"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
6/6/17

சவுதி-கத்தார் விவகாரமா இங்கே மாவீரர்கள் குமறிக்கொண்டு இருக்கிறார்கள். சவுதியின் செயல்பாடுகளை விமர்சிக்க மாட்டீர்களா என கேள்வி எழுப்புகிறார்கள். இந்தியாவில் மேடை போட்டு நாட்டின் பிரதமரையும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியையும் கேள்வி கேட்க்கும் உரிமை அரசியல் சாசனம் வழங்கியுள்ளது.

பேச்சுரிமை எழுதுரிமை இந்தியா ஜனநாயத்தின் அடிப்படை உரிமை.ஆனால் சவுதி சட்டப்படி இந்த நாட்டை பற்றி சாதாரண விபத்து செய்திகளை கூட பகிர கடும் நிபந்தனைகள் இருக்கு. இணையத்தில் சவுதியை விமர்சிக்க கூடாது என கடும் சட்டம் உள்ளது. சவுதியில் நுழையும் போதே இந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்க வேண்டும் என்கிற ஒப்பந்தத்தை ஏற்று தான் நுழைகிறோம்.

இந்நாட்டின் சட்டப்படி எவ்வளவு பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் வேறு நாடுகளில் இருந்து வந்தாலும் புர்கா அணிய வேண்டும் என்றால் அணிந்து தான் ஆக வேண்டும். போதை மருந்து கடத்தினாலோ வைத்திருந்தாலோ தலையை வெட்டு வதாய் இருந்தால் தலை கொடுத்து தான் ஆக வேண்டும்.

அதன் அடிப்படையில் சவுதியை விமர்சிப்பதாக இருந்தால் அந்த தண்டனையை ஏற்று தான் ஆக வேண்டும். இங்கே சவுதியின் அரசியல் விவகாரத்தில் தலையிடவோ சவுதியை பிறப்பிடமாக கொண்டோ நாம் நுழையவில்லை பிழைக்க வந்திருக்கின்றோம். இருபது லட்சம் இந்தியர்கள் இருக்கிறார்கள் அவர்களின் வாழ்வாதார பிரச்சினை குறித்து ஒவ்வொருவருக்கும் அக்கரை இருந்தால் வாய் மூடி இருக்கவும்.

ஒரு நான்கு பங்களா தேஷிகள் ஒரு பெண்ணை கற்பழித்ததால் ஒட்டுமொத்த பங்களாதேஷ் நாட்டின் மீதும் விசா தடை உத்தரவை பிறப்பித்து பல வருடங்கள் அதை நீடித்திருந்தது சவுதி. சமீபத்தில் தான் கடும் முயற்சிகளுக்கு பின் நீக்கப்பட்டது. இங்கே இருந்துக்கொண்டு வீரம் பேசுகிறோம் என எவரேனும் கொந்தளித்து கொண்டு இருந்தால் நாளை இந்தியர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படவும் விசா தடை விதிக்கப்படவும் சவுதி அஞ்சாது என்பதை கருத்தில் கொள்ளவும்.

டிவிட்டரில் சவுதி குடிமகன் சவுதியை விமர்சித்தற்கே கைது செய்துள்ளது. எம்பஸ்ஸியில் டிரான்ஸ்லேட்டர்கள் மூலம் சவுதியில் உள்ள வேறு நாட்டினரின் பதிவுகளும் தீவிரவமாக கண்காணிக்கப்படுகிறது. சவுதி கத்தார் விவகாரம் ட்ரம் வந்து போன பிறகு நடந்தவை அல்ல அதற்கு முன்பிலிருந்தே இருக்கிறது.கத்தார் ஈரானை ஆதாரித்தும் மக்கா விபத்தை விமர்சித்தும் கடும் போக்கை கையாண்டது அதை குறித்து வருத்தம் தெரிவிக்கவும் மறுபரிசீலனை செய்யவும் சவுதி நேரம் கொடுத்தும் கத்தார் மதிக்கவில்லை.

அதே போல் பல ஆதாரங்களை சவுதி சமர்பித்து தான் பொருளாதார தடையை மேற்கொண்டது. இந்த விவகாரமா தேவையில்லாமல் இங்கே பிழைக்க வந்தவர்கள் கருத்து சொல்கிறோம் என்கிற பெயரில் சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.