"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
11/8/17

பெரம்பலூர் அருகே சாலையோர மரத்தில் பள்ளி வேன் மோதி ஏற்பட்ட விபத்து பள்ளி மாணவ,மாணவியர்கள் உட்பட 23 பேர் படுகாயமடைந்து பெரம்பலூர் அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருவாளந்துறை கிராமத்தில் இங்கி வரும் ஆன்ட்ரூஸ் மெட்ரிக்குலேசன் பள்ளிக்கு சொந்தமான
மகேந்திரா ஷீட்டடு வேன் இன்று காலை வழக்கம் போல் வி.களத்தூர் அருகே உள்ள என்.புதூர் மற்றும் மரவநத்தம் கிராமங்களிலிருந்து 25-க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவியர்களை ஏற்றி கொண்டு பள்ளியை நோக்கி மரவநத்தத்திற்கும் – மேட்டுசேரிக்கும் இடையே வந்துகொண்டிருந்த போது எதிரே வந்த மற்றொரு வாகனத்திற்கு வேன் டிரைவர் சின்னராசு வழி விட முயன்றார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் இறங்கி அங்கிருந்த பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்
அஸ்வின்குமார், தனுஷ், நிஷாந்த், சந்துரு உட்பட 14 மாணவர்களும், 8 மாணவிகளும் உட்பட 23 பேர் படுகாயமடைந்து இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்டு சத்தம் எழுப்பினர். இதனையறிந்த அப்பகுதி பொது மக்கள் சம்பவ இடத்திற்கு ஓடி சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அவ்வழியே வந்த மற்றொரு பள்ளி பேருந்தில்
சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள வி.களத்தூர் போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேன் டிரைவர் சின்ராசுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.