புனித ஹஜ் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவருக்கும் கட்டாய மூளைக்காய்ச்சல் மற்றும் இன்புளூயன்ஸா ஜூர தடுப்பூசி போடப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சர்வதேச சுகாதார நிறுவனத்தின் (WHO) வழிகாட்டுதலின்படி இத்தகு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சவுதியின் அனைத்து விமான நிலையங்கள், கப்பல் துறைமுகங்கள் மற்றும் தரைவழி உள்நுழைவு மையங்களில் உள்ள சுகாதார மையங்களில் 24 மணிநேரமும் யாத்ரீகர்களுக்கு தேவையான மருந்துகள், ஊசிகள் மற்றும் தடுப்பு மருந்துகள் தேவையான அளவு இருப்புக்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே, யாத்ரீகர்களுக்கள் தாங்களுக்குத் தேவையான நோய்த் தடுப்பு மருந்துகளை எடுத்து கொள்வது சம்மந்தமான வழிகாட்டுதல் அந்தந்த நாட்டு சவுதி தூதரகங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி மூளைக் காய்ச்சலுகான ஊசி கட்டாயம் என்றும் இன்புளூயன்ஸா ஜூர ஊசியை விரும்பினால் போட்டுக் கொள்ளலாம்.
சுகாதார அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் ஹஜ் யாத்ரீகர்களுக்கு மருத்துவ உதவிகளை மேற்கொள்வதற்காக 25 பெரிய மருத்துவ மனைகளும் 155 ஹஜ் காலத்தில் மட்டும் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களும் புனிதத் தலங்களான அரபா, மினா, மக்கா, மதீனா மற்றும் கிங் அப்துல் அஜீஸ் மெடிக்கல் சிட்டி ஆகிய பகுதிகளில் இயங்குகின்றன.
இவற்றில் தீவிர கண்காணிப்பு அலகுகளில் (ICU) உள்ள 500 மற்றும் 550 அவசரகால சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் உட்பட 5,000 படுக்கைகள் உள்ளன. இவற்றுடன் கூடுதலாக புனித ஹரம் ஷரீஃபில் உள்ள மருத்துவ மனையில் அவசரகால சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
100 சிறிய ரக ஆம்புலன்ஸ்கள் புனித நகர்களை சுற்றி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் அருகிலிருக்கும் மருத்துவ மனையில் ஹஜ் யாத்ரீகர்களுக்கு உடனடி சிகிச்சை கிடைக்கச் செய்ய இயலும் என்றும் சவுதி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.