
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரசாரம் திடீர் ரத்து செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த தங்க.ஆனந்தன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள காரணமாக அவர் திடீரென மாற்றப்பட்டார். இதனையடுத்து, அவருக்கு பதிலாக நல்லூர் ஒன்றியச் செயலாளர் பாவாடை கோவிந்தசாமி புதிய வேட்பாளராக திமுக தலைமை அறிவித்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தங்க.ஆனந்தன் ஆதரவாளர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இருவர் தங்க.ஆனந்தனுக்கு ஆதரவாக தீக்குளிக்க முயன்றனர். உடன் இருந்தவர்கள் அவர்களை தடுத்து காப்பாற்றினர்.
இந்த நிலையில், கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், அடுத்து விருத்தாசலத்தில் பிரசாரம் மேற்கொள்ள முயன்றார்.
ஆனால், திமுகவினர் போராட்டம் வலுத்தன் காரணமாக விருத்தாசலம் தேர்தல் பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் திடீரென ரத்து செய்தார். இதனையடுத்து நெய்வேலித் தொகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.