ஒரு 7 அல்லது 10 வருடங்களுக்கு முன்பு பார்த்தால் வி.களத்தூர் இளைஞர்கள் எங்கே சந்தனக்கூடு நடக்கிறது, எங்கே ஆர்க்கெஸ்ட்ரா நடக்கிறது என்று தேடி போய் அணாச்சாரங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.
கடந்த 5 ஆண்டுகளாக நமதூரிலேயே அந்த அணாச்சாரங்கள் நடைப்பெற்று வருகிறது, இளைஞர்களுக்கு சொல்லவா வேண்டும் ஒரே ஆட்டம் பாட்டம், குடி கும்மாளம் குட்டி கலாட்டா ரகளைனு ஒரு கை பார்த்திடலாம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் இன்றைய இளைஞர்கள் அப்படி எந்த ஒரு கீழ்தரமாண செயலையும் செய்யவில்லை மாறாக, இரண்டு மூன்று வருடங்கள் பொருத்து பார்த்தார்கள் கடைசியில் பொங்கி எழுந்தே விட்டார்கள்.
நோட்டீஸ் பிரச்சாரம், போஸ்டர் பிரச்சாரம், வீடு வீடாக பிரச்சாரம், பொதுக்கூட்டம் என இப்படி எல்லா வழிகளையும் யாருடைய தயவும் இன்றி ஒட்டு மொத்த இளைஞர்களும் ஒன்று கூடி சந்தனக்கூடு என்ற பெயரில் நடக்கும் அனாச்சாரத்திற்க்கு எதிராக குரல் கொடுத்தார்கள். கடந்த பத்து ஆண்டுகளில் நமதூர் இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் ஆரோக்கியமானது மற்றும் வரவேற்க்கத்தக்கது.
பிரச்சார களத்தில் நம் இளைஞர்களை பார்த்து பலரும் நீங்கள் சந்தனக்கூடு பார்க்காமல் இருக்க போகிரீற்களா, நீங்கள் சரியாக இருக்கிரீற்களா என்றெல்லாம் கேலி பேசினார்கள். நம் இளைஞர்கள் சொல்வதொன்று சொய்வதொன்று என்று இல்லாமல் இந்த விஷயத்தில் சரியாக நடந்து கொண்டார்கள்.
சந்தனக்கூட்டை முழுவதும் புறக்கணித்தார் முடிவு செய்து அதற்காகவே சந்தனக்கூடு இரவு அன்று கிரிக்கெட் விளையாட்டு போட்டியை நடத்தி அன்று இரவு முழுவதும் அங்கேயே களித்தார்கள்.ஒரு இளைஞர் கூட சந்தனக்கூடு பக்கம் எட்டிகூட பார்க்கவில்லை. இளைஞர்கள் மட்டும் இல்லாமல் பள்ளி பயிலும் சிறு மாணவர்களும் இந்த சந்தனக்கூட்டில் கலந்துக்கொள்ள வில்லை.
அவர்களின் வாலிப வயதையும் தாண்டி தங்களை கட்டுப் படுத்திக்கொண்டு நமதூருக்கு ஒரு முன் மாதிரியாக திகழ்கிறார்கள். அது மட்டுமில்லாமல் தங்களின் பிரச்சாரத்தின் விளைவாக பலரை சந்தனக்கூட்டிற்க்கு போவதை விட்டும் தடுத்திருக்கிறார்கள். பெரியவர்கள் ஆணகள் பெண்கள் தாய்மார்கள் ஆகிய நாம் இதை நிச்சயம் என்னிபார்த்து படிப்பினை பெறவேண்டும்.
அவர்களின் இந்த செயலை பாராட்ட வேண்டும். நமதூர் இளைய சமூகம் தெளிவான பார்வையோடும், சிந்தனையோடும் சரியான பாதையில் பயனிக்கிறார்கள். அடுத்து வரும் தலைமுறையும் சரியான பாதையில் பயணிக்கும் என்பதற்க்கு இவர்களின் இந்த செயல்பாடு நமதூர் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையும் என்று நம்புகிறேன். இதை இன்னொறு ஜல்லிகட்டு போராட்டமாக நான் பார்க்கிறேன். இறுதியாக நமதூர் இளைஞர்களுக்கு.......
ஒரு சல்யூட்.....
- பைசல் அஹமது. வி.களத்தூர்
வி.களத்தூர் இளைய தலைமுறைக்கு ஒரு சல்யூட்...
ஒரு 7 அல்லது 10 வருடங்களுக்கு முன்பு பார்த்தால் வி.களத்தூர் இளைஞர்கள் எங்கே சந்தனக்கூடு நடக்கிறது, எங்கே ஆர்க்கெஸ்ட்ரா நடக்கிறது என்று தே...
மேலும் படிக்க »