
அத்துடன் தனது செலவில் ஹஜ் கடமையை நிறைவேற்றும்படி சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஸிஸ் காட்டார் யாத்திரிகர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும் அந்த அறிவிப்பு கூறியுள்ளது. கட்டார் யாத்திரிகர்கள் அனைவரையும் அழைத்து வர தனது தனிப்பட்ட செலவில் சவூதி ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஒன்றை டோஹா விமான நிலையத்திற்கு அனுப்பும்படியும் சவூதி மன்னர் உத்தரவிட்டுள்ளார்.
கத்தார் தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டி அந்த நாட்டுடனான இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை சவூதி எகிப்து பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் துண்டித்தது தொடக்கம் சல்வா எல்லைக் கடவை மூடப்பட்ட நிலையில் உள்ளது. மக்கா மற்றும் மதீனாவுக்கு வரும் யாத்திரிகர்களின் மையமாக ஜித்தாஹ் விமான நிலையம் இருந்து வருகிறது.
அதேபோன்று மன்னர் பஹத் விமான நிலையம் மற்றும் நாட்டின் கிழக்கில் உள்ள இஹ்சா விமான நிலையத்தில் இருந்து கத்தார் பிரஜைகளுக்கு போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்கவும் மன்னரின் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சவூதியின் இந்த அறிவிப்பு குறித்து கட்டார் அரசு நேற்று வரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
இம்முறை ஹஜ் கடமையில் பங்கேற்கும் கத்தார் யாத்திரிகர்களுக்கு சவூதி அரசு கடந்த மாதம் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. குறிப்பாக சவூதி அங்கீகரிக்கு விமான சேவை ஒன்றின் உடாகவே நாட்டுக்கு வர வேண்டும் என்று சவூதி கூறியது. இதனைத் தொடர்ந்து சவூதி ஹஜ்ஜை அரசியலாக்குவதாக கட்டார் குற்றம்சாட்டி இருந்தது.
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.