நமதூரைப் பற்றி நமக்கே தெரியாமல் அல்லது நாம் மறந்த விஷயங்கள், ஊரின் வரலாறுகள் என அனைத்துமே தொடராக பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக 5வது பகுதியை பார்க்கலாம்.
நமதூருக்கு பெருமையை சேர்க்கும் வி.களத்தூர் ஜாமிஆ மஸ்ஜித் பற்றி பார்ப்போம் -
பழமை வாய்ந்த இப்பள்ளிவாசல் 1990ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ந் தேதி ரம்ஜான் பெருநாள் வெள்ளிக்கிழமையன்று ஏற்ப்பட்ட கலவரத்தில் பள்ளிவாசல் பெரும் சேதமடைந்தது.
சேதமடைந்த பள்ளிவாசலில் தொழுகை நடத்த இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால் புதிய பள்ளிவாசல் கட்ட அப்போது இருந்த ஜமாத்தார்கள் முடிவு செய்தனர்.
25-08-1991 ஞாயிற்றுக்கிழமை அன்று பள்ளி வேலைகளை ஆரம்பிக்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் S.A. ஹாஜா முகைதீன் தலைமையில், வேலூர் பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் அரபிக்கல்லூரி முதல்வர் மௌலான மௌலவி அல்ஹாஜ் H. கமாலுத்தீன் ஹஜ்ரத் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.
அடுத்த பதிவில் இன்னும் பல விஷயங்களுடன் சந்திப்போம்.........
ஆக்கம் – முஹம்மது பாரூக். வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.