24 மணி நேரமும் ஸ்மார்போனும் கையுமாம் சுற்றுபவர்களை பார்க்கும் போது, எது அடிமை..? எது ஆளுமை..? என்பதே விளங்காது. பெரும்பாலும் ஸ்மார்ட்போன்கள் தான் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருப்பது போல் தோன்றுகிறது..!
அவசியம் மீறி அத்தியாவசியம் என்ற ஒரு நிலையை அடைந்து விட்ட ஸ்மார்ட்போன்கள் நம்மை ஆள்வதும் அடிமைபடுத்துவதும் ஒரு பக்கம் இருக்க நம்மை ஒட்டுமொத்தமாக பாதிப்படைய செய்கிறது என்பதும் நிதர்சனம் தான். அப்படியாக, ஸ்மார்ட்போன் மூலம் நமக்கெல்லாம் ஏற்படலாம் என்று கருதப்படும் 'ஒரு பாதிப்பை' பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால் நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை ஒதுக்கித்தள்ள ஆரம்பித்து விடுவீர்கள் என்றே கூறலாம்..! அதென்ன பாதிப்பு..?
பாதிப்பு :
உறங்கும்போது ஸ்மார்ட்போனை உடன் வைத்துக் கொண்டு உறங்கும் பழக்கம் கொண்ட இரண்டு பெண்களுக்கு நிலையற்ற ஸ்மார்ட்போன் "பார்வையிழப்பு" பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பார்வை இழப்பு :
நிலையற்ற ஸ்மார்ட்போன் "பார்வையிழப்பு"(transient smartphone "blindness") என்றால் இருட்டில் தொடர்ச்சியாக ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது ஒரு கண்ணில் மட்டும் ஏற்படும் பார்வை இழப்பு ஆகும்.
நிலை :
வலது புறமாக படுத்தால் இடது கண்ணால் தான் ஸ்மார்ட்போனை அதிகம் பார்க்க நேரிடும் அப்படியான ஒரு நிலையில் ஒரு கண்ணில் ஒளிமிகும் நிலையும் மறு கண் இருளான நிலையையும் சந்திக்கும் போது இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
விழித்திரைகள் :
நமது விழித்திரைகள் எந்தவொரு கேமிராவை விடவும் வெவ்வேறு ஒளி நிலைகளை அற்புதமாக கையாளக்கூடியதாக இருப்பினும் மிக அரிதாக நிலையற்ற ஸ்மார்ட்போன் "பார்வையிழப்பு" ஏற்படுகிறது.
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.