பிஸ்வஜித்தின் உடலை அடக்கம் செய்வதற்கு அவரது பெற்றோரிடம் பணமோ ஆட்கள் உதவியும் இல்லை. இதனால் அவரது பெற்றோர் இரவு முழுவதும் மகனின் உடலுடன் அழுதபடி அமர்ந்திருந்தனர்.
இன்று (ஏப்.26) காலை விஷயம் அறிந்த அப்பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் சிலர் அவர்களுக்கு உதவ முன்வந்தனர். பிஸ்வஜித்தின் உடலை சுமந்து செல்வதற்கு தேவையான பொருட்களை சேகரித்து வந்த அவர்கள் 8 கி.மீ. தொலைவில் உள்ள மயானத்திற்கு தாங்களே தோளில் சுமந்து சென்றனர். மேலும் இந்து மத முறைப்படி இந்துக்களின் மந்திரங்களையும் உச்சரித்தபடி சென்றனர்.
சேக்புரா கிராமம் இஸ்லாமியர் அதிகம் வாழும் பகுதி. இந்த கிராமத்தில் இந்து குடும்பங்கள் 2 அல்லது 3 மட்டுமே வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்லாமிய தலைவர் ஒருவர் இதை பற்றி சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை.
கடும் ஏழ்மையையும் தாண்டி ஒற்றுமைக்கு உதாரணமாக இந்த கிராமம் விளங்குகிறது. இந்துக்களும் இஸ்லாமியர்களும் இரு பிள்ளைகளை போன்று உள்ளனர். மற்ற எல்லாவற்றையும் விட நாம் அனைவரும் முதலில் மனிதர்கள். மனிதநேயம் தான் முக்கியம் என்றார்.
தினமலர்26-04-2017.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.