உலக அதிசயமான தாஜ் மஹாலை எப்போது இடிக்க திட்டமிட்டுள்ளீர்கள்? என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி, வலதுசாரிகள் மற்றும் வகுப்புவாதத்தைத் தீவிரமாக விமர்சித்து வந்த மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் பெங்களூரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கெளரி லங்கேஷ் கொலை குறித்து திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதையடுத்து சமூக வலைத்தளங்களில் தனிநபர் தாக்குதல்களுக்கும், கேலிகளுக்கும் உள்ளானார். இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரகாஷ் ராஜ், ''நான் தொடர்ந்து கேள்வி எழுப்புவேன். அது என்னுடைய அடிப்படை உரிமை. என் கேள்விகளுக்காக நீங்கள் என்னை படு கேவலமாக விமர்சிக்கிறீர்கள். அதைப்பற்றி கவலையில்லை இதுதான் என்னை மேலும் உங்களை கேள்வி கேட்க தூண்டுகிறது.
உலக அதிசயமாக கருதப்படும் தாஜ் மஹால் நம் எதிர்காலத்தின் கடந்தகால நினைவாக மாறிவிடுமா என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. தாஜ் மஹாலின் அடித்தளம் அருகில் நீங்கள் தோண்ட ஆரம்பித்துவிட்டீர்கள். எப்போது அதை இடிக்க திட்டமிட்டுள்ளீர்கள்?, குறைந்தபட்சம் எங்கள் குழந்தைகளை இறுதியாக தாஜ் மஹாலை காண அழைத்து செல்வோமோ?.
ஜி.எஸ்.டி, கைவினை கலைஞர்களை ஒட்டுமொத்தமாக ஒழித்து வருகிறது. நவம்பர் மாதத்தில் நடைபெறும் அடுத்த ஜி.எஸ்.டி கூட்டத்தில் கைவினை பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை 0% ஆக மாற்ற நடவடிக்கை எடுப்பீர்களா?.
இந்தி மொழியை எங்கள் மீது திணிக்க எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும் நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்க வேண்டும் என்பதற்காகவா? அல்லது எங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்வதற்காகவா?. என்று பல கோணங்களில் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.