கடந்த 2014ம் ஆண்டில் மட்டும் 12 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட 2212 பேர் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக ருமேனியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து Lorena என்ற சிறுமி கூறுகையில், கடவுள் எனக்கு அழகான குழந்தையை கொடுத்துள்ளார், இதில் என்னவொரு சிரமம் என்றால் நானும் குழந்தை தான் என தெரிவித்துள்ளார். தனது காதலனுடன் வசித்து வரும் Lorena, திட்டமிடாமல் வாழ்ந்ததே இதற்கு காரணம் என தெரிவிக்கிறார்.
மற்றொரு சிறுமியான Diana கூறுகையில், தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தவுடன் கதறி அழுததாகவும், தன்னுடைய வாழ்க்கையே நாடகத்தன்மை நிறைந்ததாக மாறிப்போயுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
இதற்கு காரணம் ரோமா என்ற சிறுபான்மை இன மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே என நம்பப்படுகிறது.
ருமேனியாவில் Save TheChildren என்ற அமைப்பை நடத்தி வரும் Gabriela Alexandrescu என்பவர் கூறுகையில், புலம்பெயர்வு மற்றும் ஏழ்மையே இளவயது கர்ப்பத்திற்கு முதன்மை காரணம். அதுமட்டுமின்றி சிறுமிகளுக்கு போதிய உடல்நலம் சார்ந்த கல்வியறிவு இல்லாததும், அவர்கள் தாத்தா, பாட்டிகளின் அரவணைப்பில் வளர்வதும் இதற்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் இளவயதிலேயே குழந்தையை பெற்றெடுப்பதால் மனநலன் சார்ந்து பல்வேறு பிரச்னைகளை அவர்கள் சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.