
அதில், வல்லரசாகவும், முன்னேறிய நாடாகவும் இந்தியா மாற செய்ய வேண்டியவற்றை பட்டியலிட்டுள்ளார். ஒரு நாடு சிறந்த, வலிமையான நாடாக மாற வேண்டுமென்றால், கீழ்க்கண்ட துறைகளில் தன்னிறைவு காண வேண்டும் என வரையறுக்கிறார்.
1. வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல்
2. மருத்துவம் மற்றும் ஆரோக்கியம்
3. தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பம்
4. அடிப்படை கட்டமைப்பு, தடையற்ற மின்சாரம், சீரான சாலை போக்குவரத்து.
5. மிகமுக்கிய உயர் தொழில் நுட்பத்தில் தன்னிறைவு.
2. மருத்துவம் மற்றும் ஆரோக்கியம்
3. தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பம்
4. அடிப்படை கட்டமைப்பு, தடையற்ற மின்சாரம், சீரான சாலை போக்குவரத்து.
5. மிகமுக்கிய உயர் தொழில் நுட்பத்தில் தன்னிறைவு.
அப்துல் கலாம் டுவிட்டர் சமூக இணைய தளத்தில் தனது நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் மற்றும் தனது கருத்துக்களை டுவிட் செய்வது வழக்கம். அவரது டுவிட்களை 14 லட்சம் பேர் பாலோ செய்கின்றனர். ஷில்லாங்கில் நடைபெறும் ஐ.ஐ.எம். விழாவில் கலந்து கொள்ள புறப்படுவதாக அவர் நேற்று காலை கடைசியாக டுவிட் செய்திருந்தார்.
மதுரையை கவர்ந்த கலாம்
ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் அப்துல் கலாம் மதுரைக்கு அடிக்கடி வந்து பள்ளி, கல்லூரி மற்றும் விழாக்களில் பங்கேற்றார். கடைசியாக, கடந்த 18ம் தேதி மதுரைக்கு வந்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க விழாவில் பேசினார். அப்போது ‘இயற்கை விவசாய முறை நன்கு வளர வேண்டும். இயற்கை உணவுகளை உட்கொள்ள வேண்டும். கிராமங்களில் இயற்கை முறையில் விளைவித்த காய்கறி அங்காடிகள் திறக்க வேண்டும்’ என வலியுறுத்தினார்.
குடும்பத்தின் கடைக்குட்டி
அப்துல் கலாம் தனது பெற்றோருக்கு கடைசி பிள்ளையாக பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் 4 பேர். உடன் பிறந்த இரண்டு அண்ணன்கள், ஒரு அக்காள் ஏற்கனவே இறந்துவிட்டனர். மூத்த அண்ணன் முகமது முத்துமீரான் மரைக்காயர் (92) உள்ளார். ஐந்தாவதாக பிறந்த அப்துல் கலாம் தற்போது இறந்துவிட்டார்.
அப்துல் கலாம் பொன்மொழிகள்…
முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. முடியும் என்று நம்பும் மனிதனால்தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது.
எனவே நண்பர்களே, முடியும் என்ற நம்பிக்கை கொண்ட 54 கோடி இளைஞர்கள்தான், இந்திய நதிகளை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்ட இளைஞர்கள்தான் அனுபவத்தின் துணை கொண்டு வெற்றியை காண வேண்டும்.
நதிகளை இணைக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும்… “முடியும்’’ என்ற நம்பிக்கை முதலில் ஓவ்வொரு இந்தியனுக்கும் வேண்டும் .உறுதியும், நம்பிக்கையும் தலைமைப் பண்பும் கொண்ட நம்முடைய இளம் ஆண்களும் பெண்களும் ராணுவப்படைகளில் ஆர்வமுடன் சேர முன்வர வேண்டும் என்பது என் ஆசை.
இன்றைய வேகமான அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக ராணுவத்தின் எத்தனையோ சவாலான, சுவாரஸ்யமான வேலைகள் உருவாகி வருகின்றன. இளைஞர்களுக்கு அவை பெரும் சாகசங்களாகத் திகழும்.
“கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு. சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும். நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி.
ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.இமயத்தின் உச்சியை எட்டித் தொடுவதாயினும் சரி அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை அடைவதாயினும் சரி, மேலே ஏறிச் செல்ல ஒருவருக்கு மிக்க மனவுறுதி தேவைப்படுகிறது.
”தேர்வு முடிவுகள்தான் வாழ்க்கையில் இறுதியானது என மாணவர்கள் கருத வேண்டாம்.கடவுள் நம்முடன் இருப்பாரானால், ஒருவரும் உங்களுக்கு எதிராகச் செயல்பட முடியாது.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.