அல்லாஹ்விடத்தில உங்கள் துஆக்கள் ஏன் ஏற்கப்படவில்லை? இதோ அதற்கான 10 காரணங்கள்...
மவ்லவீ அப்துல் பாஸித் அல் புகாரி அவர்களின் பயானில் இருந்து இப்ராஹிம் இப்னு அத்ஹம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி இஸ்லாத்திற்காக வாழ்ந்து பல மக்களை இஸ்லாத்தின் பால் ஈர்த்து தன் உயிரை விட்டவர். ஒரு முறை அவர்கள் வீதிலையே நடந்து சொல்லும்போது மக்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு நீங்கள் சொன்னது போல் அல்லாஹ்வை வணங்கி வாழ்கிறோம் ஆனால் அல்லாஹ் ஏன் எங்கள் துஆக்களை ஏற்று கொள்ளவில்லை என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் 10 காரணங்களை முன் வைத்தார்கள்.
1) நீங்கள் அல்லாஹ் தான் உங்கள் இறைவன் என அறிந்து வைத்து இருக்கிறிர்கள் ஆனால் அதற்கான எந்த உரிமையும் அவனிடத்தில் நீங்கள் கொடுக்கவில்லை.
2) அவனுடைய வேதம் திருக்குர்ஆன் என ஏற்றுக் கொண்டீர்கள் ஆனால் நீங்கள் அதன் படி அமல்கள் செய்யவில்லை.
3) அல்லாஹ் கொடுத்த உணவை உண்டீர்கள் ஆனால் அதற்காக அவனிடத்தில் எந்த நன்றியையும் நீங்கள் செலுத்தவில்லை.
4) அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என ஏற்று கொண்டிர்கள் ஆனால் அவர்களின் வாழ்க்கை முறையை பின்பற்றி வாழவில்லை.
5) ஷைத்தான் உங்கள் எதிரி என ஒப்புகொண்டிர்கள். ஆனால் உங்களின் பல செயல்களில் ஷைத்தானை சேர்த்து கொள்கிறீர்கள்.
6) மரணம் உறுதியானது என நம்புகிறீர்கள் ஆனால் அதற்கான எந்த முன் எர்ப்பாட்டையும் நீங்கள் செய்யவில்லை.
7) சொர்க்கம் உள்ளது உண்மை என ஏற்று கொண்டீர்கள் ஆனால் அதில் உள்ளே நுழைவதற்கு எந்த நல்ல அமலையும் நீங்கள் செய்யவில்லை.
8) நரகம் உண்மை என ஏற்று கொண்டீர்கள் ஆனால் அதில் இருந்து பாதுக்காப்பு பெற எந்த முயற்சியையும் நீங்கள் எடுக்கவில்லை.
9) பிறரின் குறைகளை அலசி ஆராய்கிறீர்கள் ஆனால் உங்கள் குறைகளை மறைத்து கைவிட்டு விடுகிறீர்கள்.
10) மரணித்தவரை கொண்டு போய் அடக்கம் செய்கிறீர்கள் ஆனால் அதில் இருந்து எந்த படிப்பினையும் விழிப்புணர்வும் நீங்கள் பெறவில்லை.
இந்த 10 காரணங்களுக்காக அல்லாஹ் உங்களின் பிரார்த்தனையை செவிமடுக்கவில்லை என கூறினார்கள்.
-மவ்லவீ அப்துல் பாஸித் அல் புகாரி அவர்களின் பயானில் இருந்து..
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.