"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
13/7/17

சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகள் கத்தாரை தனிமைப்படுத்தியுள்ள நிலையில் கத்தாரில் பால் விநியோகத்தை அதிகரிக்க மாடுகள் விமானத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.

இறக்குமதி செய்யப்பட உள்ள 4000 மாடுகளில் முதல் கட்டமாக 165 ஹால்ஸ்டீன் பால் மாடுகள் ஜெர்மனியில் இருந்து கத்தார் வந்து சேர்ந்துள்ளன. கத்தாரில் வாழும் 2.7 மில்லியன் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய அந்நாடு இறக்குமதி பொருட்களை நம்பியிருக்கும் நிலையில் பிற நாடுகள் விதித்திருக்கும் வான் கடல் மற்றும் நில வழி தடையின் காரணமாக கத்தாரில் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அண்டை நாடுகள் விதித்த கோரிக்கைகளை கத்தார் நிராகரித்த நிலையில் அந்நாடு மீது புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சௌதி அரேபியா தலைமையிலான கூட்டணி நாடுகள் எச்சரித்துள்ளன. செவ்வாயன்று ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் வழியாக கத்தார் ஏர்வேஸ் சரக்கு விமானத்தில் மாடுகள் வந்தடைந்தன.இதற்காகவே அமைக்கப்பட்ட புதிதாக பால் பண்ணைக்கு அம்மாடுகள் அழைத்துச் செல்லப்பட்டன.

கத்தார் நிறுவனமான பவர் இண்டர்நேஷனல் இம்மாடுகளை வாங்கியுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட உள்ள அனைத்து மாடுகளும் வந்தபிறகு நாட்டின் பால் தேவையை 30 சதவிகிதம் வரை பூர்த்தி செய்யலாம் என பவர் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் முத்தஸ் அல் காயாத் ப்ளூம்பெர்க் ஊடகத்திடம் கடந்த மாதம் தெரிவித்தார்.

அல் காயாத்தால் தொடங்கப்பட்டுள்ள ஒரு புதிய பால் நிறுவனத்தால் பொருட்கள் விற்கப்பட உள்ளன. கத்தார் தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதாவும் இரானுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டி செளதி அரேபியா பஹ்ரைன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் கத்தார் மீது அமல்படுத்தியுள்ள தடை ஐந்து வாரங்களுக்கு மேலாக நீடிக்கிறது.

அண்டை நாடுகளால் தனிமைப்படுத்துவதற்கு முன்பு கத்தாரில் விற்கப்பட்ட பெரும்பாலான பால் பொருட்கள் சௌதி அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. துருக்கியில் இருந்து தயிரையும் மொரோக்கோ மற்றும் இரானில் இருந்து உலர்ந்த உணவு பொருட்களையும் கத்தார் தற்போது இறக்குமதி செய்யும் நிலையில் புதிய வர்த்தக வழிகள் மற்றும் உணவு வழங்கும் நாடுகளைத் தக்கவைக்க கத்தார் முயன்று வருகிறது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.