.

.
5-11-15

குவைத் நாட்டுக்கு வேலை தேடி செல்வோர்
மேற்கொள்ளும் மருத்துவப் பரிசோதனைக்கான
கட்டணம் சுமார் 30 சதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு ஜூலை மாதம் முதல் அமலுக்கு
வந்துள்ளது.
இந்தியாவிலிருந்து குவைத் நாட்டுக்கு வேலை தேடி
செல்வோர், விசா பெறுவதற்காக
மருத்துவப் பரிசோதனை கட்டணம் ரூ. 3500 உள்பட ரூ.
8550 வரை செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் மும்பை மற்றும் புதுதில்லியில் உள்ள குவைத்
தூதரகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், குவைத்
நாட்டுக்கு வேலை தேடி செல்வோர் ரூ. 12,000
மருத்துவப் பரிசோதனைக்கான கட்டணமாக
செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளன.
மேலும், மருத்துவப் பரிசோதனையின் போது உரிய உடல் தகுதி
பெறாதவர்களுக்கு, கட்டணத் தொகை
திருப்பி அளிக்கப்படமாட்டாது என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மருத்துவப் பரிசோதனையை ‘கடமண்ட்
இன்டகிரேடட் சொலுசன் பிரைவேட்
லிமிடெட்’ என்ற நிறுவனத்தில் மட்டுமே
மேற்கொள்ள வேண்டும் என்றும்
உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் வேதனை என்னவென்றால், அந்த
நிறுவனம் தில்லி, மும்பை மற்றும் கொச்சி
ஆகிய நகரங்களில் மட்டுமே உள்ளது.
இது தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற
மாநிலங்களிலிருந்து குவைத் நாட்டுக்கு வேலைத் தேடிச்
செல்வோருக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் சுமார் 2,000 தமிழர்கள் முதல் 50,000
பேர் இந்தியாவிலிருந்து குவைத் நாட்டுக்கு வேலை தேடி
செல்வதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.





'; if(isPage || isFirstPage || isLablePage){ var pageArea = document.getElementsByName("pageArea"); var blogPager = document.getElementById("blog-pager"); if(postNum 0){ html =''; } if(blogPager){ blogPager.innerHTML = html; } } }

வி.களத்தூர் செய்தி

.

.