குறிப்பாக ரமலான் நோன்பு காலத்தில் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்படும். ஏனெனில் குடிக்கும் நீரின் அளவு மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகளை எடுக்கும் அளவு குறைவதால், குடலியக்கத்தில் இடையூறு ஏற்பட்டு, மலச்சிக்கலை சந்திக்கக்கூடும்.
ஆகவே இந்த நோன்பு காலத்தில் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க ஒருசில உணவுகளை சூரியன் உதிப்பதற்கு முன் மற்றும் சூரியன் மறைந்த பின் உட்கொள்ள வேண்டியது அவசியம்.
இங்கு ரமலான் நோன்பு காலத்தில் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதலும் பட்டாயி, பீன்ஸ், கொண்டைக்கடலை போன்றவற்றை நோன்பு மாதத்தில் அதிகம் சேர்த்து வந்தால், அதில் உள்ள நார்ச்சத்துக்களால், மலச்சிக்கல் ஏற்படுவது குறையும்.
பழங்களில் ஆப்பிள், வாழைப்பழம், பப்பாளி, அத்திப்பழம், வெண்ணெய் பழம் அல்லது அவகேடோ போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆகவே இப்பழங்களை அதிகாலையில் நோன்பு ஆரம்பிக்கும் முன் உட்கொள்வது, உடலை நீர்ச்சத்துடனும், ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ளும்.
மெதுவாக செரிமானமாகும் உணவுகளான ஓட்ஸ், கோதுமை, பருப்பு வகைகள், ஆளி விதை போன்றவற்றை ரமலான் நோன்பு மேற்கொள்ளும் காலத்தில் சேர்த்துக் கொள்வது நல்லது. இவை மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.
தோல் நீக்கப்பட்ட சிக்கன், மீன் போன்றவற்றில் கொழுப்புக்கள் குறைவாகவும், அதே சமயம் புரோட்டீன் அதிகமாகவும் உள்ளது. இவற்றை நோன்பு காலத்தில் உட்கொண்டு வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமைப் பெறும். மேலும் நோன்பு ஆரம்பிக்கும் முன் மற்றும் முடிந்த பின் போதுமான அளவு நீரைப் பருக வேண்டும். இச்செயலால் மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.
புரோபயோடிக்ஸ் உணவுப் பொருட்களான தயிரை நோன்பு இருப்பவர்கள் சேர்த்து வர, மலச்சிக்கல் தடுக்கப்படும். எனவே தவறாமல் தயிரை அன்றாடம் எடுத்து வாருங்கள்.
தண்ணீரை அதிகம் பருகுவதோடு, பழச்சாறுகளையும் அதிகம் குடிக்க வேண்டும். இதனால் ரமலான் நோன்பினால் உடல் வறட்சி மற்றும் மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கலாம். அதிலும் இளநீர், தர்பூசணி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், அன்னாசி ஜூஸ், திராட்சை ஜூஸ் போன்றவற்றை பருகுவது இன்னும் நல்லது.
ரமலான் நோன்பு காலத்தில் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு நோன்பை முடிப்பார்கள். ஏனெனில் பேரிச்சம் பழத்தில் வளமான அளவில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் சர்க்கரை போன்றவை உள்ளது. ஆகவே இவற்றை உட்கொண்டால், மலச்சிக்கல் தடுக்கப்படுவதோடு, இரத்த சர்க்கரை அளவு சீராக பராமரிக்கப்பட்டு, மயக்கம் அல்லது தலைச்சுற்றல் ஏற்படுவது தடுக்கப்படும்.
உலர் பழங்கள், பாதாம் போன்றவற்றை நோன்பு இருப்பவர்கள் அதிகம் சாப்பிட வேண்டும். அதிலும் பாதாமில் புரோட்டீன், நார்ச்சத்து போன்றவை அதிகம் இருப்பதோடு, கொழுப்புக்கள் குறைவாக உள்ளதால், இதனை சாப்பிடுவதன் மூலம் நோன்பு காலத்தில் உடல் ஆரோக்கியம் மேம்படுத்தப்படும்.
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.