"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
26/7/17

தண்ணீரின் அவசியம் : வி.களத்தூர் தண்ணீர் பற்றாக்குறை

அதிகரித்து வருகிறது மக்களுக்கு ஒரு அறிவிப்பு - மு.ஜலால்லுதீன்

”ஒவ்வொரு ஆண்டும் வி.களத்தூரில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. ‘தண்ணீர் சேமிப்பு’ என்ற ஒன்று நடைமுறைக்கு வந்தால் மட்டுமே, பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்கும் கட்டாயம் உருவாகும்.”
 
வீதிகளில் ஆறாக ஓடிக்கொண்டிருந்த தண்ணீர் இன்று, குடிக்க கிடைக்காமல், மக்களை வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளியுள்ளது. குடிநீர் பற்றாக்குறைக்கு வறட்சி காரணம் காட்டப்படுகிறது. ஆனாலும், அதிகப்படியான மழை பெய்யும் காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்காதது; குளம், குட்டைகளையும் அழித்து குடியிருப்புகள் ஏற்படுத்தியது; சிற்றாறுகள், ஓடைகளின் பாதையை தடுத்து நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது உள்ளிட்ட காரணங்களால் இன்று உலகின் பல பகுதிகள் வறட்சியில் சிக்கியுள்ளது.
இங்கெல்லாம் தண்ணீர் மட்டுமல்லாது உணவு பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. இன்று கூட துார்வாரப்படாத ஏரி, குளம், குட்டைகள், ஆறுகளில் ஆக்கிரமிப்பு, கரைகளில் கழிவுகளின் குவியல், தொழிற்சாலைகளின் வேதிப்பொருள்களை ஆற்றில் கலக்கவிட்டது, நிலத்தடி நீரையும் மாசுபட வைத்ததும் தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணங்கள் எனலாம்.
உலகின் 77 சதவீதம் பரப்பு கடல் நீரால் சூழப்பட்டுள்ளது. 23 சதவீத நிலப்பரப்பில் ஏரி, குளம், ஆறுகள் இருந்தும் குடிநீராக வெறும் 2.3 சதவீத நீர் மட்டுமே பயன்படுகிறது. இன்றைய சூழலில், புவி வெப்பமயமாதல் காரணமாக நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து விட்டது. சாதாரணமாக ஆயிரம் அடிக்கு கீழே தான் நீர் கிடைக்கிறது.ஆனாலும், விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில், தண்ணீரை விலை கொடுத்து வாங்கி,விவசாயம் செய்பவர்களும் இன்றுள்ளனர். இதனால், கிராமப்பகுதிகளில் 5 சதவீத நிலத்தில் தான் விவசாயம் நடக்கிறது; அதுவும் சொட்டு நீர் பாசனமாக நடக்கிறது.
இந்நிலையில், இயற்கையாக கிடைக்கும் குடிநீரை ‘மினரல்’ வாட்டர் என்ற பெயரில் பாட்டில்களில் அடைத்து தனியார் மட்டுமன்றி, அரசும் விற்பனை செய்கிறது. இதனால், குடிநீருக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இயற்கை நமக்கு இலவசமாக வழங்கியதை பெறுவதற்கே, இக்கட்டான நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
”மக்கள் பெருக்கம், நகரமயமாதல் காரணங்களுக்காக ஏரி, குளம், குட்டைகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டு விட்டன. கிடைக்கும் நீரைக்கொண்டு, பல்வேறு நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு விவசாயம் செய்யப்பட வேண்டும். 
உலகில் ஏற்பட்டு வரும் குடிநீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு. எனவே, இருக்கும் நீர் ஆதாரங்களை அழியாமல் நாம் காத்துக்கொள்ள வேண்டியது அவசியம். தண்ணீரைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டியது அதைவிட அவசியம். வருமுன் காக்கத் தவறினால், சென்னை போன்ற நகரங்களில் வாடகையை விட தண்ணீருக்கு அதிகம் பணம் கொடுக்க வேண்டிய நிலைமை உருவாகலாம். தட்டுப்பாடு ஏற்பட்டால் துன்பப்படப்போகிறவர்கள்   மக்களே. தண்ணீரை விரயம் செய்ய மாட்டேன் என்று ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுப்போம்.
மு.ஜலால்லுதீன், வி.களத்தூர்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.