
அமெரிக்காவில் உள்ள தனியார் விமான நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பணிப்பெண்ணாக பணி புரிந்து வருபவர் Charee Stanley. கடந்த ஆண்டு இஸ்லாம் மதம் தழுவிய இவர் அதே நிறுவனத்தில் தொடர்ந்து பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் தன்னுடன் பணிபுரியும் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் தம்மை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக குற்றம்ச்சாட்டியுள்ளார்.
Charee Stanley இஸ்லாம் மதத்தை தழுவிய பின்னர், மதுபானங்களை விமான பயணிகளுக்கு பரிமாறுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
பதிலாக அந்த பணியை தம்முடன் பணியாற்றும் வேறு ஊழியர்களால் செவ்வனே செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த விமான நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் Charee குறித்து நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தது மட்டுமின்றி, Charee தலையை மூடியவாறே வேற்று மொழி நூல்களை வாசிப்பதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே புகார் குறித்து விசாரித்த விமான நிர்வாகம், Charee மீது நடவடிக்கை எடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள Charee தம்மீது மத பாகுபாடு காட்டுவதாக விமான நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்துள்ளது புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.