.

.
24/1/16

பெரம்பலூர் மாவட்டக்
கலெக்டர் அலுவலகத்தில்
நடந்த பிரிவு உபச் சார
நிகழ்ச்சியில், கனத்த இதயத்
துடன் கலெக்டர் தரேஷ்
அஹமது பேசிய பேச்சு

நான்கரை ஆண்டுக்கு மேலாக ஒரு
கலெக்டர் ஒரே மாவட்டத்தில் பணி
புரியும் வாய்ப்பு எனக்கு தான்
கிடைத்துள்ளது. இதற்குநான்
அனைவருக்கும் நன்றிகூறிக் கொள்
கிறேன். என்ன பேசுவதென்று
தெரியவில்லை. பேசவும் முடிய
வில்லை. இந்த நான்கரை ஆண்டுக
ளில் நடந்த பணிகளுக்கு நான் மட்
டுமே காரணமில்லை. அனைவரது
ஒத்துழைப்பும், கூட்டுமுயற்சியுமே காரணம்.

இதுபோன்ற அரசு அலுவ லர்களின்
ஒத்துழைப்பு வேறு எங் குமே
யாருக்குமே கிடைக்காது.

மிகச்சிறந்த அரசு அலுவர்களைக்
கொண்டது பெரம்பலூர் மாவட்டம்.
என்னால் பெரம்பலூர் மாவட்டத்தை
எப்படி மறக்க முடியும். மருத்துவ
ராகக் கூட ஓரே இடத்தில் இத் தனை
ஆண்டுகள் நான் வேலை
பார்க்கவில்லை. ஐஏஎஸ் தேர்வுக் குப் பிறகு ஏறக்குறைய 10ஆண்டுக ளில் 2ஆண்டுகள் பயிற்சி போக மீதமுள்ள ஆண்டுகளில் அதிகமாகப் பணி புரிந்தது பெரம்பலூர்
மாவட்டத்தில்தான்.

இங்கு தான் முதன் முதலாகக் கலெக்டராகப் பொறுப்பேற்றேன். இந்த மாவட் டத்தில்தான்
எனக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அவன் கேரளாவை வெளிநாடு என
நினைத்துக் கொண்டிருக்கிறான்.
அவனுக்கு சொந்த ஊர் பெரம்பலூர்
என்றுதான் எண்ணுகின் றான்.
இதனால் இந்த மாவட்டத்தை எப்படி
என்னால் மறக்கமுடியும்.

இங்கு பணிபுரியும் அலுவர்களுக்கு, பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு மனித நேயம் அதிகமுள்ளது. அதனால் சொன்னவுடன் கடமை யாக எண்ணாமல் மனித நேயத் துடன் பணி புரிந்தனர்.

மனவளர்ச்சி குன்றிய குழழந்தைகளுக்கு காப்ப கம்
அமைத்தோம். அங்கு பிள்ளை களை
கொண்டுவர தலைவர்கள், விஏஓக்கள், அங்கன்வாடிப் பணியா ளர்கள், மாற்றுத் திறனாளி அமைப் பினர் என பல்வேறு துறையினர்
அர்ப்பணிப்புடன் பணியாற்றினர்.
சாப்பிடக்கூடத் தெரியாமல் நினை
வற்று காணப்படும் குழந்தைக
ளுக்கு உணவூட்ட யாரால் முடியும்.
பகல் முழுக்க பராமரிக்க யாரால்
முடியும். அந்த மனிதநேயத்தை மறக்க முடியவில்லை.

குழந்தைத் திருமணங்களைத்
தடுத்தோம். காலையில் நடக்கும்
திருமணத்தில் மணப்பெண் மைனர்
என்பதை நிரூபிக்க, அதற்கான
ஆதாரத்தைச் சேகரிக்க அப்பகுதி
விஏஓ, சமூக நலத்துறை அலுவ
லர்கள் எத்தனை சிரமப்படுகிறார் கள் தெரியுமா. 95சதவீதம் உறுதி செய்தப் பிறகே எங்களுக்குத் தக வல் கொடுக்கிறார்கள். சான்றிதல்
சரிபார்ப்புக்கு குறுகிய நேரத்தில்
அவர் கள் எடுக்கும் முயற்சி அள விட முடியாதது.

சட்டத்தை நிறை வேற்ற அவர்களுக்கு மட்டும் ஏன் அக்கரை
வரவேண்டும். உத்தர வுகளை தட்டிக்
கழித்திருக்கலாம். சமூக அக்கரை
யுடன் பணிபுரிந் ததால் தான்
சாதிக்க முடிந்தது.

நான் உதயச்சந்திரன் என்ற
கலெக்டரின்கீழ் பணிபுரிந்துள்ளேன்..

நான் கலெக்டரான பிறகு அவர் TNPSC தலைவராக இருந்தார். அப்போது குரூப் தேர்வுகளில் பின்தங்கிய மாவட்டங்கள் உள்ள தென்றார். நான், ஆமாம் ஆமாம் தருமபுரியெல்லாம்
உள்ளது என்றேன். அவர்
பெரம்பலூருந்தான் உள்ளது, அதற்கு ஏதாவது செய் என்றார். அதற்குப் பிறகு தான் தேர்வுநடத்தி இலவசப் பயிற்சி தொடங்கப் பட்டது.
அதிலெல்லாம் பேராசிரியர், துணை
கலெக்டர், ஆசிரியர், விஏஓ எனப்
பலரும் தன்னார்வலராகப் பயிற்சி
அளிக் கின்றனர். யாருக்கு அந்த
மனசு வரும்.

வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை,
வேளாண்மைத்துறை, கல்வித்
துறை, பொதுப்பணித் துறையென
அனைத்துத் துறையினரும் முழு
ஒத்துழைப்பைக் கொடுத்தீர்கள். இந்தத் தொடர்பு எப்போதும் இருக் கட்டும். தொலைப்பேசியில், ஆன்லைனில், நேரில் எப்போது
வேண்டுமானாலும் தொடர்பு
கொள்ளுங்கள். மறக்காமல் பதில்
தருவேன். உங்களுக்காக என் கதவு
எப்போதும் திறந்திருக்கும்.
புத்தகத் திருவிழா சிறப்பாக
நடத்தவும் அனைவரது கூட்டு
முயற்சியே காரண மாகும். தற்போது வந்திருக்கும் கலெக்டர் என்னை விட சுறுசுறுப்பாக செயல்படக் கூடியவர்.
அவரால் மேலும்மேலும்
பெரம்பலூர் வளர்ச்சி காணும்.

அதற்கு நீங்கள் முழு ஒத்துழைப்பைத்
தாருங்கள் என்றார்.
மனநிறைவுடன், மட்டற்ற மகிழ்ச்சி
யுடன் வழியனுப்புகிறோம். மாநில
அளவில் பதவி உயர்ந்தாலும் எங்களை மறந்துவிட மாட்டீர்க ளென நம்புகிறோம்..

நன்றி :ஜே.வில்சன்,பெரம்பலூர்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.





'; if(isPage || isFirstPage || isLablePage){ var pageArea = document.getElementsByName("pageArea"); var blogPager = document.getElementById("blog-pager"); if(postNum 0){ html =''; } if(blogPager){ blogPager.innerHTML = html; } } }

வி.களத்தூர் செய்தி

.

.