பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிப்பது எப்படி?
- ஒரு டம்ளர் தண்ணீரில் அரிசியை போட்டு பார்க்கும் போது, அது போட்டவுடன் மிதந்தால் பிளாஸ்டிக் அரிசி இல்லை என்று அர்த்தமாகும்.
- தீப்பெட்டி கொண்டு அரிசியை கொளுத்திப் பார்க்கும் போது, பிளாஸ்டிக் வாடை வந்தால், அது பிளாஸ்டிக் அரிசியாகும்.
- வடித்த சாதத்தை 3 அல்லது 4 நாட்கள் வைத்திருந்து பார்க்கும் போது, அதில் பூஞ்சை வராமல் இருந்தால், அது பிளாஸ்டிக் அரிசியாகும்.
- ஒரு கடாயில் எண்ணெய்யை ஊற்றி, காயவைத்து அதில் சிறிது அரிசியை போட வேண்டும். அப்போது அந்த அரிசி பொரிந்தால், அது நல்ல அரிசி என்று அர்த்தம்.
- அரிசியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் போது, அதில் வெண்படலம் போல் மேலே ஒட்டிக் கொண்டு பிளாஸ்டிக் வாடை வந்தால், அது பிளாஸ்டிக் அரிசியாகும்.
- கிரைண்டரில் மாவு அரைக்கும் போது, மாவு வெள்ளையாக வந்தால், அது நல்ல அரிசி. அதுவே மஞ்சள் நிறத்தில் வந்தால், அது பிளாஸ்டிக் அரிசியாகும்.
பிளாஸ்டிக் உணவுப்பொருளை சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து?
- பிளாஸ்டிக் கலந்த உணவு பொருட்களை சாப்பிட்டால், அது செரிமானக் கோளாறு, புற்றுநோய், சிறுநீரக கோளாறு போன்ற நோய்களை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தாக்கிவிடும்.
- மண்ணில் மக்காத தன்மைக் கொண்ட பிளாஸ்டிக் கலந்த உணவை சாப்பிடுவதால், அது உடலில் உள்ள ஜீரண உறுப்புகளை பாதித்து, வயிற்று வலி மற்றும் செரிமான கோளாறு பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.