கோவை(24 அக் 2017): கோவையில் மாயமான ருக்ஷானா என்ற முஸ்லிம் பெண் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து சாஃப்வேர் இஞ்சியினியர் பிரசாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையைச் சேர்ந்த ஹைதர் செரீப் என்பவரின் மகள் ருக்ஷானா, 21. பி.எஸ்சி., பட்டதாரியான இவர், 16ம் தேதி மாயமானார். சாய்பாபா காலனி போலீசில் உறவினர்கள், 19ம் தேதி புகார் அளித்தனர். ருக்ஷானா மொபைல் போனில் இருந்து கடைசியாக, சரவணம்பட்டியை சேர்ந்த தனியார் நிறுவன சாப்ட்வேர் இன்ஜினியரான பிரசாந்த், 25, என்பவருடன் பேசியது தெரிந்தது. பிரசாந்தை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
இதனை அடுத்து பிரசாந்த் கொடுத்த வாக்குமூலத்தை அடுத்து ருக்சானாவை பிரசாந்த் கொலை செய்தது தெரிய வந்தது. அவர் கூறிய இடத்தில் ருக்சானாவின் சடலத்தை கைபற்றிய காவல்துறையினர் அவர் அணிந்திருந்த நகை வாட்ச் ஆகியவற்றையும் பிரசாந்த் புதைத்து வைத்திருந்தத இடத்தில் கைபற்றினர்.
நகைக்காக கொலை செய்யப்பட்டதாக வழக்கை திசை திருப்ப நகையை பிரசாந்த் புதைத்து வைத்தது தெரிய வந்தது. மேலும் இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா? என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே பிரசாந்துக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ருக்சானாவின் பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.