
என்ற ஏக்கமும் கவலையும்
தற்போது பெற்றோரைப்
பாடாய்ப்படுத்துகின்றது.
தற்போதைய சூழலில்
மாப்பிள்ளை வீட்டார்
கேட்கும் சீரை தானமாகக் கொடுத்தால் தான்
திருமணம்.
அரசாங்க வேலை பார்க்கும் மாப்பிள்ளை என்றால் அவருக்கு ஒரு தொகை,
வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் அவருக்கு
ஒரு சீதனம், கூலி வேலை செய்பவர் என்றால் அவருக்கு ஒரு சீதனம்; என தரகர் கையில் ஒரு பெரிய பட்டியலே இருக்கும்.
பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறதே
என்பதைச் சிந்திக்காமல் சீதனம் வாங்குவதும்
கொடுப்பதும் கலாசாரம் என நமது சமூகம் தவறான எண்ணத்தை வளர்த்துள்ளது.
மகனுக்கு அதிகமா சீதனம் வாங்கினால்தான்
மதிப்பு என்று பலரும், பெண்ணுக்கு நிறைய
சீதனம் கொடுத்தால்தான் மாப்பிள்ளை வீட்டில் கௌரவம் என்று சில பெற்றோரும்
நினைக்கின்றனர்.
மனைவி கொண்டுவரும்
சொத்துக்களை எதிர்பார்த்து வாழ்பவர்கள் என்று ஒட்டுமொத்த ஆண்களையும்
சொல்லிவிட முடியாது. தனது மனைவியையே பெரிய சொத்தாக நினைக்கும்
ஆண்களும் உண்டு. நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏறுவது போல சீதனத்தின் தொகையும்
கூடிக்கொண்டே செல்வதால் இனி பெண் குழந்தை பிறந்தால் கள்ளிபால் கொடுக்கும் நிலை உருவாகலாம்.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.