சவூதி அரேபியா கத்தார் உறவு முறிவு தொடர்பான காரணத்தை ஒரே பதிவில் சொல்ல இயலாது. நூற்றுக்கணக்கான பதிவுகளில் சொல்லக்கூடிய அளவிற்கு அவ்வளவு விசயங்கள் இருக்கிறது. அனைத்து விசயங்களையும் கூர்ந்து கவனிக்கும்போது சில விசயங்களில் சவூதி மீது நியாயம் இருக்கிறது. சில விசயங்களில் கத்தார் மீது நியாயம் இருக்கிறது.
எனவே அது தொடர்பான செய்திகளை நேரம் கிடைக்கும்போது சொல்வோம். இப்போது நாம் சொல்ல விரும்புவது என்னவென்றால், சவூதி அரேபியாவும், கத்தாரும் மார்க்கத்திற்காக, குர்ஆன், ஹதீஸுக்காக பிரிந்திருந்தால் நிச்சயமாக உலக முஸ்லிம்கள் குர்ஆன், ஹதீஸின் பக்கம் நிற்க வேண்டும்.
ஆனால் இவ்விரு நாடுகளும் பல்வேறு காரணங்களால் யூத இஸ்ரேலிய சூழ்ச்சியின் அடிப்படையில் பிரிந்துள்ளார்கள்.
இந்த நிலையில் உலக முஸ்லிம்கள் சமூக வலைத்தளத்தில் ஒரு சாரார் சவூதியை திட்டி எழுதி, இன்னொரு சாரார் கத்தாரை திட்டி எழுதி வருவது தான் யூதர்களின் வெற்றியே அடங்கியுள்ளது. நேற்று வரை ஒன்றாக இருந்த முஸ்லிம்களை இன்று இரு வேறாக பிரித்து, பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் வெற்றிபெற்று நம்முடைய விரல்களை வைத்தே நம்முடைய கண்களை குத்தி குளிர் காய்ந்து வருகிறது யூத கூட்டம்.
சவூதியை திட்டியோ கத்தாரை திட்டியோ நமது சகோதரனின் இரத்தத்தை நாம் குடிக்க வேண்டாம், நம் சகோதரனின் மாமிசத்தை நாம் புசிக்க வேண்டாம். முஸ்லிம்களாகிய நமக்கு சவூதியும், கத்தாரும் இரு கண்களை போன்று, இரு நாடுகளும் ஏராளமான மனிதநேய உதவிகளை உலகுக்கு செய்துள்ளன. இரு நாட்டிலும் ஏராளமான தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
சவூதி, அமீரகம், குவைத், கத்தார், பஹ்ரைன், ஓமன் ஆகிய 6 நாடுகளும் எப்போதும் போல் ஒற்றுமையுடனும், ராஜ கம்பீரத்துடனும் இருப்பது தான் நமக்கான பெருமை அடங்கியுள்ளது. சவுதி பெரியதா, கத்தார் பெரியதா என்ற போட்டியில் நமது பெருமை அடங்கிவிடவில்லை.
சவூதி வென்றாலும், கத்தார் வென்றாலும் அது உலக முஸ்லிம்களுக்கான தோல்வியே தவிர வேறு ஒன்றுமில்லை !! எனவே உலக முஸ்லிம்கள் அனைவரும் இரு நாடுகளிடம் ஒற்றுமையை மட்டுமே வலியுறுத்துவோம்.
இவ்விரு நாடுகளின் ஒற்றுமைக்கு துருக்கியும், குவைத்தும் பெரிய அளவில் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதேப்போல் ஏனைய முஸ்லிம் நாடுகளும் ஒற்றுமைக்கு முயற்சித்து வருகிறது. புனித மிகுந்த ரமலான் மாதத்தில் இருக்கும் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய தொழுகைகளில் இரு நாடுகளின் ஒற்றுமைக்காக துஆ செய்வோம்.
இன்னொரு பாலஸ்தீனையும், ஈராக்கையும், லிபியாவையும், சிரியாவையும், ஆப்கானிஸ்தானையும் நாம் பார்க்கக்கூடாது. அங்கு லட்சக்கணக்கான நம் சொந்தங்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டதை நாம் மறந்து விடக்கூடாது.
நாம் இழந்தது எல்லாம் போதும், இனியும் இழப்பதற்கு எதுவும் இல்லை.
நேற்றுவரை ஒன்றாக இருந்த நம்மையே இரண்டாக பிரித்து நம்முடைய விரல்களை வைத்தே நம்முடைய கண்களை குத்த வைக்கும் யூத சூழ்ச்சியை முறியடிப்போம்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களின் உம்மத்தை பாதுகாப்பானாக…................
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.