இருப்பதாக நம்புவது ஷிர்க் (இணை வைத்தல்) ஆகும். குறிப்பிட்ட தினத்தில் முஸீபத்து இறங்கினாலோ, அவற்றின் பரிகாரமாக ஏதாவது செய்ய வேண்டும் என்றிருந்தாலோ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட வேறு யார் அதை அறிவித்துத் தர முடியும்? ஏனெனில் (இறை நம்பிக்கையாளர்கள்) உங்களிலிருந்து ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பப்படுவது அவருக்கு மிக்க வருத்தத்தை ஏற்படுத்தும். மேலும் அவர் உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர். இறைநம்பிக்கையளர்கள் மீது கருணையும் இரக்கமும் உடையவர் என்று அல்லாஹ் தனது நெறி நூலாகிய அல்குர்ஆனில் தவ்பா என்ற 9வது அத்தியாயத்தில் 128வது வசனத்தில் கூறுவதை சிந்திப்பீர்களாக!
அகில உலகத்திற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்டவர், நம்பிக்கையாளர்கள் மீது இரக்கமுடையவர், நம்பிக்கையாளர்கள் துன்பப்படுவதை சகிக்காதவர் இந்த நாளின் முஸீபத்தை பற்றி அறிவிக்காமல் சென்றுவிட்டார்களா?
சின்ன நகஸு(சு), பெரிய நகஸு(சு) என்றெல்லாம் கணித்து மக்களுக்குத் தொண்டு(?) செய்கிறோம் என்று கூறுகின்றவர்களும், பால்கிதாபு, மோர்கிதாபு என்று சொல்லி மக்களை மடமையிலேயே நீடித்திருக்க வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளவர்களும் கொஞ்சம் சிந்திப்பீர்களாக!
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள்: என்மீது சொல்லப்படும் பொய் (உங்களில்) ஒருவரின் மீது சொல்லப்படும் பொய்யைப் போன்ற தன்று, யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்!
சொல்லப்படும் பொய்யைப் போன்றதன்று, யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்! (அறிவிப்பாளர்: முகீரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரி: 1291)
ஒடுக்கத்துப் புதனுக்கு சொல்லபப்படுகின்ற காரணமே முதலில் சரியில்லை :
ஸஃபர் மாதத்தின் இறுதியில் குளித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குணமடைந்தது பூரண குணமல்லவே, அதற்கு இருவாரங்கள் கழித்து அவர்கள் மரணத்தைத் தழுவிக் கொண்டனரே! (இன்னாலில்லாஹிஸ) சரியான அறிவிப்பின் படி வியாழக்கிழமை அன்று குளித்து விட்டு, மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று மக்களுக்கு நீண்ட பிரசங்கம் (ஜும்ஆ) செய்தார்கள் என்று தானே உள்ளது (ஆதாரம்: அல்பிதாயா, வன்னி ஹாயா) இந்த அடிப்படையில் ஓடுக்கத்து வியாழன் என்றெல்லவா சொல்ல வேண்டும்?
அன்றைய அரபு மக்கள் ஷவ்வால் மாதத்தை பீடை மாதமாகக் கருதி இருந்தனர். அந்த நாளில் எந்த நல்ல காரியங்களையும் நடத்தாது இருந்தனர். மடமை எண்ணத்தை தகர்த்தெறியும் வகையில் அறிவுப் பேரொளி அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், நான் ஷவ்வாலில் தான் திருமண முடிக்கப்பட்டேன். ஷவ்வாலில் தான் என் இல்லறத்தைத் துவங்கினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு என்னை விட உகந்த மனைவியாக யார் இருந்தார்கள்? என்று கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம், அஹ்மத்)
.....நீங்கள் பீடை மாதம் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்ற ஷவ்வாலில் திருமணம் முடித்த நான் எவ்வளவு மகிழ்வோடு வாழ்ந்து இருக்கிறேன் என்று அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கேட்டது இன்று ஸஃபர் மாதத்தை பீடையாகக் கருதுவோருக்கு பொருந்தாதா? சிந்தியுங்கள்!
இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் இந்த ஒடுக்கத்து புதனில் புதைந்து இருக்கின்றன. இக்கேள்விகள் அனைத்தும் சாதாரணமானவை அல்ல; இறை நம்பிக்கையா? இறை நிராகரிப்பா (குஃப்ரா)? என்பதை எடை போடும் ஜீவாதார மான கேள்விகள்.
எனவே ஒடுக்கத்து புதனை ஓரங்கட்டுவோம்; அதன் நிழலில் கூட நிற்க மாட்டோம் என சபதம் ஏற்போம். அல்லாஹ் போதுமானவன்.
இஸ்லாமிய ஹிஜ்ரா நாள்காட்டியில் ஸஃபர் மாதத்தில் அன்றைய அரபு மக்கள் வணிக நோக்கத்திற்காக சிரியா போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வது வழக்...



வி.களத்தூர் செய்தி

இஸ்லாம்

சமுதாய செய்திகள்


மருந்துவம்

இந்தியா

வளைகுடா


தகவல்
