.

.
5-11-15

நாட்டில் கருத்துச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்
அதிகரித்துள்ளதாகவும், சகிப்புத்தன்மை குறைந்து
வருவதாகவும் கூறி எழுத்தாளர்கள்,
விஞ்ஞானிகள், திரைப்பட இயக்குநர்கள் தங்களுடைய
விருதுகளை திருப்பி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று தனது 50வது பிறந்தநாளை
முன்னிட்டு இணையதளத்தில் ரசிகர்களிடையே
உரையாடிய போது ஷாருக்கான்
கூறியதாவதாவது:-
”இந்தியாவில் சகிப்புதன்மையின்மை தீவிரமடைந்து
வருகிறது. மதம், படைப்பாற்றல்
தொடர்பான சகிப்புத்தன்மை குறைந்து
வருவதால், நாட்டுக்குதான் பாதிப்பு ஏற்படும்.
நம்முடைய நாடு வளர விரும்பினால், இந்தியாவில்
நிலவும் பல்வகையான கலாச்சரங்களுக்கு
மதிப்பளிக்க வேண்டும். அனைத்து மதங்களும்
சமமானது என்று நாம் நம்பவில்லை என்றால்
நாடு சக்தி வாய்ந்ததாக இருக்க முடியாது.
மதம், படைப்பாற்றல் தொடர்பான
சகிப்பின்மையைக் களைந்து, நாட்டை வளர்ச்சி அடைய
செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டும். நாட்டில் மதச்சார்பின்மையை வளர்க்க
வேண்டும். இல்லை என்றால் தேசப்பற்றின்
பெயரால் மோசமான செயல்கள்
நடக்கும்” என்று தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே பா.ஜ.க. தலைவர்கள் பல சர்சைகுரிய
கருத்துகளை தெரிவித்துவரும் நிலையில், அதன்
தொடர்ச்சியாக ஷாருக்கான்
இந்தியாவில் வசித்தாலும் அவருடைய இதயம்
பாகிஸ்தானில் உள்ளது என்று பா.ஜ.க.,
தலைவர் கைலாஷ் விஜய் வர்கியா கூறியுள்ளார்.
மேலும் ஷாருக்கான் படங்கள் இந்தியாவில்
கோடிக்கணக்கில் வசூல் செய்கிறது, ஆனால்
இது சகிப்புதன்மையின்மை நாடாக அவருக்கு
தெரிகிறது.
இதேபோல், பல்வேறு சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து
வரும் பா.ஜ.க., பெண் எம்.பி சத்வி பிரச்சி,
ஷாருக்கான் ஒரு பாகிஸ்தான் ஏஜெண்ட்
என்றும் அவர் பாகிஸ்தானுக்கே செல்லட்டும்
என்று விமர்சித்துள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

'; if(isPage || isFirstPage || isLablePage){ var pageArea = document.getElementsByName("pageArea"); var blogPager = document.getElementById("blog-pager"); if(postNum 0){ html =''; } if(blogPager){ blogPager.innerHTML = html; } } }

வி.களத்தூர் செய்தி

.

.