ஐடா எஸ். ஸ்கட்டர் 1870 ஆம் ஆண்ட டிசம்பர் 9-ம் தேதி பிறந்தார். எட்டு வயது வரை தமிழ்நாட்டில் இராணிப்பேட்டையில் வளர்ந்த ஐடா பிறகு தன் பெற்றோர்களுடன் தாயமானாமெரிக்காவுக்கு சென்றார். அதன்பின் சமயத் தொண்டுக்காக ஜப்பான் நாட்டுக்குப் பயணமானார். அதனால் நார்த் பீல்டில் உள்ளகிறித்துவப் பெண்கள் பள்ளியில் சேர்ந்துவிடுதியில் தங்கியிருந்துபடிப்பைத் தொடர்ந்தார்.
ஐடா பள்ளியை முடித்த பிறகு தாயாரின் உடல்நிலை சரி இல்லாததால் உடனே இந்தியாவுக்கப் புறப்பட்டுவிட்டார். அப்போது ஒருநாள் ஆண் மருத்துவரிடம் மருத்துவம் பெற மாட்டோம் என உயிர்நீத்த முஸ்லிம் பெண்களை கண்டு மனவேதனை அடைந்தார்.
இதையடுத்து வேலூரில் பெண்களுக்கென தனி மருத்துவமனையை கட்டவேண்டும் என முடிவெடுத்த ஐடா அமெரிக்காவில் மருத்துவம் படித்து முடித்தார். இதையடுத்து பெறும் பொருள் உதவியை பலரிடம் சேகரித்த ஐடா வேலூரில் மகளிருக்கான CMC மருத்துவமனையை கட்டி முடித்தார். இன்றளவும் அங்கு பெண்களுக்காக பெண் மருத்துவர்களே சிகிச்சை அளித்து வருகின்றனர்.
1901-ம் ஆண்டு ஜனவரிமுதல் தேதி டாக்டர் ஐடா வேலூரில் தன் மருத்துவ தொண்டைத் தொடங்கினார். 1904-ம் ஆண்டில் தென்னிந்தியாவில் பரவியபிளேக் நோயைத் தடுப்பதில் டாக்டர் ஐடாஅம்மையார் பெரும் பங்கேற்றார். 1909-ல் சிறியபிரஞ்சுகார் ஒன்றைவாங்கினார். அதனுடைய ஹாரனுக்கு ஒரு தனி ஒலி இருந்தது. அந்த ஒலியை இனங்கண்டு கொண்ட மக்கள் அந்த காரை நிறுத்தி மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வார்கள்.
1913-லேயே பெண்களுக்கெனஒருமருத்துவக் கல்லூரிதொடங்கவேண்டுமென்றுடாக்டர் ஐடாதிட்டமிட்டிருந்தாலும் 1918-ல் தானஅதுநிறைவேறியது.
இதற்கிடையில் அம்மையாரை போற்றுவதற்காக இந்திய அரசு கெய்சர்-இ-இந்து என்ற பொற்பதக்கத்தை அளித்தது.
அமெரிக்கா 1935-ல் டி.எஸ்ஸி பட்டம் அளித்து கௌரவித்தது. மேலும் எப்ஏசிஎஸ் என்னும் ஒருமதிப்பியல் பட்டத்தையும் உவந்துதந்தது.
1960-ல் கொடைக்கானலில் ஐடா ஓய்வெடுத்திருந்த பொழுது மே மாதம் 24-ம் நாள் தம் தொண்ணூறாவது வயதில் இயற்கை எய்தினார். வேலுரிலும் கொடைக்கானலிலும் மக்கள் வெள்ளமெனக் கூடித் தம் இறுதி மரியாதையையும் இரங்கலையும் புலப்படுத்தினார்.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.