
இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் திடீரென தனது 3ஜி சேவையை 20 ஜிபி 50 ரூபாய்க்கு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்படி அனைவருக்கும் இணைய சேவை வழங்குவதை இலக்காக கொண்டு இந்த சலுகை விலையில் 3ஜி சேவை வழங்க உள்ளதாகவும், மத்திய அரசு மானியத்துடன் இது செயல்படுத்தப்படுவதாகவும், இதை ஒருவரே பயன்படுத்தலாம் அல்லது நாடு முழுவதும் 4 பேருக்கு இதை பகிர்ந்து அளிக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊரக பகுதிகளில் உள்ளவர்களில் குடும்பத்தில் ஒருவர் இந்த பேக்கேஜ் பெற்று, அதை 4 பேருக்கு பகிரலாம். முன்னதாக இவர்கள் பிஎஸ்என்எல் செல்ப்கேர் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என பிஎஸ்என்எல் அலகாபாத் பொதுமேலாளர் ராம் சுப்யாதவ் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், பிஎஸ்என்எல் தரப்பில் இதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. தற்போது பிரபல நிறுவனங்கள் பல ஒரு ஜிபி 3ஜி டேட்டாவுக்கு ரூ.160 முதல் ரூ.250 வசூலிக்கும் நிலையில், அதைவிட 4ல் ஒரு பங்கு கட்டணத்தில் 20 மடங்கு கூடுதல் டேட்டா வழங்குவது பிஎஸ்என்எல்லுக்கு வாடிக்கையாளர்களை அதிகமாக இழுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் இது டிராய் விதிகளுக்கு உட்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.