"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
1/7/16

சுவாதியின் கொலையில் எந்தவித சாட்சியங்களும் முன்வராத நிலையில் தற்போது சூளைமேடு பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் முக்கிய விடயங்களை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், சுவாதியை கொன்ற கொலையாளிதான் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதே ரயில் நிலைய பிளாட்பாரத்தில் சுவாதியின் கன்னத்தில் அறைந்தவன் என்று திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார் தமிழ்ச்செல்வன்.

தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்க்கும் தமிழ்ச்செல்வன், சுவாதியை கொன்றவனை நேரில் பார்த்ததாகவும் சுவாதியை இதற்கு முன் ரயில் நிலையத்தில் பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், செய்தியாளர்களிடம் பேசிய அவர், வழக்கமாக நான் தினமும் காலை 6.30 மணிக்கு நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்திற்கு வந்துவிடுவேன். அங்கிருந்து இரயிலைப் பிடித்து வேலைக்குச் செல்வேன்.
என்னைப் போலவே, பெண் ஒருவரும் அதே நேரத்துக்கு இரயில் நிலையத்திற்க்கு வருவார்.

பத்து நாட்களுக்கு முன்பு, நுங்கம்பாக்கம் நிலைய பிளாட்பாரத்தில் அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அப்போது ஒரு வாலிபர் அந்தப் பெண்ணுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

ஒருகட்டத்தில், அந்தப் பெண்ணின் கன்னத்தில் அவர் மாறி மாறி அறைந்தார்.
அதற்கு அந்தப்பெண் ஏனோ, எதிர்ப்புக் காட்டவில்லை. கொலை நடந்த நாளன்று அதே வாலிபர், நான் நின்று கொண்டிருந்த நடை மேடையில் வேகமாக ஒடியதை பார்த்தேன்.

அவரை சிலர் விரட்டிக் கொண்டு ஒடினர். அந்த வாலிபர்தான் அன்று அந்தப் பெண்ணிடம் தகராறு செய்து கன்னத்தில் அறைந்த வாலிபர் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.

நானும் அந்த வாலிபரை விரட்ட முயற்சி செய்தேன். ஆனால், அதற்குள் அவன் ஓடிவிட்டான். பிளாட்பாரத்தில் கும்பல் கூடியிருந்த இடத்திற்கு ஓடிவந்து பார்த்தபோது, அங்கே அந்தப் பெண் கழுத்திலும், முகத்திலும் இரத்தம் வழிந்த நிலையில் கீழே விழுந்து கிடந்தார்.

அந்தப்பெண்தான், அந்த வாலிபரிடம் ஏற்கனவே கன்னத்தில் அறை வாங்கிய அதே பெண் என்பதைப் புரிந்துகொண்டேன்.
பிறகு, பத்திரிகை செய்திகளில் அந்த பெண்ணின் பெயர் சுவாதி என்று அறிந்தேன். நான் வசிக்கும் சூளைமேடு ஏரியாவில்தான் குடியிருந்தவர் என்பதைக் கேள்விப்பட்ட போது, அதிர்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார் தமிழ்ச்செல்வன்.

சுவாதி கொலை செய்யப்பட்ட போது அந்த சம்பவத்தை நேரில் பார்த்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களில் இருவர் மட்டுமே சாட்சி கூறியுள்ளனர்.
கொலைச் சம்பவத்தை நேரில் பார்க்கா விட்டாலும், கடந்த வாரங்களில் நடந்த நிகழ்வுகளை கூறி சூளைமேடு தமிழ்ச்செல்வன், சாட்சியாகப் பேசத் தொடங்கியிருப்பது இந்த வழக்குக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 comments:

  1. raj kamal01 ஜூலை, 2016

    super

    பதிலளிநீக்கு
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.