துபாயில் செயல்படும் ஏடிசிபி (ADCB), டாமக் (Damac), துபை இன்டெர்நெட் சிட்டி மற்றும் எமிரேட்ஸ் டவர்ஸ் ஆகிய மெட்ரோ நிலையங்களில் முதற்கட்டமாக ஸ்மார்ட் மால்கள் எனப்படும் தொடுதிரை வணிக நிறுவனங்களை துபை போக்குவரத்து துறையும் எடிசலாட் தொலைத்தொடர்பு நிறுவனமும் இணைந்து அமைத்துள்ளன.
உயர் வரையறை (High Definition) 3D டிஜிட்டல் டெக்னாலஜியில் 9 சதுர மீட்டர் அளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொடுதிரையயை ஒரே நேரத்தில் இருவர் பயன்படுத்தி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியும்.
நாம் வாங்கும் பொருட்களுக்கான கட்டணத்தையும் டெபிட், கிரடிட் கார்டுகளை பயன்படுத்தி செலுத்திவிட்டால் நாம் குறிப்பிடும் முகவரிக்கு பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டுவிடும்.
மேலும் இந்தத்திட்டத்தின் அடுத்த கட்டமாக பஸ், மெட்ரோ போக்குவரத்திற்கு பயன்படும் நோல்கார்டுகள் மற்றும் மொபைல் போன் பேலன்ஸ் கட்டணங்களை கொண்டும் ஸ்மார்ட் மால்களில் பொருட்களை வாங்கத் தேவையான ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.