
தோகா, கத்தார் நாடு பயங்கரவாதத்திற்கு துணை போகிறது. வளைகுடா நாடுகளுக்கு இடையே கையெழுத்தான பயங்கரவாதத்திற்கு எதிரான ஒப்பந்தத்தை அது மீறி விட்டது. இந்த குற்றச்சாட்டுகளுக்காக அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட 6 நாடுகள் கத்தாருடன் தங்களது தூதரக உறவை துண்டிப்பதாக அறிவித்துள்ளன.
இதனைத்தொடர்ந்து அந்த நாடுகளில் உள்ள தூதரக அதிகாரிகள் மற்றும் கத்தார் குடிமக்கள் அனைவரும் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் குவைத் இருதரப்பு இடையே அமைதியை ஏற்படுத்த முயற்சி செய்கிறது.
பயங்கரவாதத்திற்கு துணை செல்கிறது என்ற சவுதி அரேபியா மற்றும் அரபு நாடுகளின் குற்றச்சாட்டை கத்தார் முற்றிலுமாக நிராகரித்துவிட்டது.
இந்நிலையில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரெட்ஸ், எகிப்து மற்றும் பக்ரைன் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என ஒரு 56 பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது. இதனையடுத்து இதற்கு பதிலடியை கொடுத்து உள்ள கத்தார் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்து உள்ளது.
பயங்கரவாத நிதி வழங்கியவர்கள் என சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரெட்ஸ் கூட்டாக விடுத்த அறிக்கையானது மீண்டும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் என்பதை உறுதிசெய்து உள்ளது,
குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என கத்தார் அரசு அறிவித்து உள்ளது.
கத்தார் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்ட பிற நாடுகளைவிட பயங்கரவாத்திற்கு எதிரான எங்களுடைய நிலைப்பாடு ஸ்திரமானது. உண்மையானது புறக்கணிக்கப்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.