"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
25/5/17

பிறையின் அடிப்படையில் ஒரு மாதம் என்பது 29 அல்லது 30 நாட்கள் என்றும், முஸ்லீம்கள் தங்களுடைய புனிதமிகு ரமலான் நோன்பையும் 2 இரு பெருநாட்களை பிறையை கண்ணால் கண்டு தீர்மானிக்க வேண்டும் என அல்லாஹ்வுடைய தூதர் முஹமது நபி (ஸல்) அவர்களுடைய ஹதீஸ் எனும் வழிகாட்டுதல் நமக்கு சொல்லித் தந்துள்ளது. அதன்படி இன்று வளைகுடா பிரதேசங்களில் ஷஃபான் மாதம் 29 ஆம் நாள் என்பதால் பிறையை தேட வேண்டிய நாளாகும்.

சவுதியின் சுப்ரீம் கோர்ட் இன்று வானில் பிறை தென்படுவதை தேடுமாறும், புறக்கண்ணால் அல்லது பைனாகுலர் எனும் தொலைநோக்கி வழியாக காண்பவர்கள் உடனடியாக அருகிலுள்ள நீதிமன்றத்தில் தங்களது சாட்சியத்துடன் தெரிவிக்குமாறு அல்லது தங்களது பகுதியிலுள்ள அரசின் மையத்தை அணுகி அவர்கள் மூலமாக தங்களின் சாட்சியத்தை அருகிலுள்ள நீதிமன்றத்திற்கு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

ஒருவேளை இன்று பிறை காணப்படாவிட்டால் ஷஃபான் மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டு சனிக்கிழமை அன்று முதல் புனித ரமலான் நோன்பு துவங்கும். சவுதியின் முடிவை பின்பற்றியே அமீரகத்திலும் நோன்பும் பெருநாட்களும் தீர்மானிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.