.

.
25/1/16

ஐரோப்பாவில் இஸ்லாமிய குடியேற்றம் நடைபெறுவதாகக் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிப்ரவரி 6-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த "பெகிடா' அமைப்பு திட்டமிட்டுள்ளது.

 14 நாடுகளில் ஒரே சமயத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.

 மேற்கத்திய நாடுகளை இஸ்லாமிய மயமாக்குதலுக்கு எதிரான ஐரோப்பிய பற்றுள்ளவர்கள் அமைப்பான "பெகிடா' ஜெர்மனியில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பு வெளிநாட்டவருக்கு எதிரான எதிர்ப்பு இயக்கம் ஆகும். 

 தற்போது, ஐரோப்பாவில் இஸ்லாமிய குடியேற்றத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, வரும் பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது. 

 செக் குடியரசு, எஸ்டோனியா, பின்லாந்து, ஜெர்மனி, போலந்து, ஸ்லோவேக்கியா, ஸ்விட்ஸர்லாந்து உள்ளிட்ட 14 ஐரோப்பிய நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

 அகதிகளுக்கு இடமளிக்கும் ஐரோப்பாவின் கொள்கை முட்டாள்தனமானது மட்டுமின்றி தற்கொலைக்கு சமமானது என அந்த அமைப்பின் செக் குடியரசுப் பிரிவுத் தலைவர் மார்ட்டின் கோன்விச்கா தெரிவித்துள்ளார்.

 ஜெர்மனியில் அண்மையில் நடைபெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது பெண்களிடம் பாலியல் அத்துமீறல் மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. இதற்கு, அரபு நாடுகளிலிருந்து அகதிகளாக வந்த இளைஞர்கள்தான் காரணம் என "பெகிடா' அமைப்பு குற்றம் சாட்டியது.

 இதையடுத்து அவர்களுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களை அந்த அமைப்பு தொடர்ந்து முன்னின்று நடத்தி வருகிறது. 

 கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபரில் "பெகிடா' அமைப்பு முதன்முதலாக ஃபேஸ்புக்கில் தொடங்கப்பட்டது.

தொடக்கத்தில், சில நூறு பேர் மட்டுமே அதில் உறுப்பினராக இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

'; if(isPage || isFirstPage || isLablePage){ var pageArea = document.getElementsByName("pageArea"); var blogPager = document.getElementById("blog-pager"); if(postNum 0){ html =''; } if(blogPager){ blogPager.innerHTML = html; } } }

வி.களத்தூர் செய்தி

.

.