
வாழ்த்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
67-வது குடியரசு தினத்தை முன்னிட்டு திரிபுரா மாநிலத்தில நேற்று தர்மாநகரில் பல்லாயிரக்கணக்கானவர்கள்
கூடியிருந்த விழாவில் கலந்து
கொண்டு சமூக நலத்துறை அமைச்சர் பிஜிதாநாத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் "உங்கள் அனைவருக்கும் 67-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இந்த மாநிலத்தில் மாணிக் அரசுத் தலைமையில் மார்க்சிஸ்டு ஆட்சி நடைபெற்று
வருகிறது. சமூக நலத்துறை அமைச்சராக பிஜிதாநாத் என்ற பெண் உள்ளார். குடியரசு தின வாழ்த்துக்கு பதில் அவர் சுதந்திர தின வாழ்த்து கூறியதால் விழா அரங்கில் கூடியிருந்த அனைவரும்
அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து மாணவர்கள் இருந்த
பகுதியில் சிரிப்பு சத்தம் எழுந்தது. இதை பொருட்படுத்தாமல் அவர்
உரையாற்றினார். மீண்டும் 3 தடவையும் அவர் சுதந்திர தின விழா என்றே குறிப்பிட்டார்.
அமைச்சரின் இந்த பேச்சு
திரிபுராவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ், பா.ஜ.க. தலைவர்கள் அமைச்சர்
பிஜிதாநாத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கல்வியறிவு இல்லாத ஒருவரை அமைச்சராக்கியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அரசமைப்பு பற்றி அடிப்படை தெரியாதவர் எப்படி அமைச்சராக இருக்க முடியும் என்று திரிபுரா மாநில காங்கிரஸ் தலைவர்
பிரஜித்சின்கா கேள்வி எழுப்பியுள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.