மக்காவில் நடைபெற்ற கிரேன் விபத்தில் பலியானோருக்கு இரத்த ஈட்டுத்தொகை கிடையாது கடந்த 2015 ஆம் ஆண்டு புனிதமிகு மக்காவின் ஹரம் ஷரீஃப் மஸ்ஜிதின் கிழக்குப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேன் சாய்ந்ததில் சுமார் 108 பேர் மரணமடைந்தனர். 238 பேர் காயமடைந்தனர். அப்போது இச்சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட மன்னர் சல்மான் இறந்தவர்களுக்கு தலா 1 மில்லியன் ரியால்கள் மற்றும் நிரந்தர ஊனமடைந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரியால்களையும் நஷ்டஈடாக வழங்க உத்தரவிட்டிருந்தார்.
மன்னரின் நல்லெண்ண நஷ்டயீட்டிற்கு மேலதிகமாக திய்யா (diyyah) எனப்படும் இரத்த ஈட்டுத்தொகை (blood money) குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இறந்தவர்களுக்காகவோ காயமடைந்தவர்களுக்காகவோ எத்தகைய இரத்த ஈட்டுத்தொயையும் கட்டுமான ஒப்பந்த நிறுவனமான பின்லாடின் குரூப் தர வேண்டியதில்லை என நேற்றுமுன் தினம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பை வழங்குமுன் தொழில்நுட்பம், பொறியியல், இயந்திரவியல், புவியியக்கவியல் அறிக்கைகளுடன் சவுதி வானிலை மையத்தின் முன்னறிப்புக்கள் என அனைத்தும் கவனமாக பரிசீலிக்கப்பட்டதின் அடிப்படையில் கிரேன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததில் எத்தகைய விதிமீறலும் காணப்படவில்லை மேலும் அந்தக் கிரேன் அவ்விடத்திலேயே முன்அனுமதியின் பேரில் 2 ஆண்டுகளாக அங்கேயே கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்ததையும் கருத்திற்கொண்டு இது இயற்கை சீற்றத்தால் நடந்த விபத்து என இத்தீர்ப்பினை வாசிப்பதாக நீதிபதி குறிப்பிட்டார்.
எனினும், அன்று பணியிலிருந்த 13 கிரேன் ஆப்பரேட்டர்களையும் குற்றவாளிகள் என அறிவித்துள்ளதை மேல் முறையீடு செய்யப்போவதாக பின்லாடின் நிறுவனம் அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.