அவர் சிதம்பரத்தைச் சேர்ந்தவர். அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். மற்றொரு மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கும்போது இறந்துவிட்டார்.
மருத்துவ நிர்வாகம் முயற்சிகள் பல மேற்கொண்டும் நடராஜன் கோமாவில் இருந்து மீளவில்லை. எனவே மருத்துவமனை நிர்வாகம் அவரை தாயகம் அழைத்துச் செல்லுமாறு அவரது நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து அந்த நிறுவனம் துபாயில் சாதி, சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு சமுதாயப் பணியில் ஈடுபட்டு வரும் ஈமான் அமைப்பினை அணுகியது.
அவரது குடும்பத்தார் ஏழ்மையின் காரணமாக வாடகை கொடுக்கக் கூட வசதியின்றி தெரிந்தவர்கள் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவரை இந்தியாவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க இயலாத நிலையில் அவரது குடும்பத்தினர் இருந்து வருகின்றனர்.
எனவே தமிழக அரசு இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தமிழக மருத்துவமனையில் அவரை அனுமதிக்க உதவிட துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதனையடுத்து தமிழக அரசு மறுவாழ்வுத்துறை கமிஷனர் அலுவலக கடிதம் எண் E1 / 3703 /2014 dt. 02.05.2014 துபாய் இந்திய துணைத் தூதரகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. எனினும் துபாய் ராஷித் மருத்துவமனை நிர்வாகத்தினர், சென்னை அல்லது கடலூர் மருத்துவமனையில் நடராஜன் ராமலிங்கத்தை தாங்கள் அனுமதித்துக் கொள்கிறோம் என்ற உறுதி மொழிக் கடிதம் வழங்கப்படும் நிலையில் மட்டுமே மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்படுவார் எனக் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக மறுவாழ்வுத்துறை இயக்குநரக அதிகாரிகளை தொடர்பு கொண்டும் எவ்வித பலனும் இல்லை. எனவே முதல்வர் ஜெயலலிதா இவ்விஷயத்தில் உடனே தலையிட்டு கடலூர் மாவட்ட மருத்துவமனை அனுமதிக் கடிதத்தை வழங்கி உதவிட உத்தரவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
இது குறித்து தொடர்பு கொள்ள விரும்புவோர் 00971 50 467 43 99 / 00971 50 51 96 433 எனும் அலைபேசி எண்களில் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு உதவிடலாம்.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.