கத்தார் நாட்டுடனான தூதரக உறவை துண்டிப்பதாக சவுதி அரேபியா பக்ரைன் எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் இன்று கூட்டாக அறிவித்துள்ளன. தீவிரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி தூதரக உறவை துண்டிப்பதாக தெரிவித்துள்ளன.
அத்துடன் கத்தார் நாட்டின் விமானங்கள் கப்பல்களுக்கும் மேற்கண்ட நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து சவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்திவிட்டாதாக கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இத்தகவலை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று வெளியிட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் தொடர் குழப்பம் நிலவும் சூழ்நிலையில் கத்தார் நாட்டைச் சேர்ந்த முக்கிய செய்தி நிறுவனமான அல்-ஜஸீராவை சவூதி அரேபியா அரசு முடக்கியுள்ளது.
சவூதியில் அல்-ஜஸீரா நிறுவனத்திற்கு வழங்கிய உரிமையை ரத்து செய்துள்ளது. மேலும் அந்நாட்டிலுள்ள அல்-ஜஸீரா ஊடக அலுவலகங்களை உடனடியாக மூடவும் உத்தரவிட்டுள்ளது. இதனால் கத்தார் - சவூதி அரேபியா இடையே பணிப்போர் உருவாகியுள்ளது.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.