"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
22/7/17

பெட்ரோல் விலையே பொதுவாக பல நாடுகளின் பிற பொருட்களின் விலையை நேரடியாகவும் மறைமுகமாகவும் நிர்ணயம் செய்யக்கூடியவையாக உள்ளது. நமது நாட்டு அரசு வாங்கி விற்கும் பெட்ரோல் விலையும் மிகுந்த சர்ச்சைகுரிய ஒன்றாகவே உள்ளது.

இங்கே உலகிலேயே மிக மிக குறைந்த விலைக்கும், உலகிலேயே மிக அதிக விலைக்கும் தலா 10 நாடுகளின் பட்டியல் தரப்பட்டுள்ளது. குறைந்த விலைக்கு பெட்ரோல் விற்கும் பல நாடுகள் சுய எண்ணெய் உற்பத்தியை கொண்டவை. அதிக விலைக்கு விற்பவை பெட்ரோல் இறக்குமதியை அடிப்படையாக கொண்டவை.

1 கேலன் என்பது சுமார் 3.78 லிட்டருக்கு நிகரானது. 1 யூரோ என்பது 74.19 இந்திய ரூபாய்க்கு நிகரானது. இந்த விலைப்பட்டியல் கேலான் மற்றும் யூரோ அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

மிக மிக குறைந்த சில்லரை விலைக்கு பெட்ரோல் விற்கும் முதல் 9 நாடுகள்:
1. வெனிசுலா : 0.36 யூரோ
2. சவுதி அரேபியா: 10.16 யூரோ
3. துருக்மெனிஸ்தான்: 12.00 யூரோ
4. அல்ஜீரியா : 13.79 யூரோ
5. எகிப்து : 14.64 யூரோ
6. குவைத் : 14.64 யூரோ
7. ஈரான் : 15.73 யூரோ
8. ஈக்வேடார் : 16.68 யூரோ
9. பஹ்ரைன் : 17.91 யூரோ

10 வது இடத்தில் கத்தார் உள்ளது.

மிக மிக அதிக சில்லரை விலைக்கு பெட்ரோல் விற்கும் முதல் 10 நாடுகள்
1. ஹாங்காங் : 80.83 யூரோ
2. ஐஸ்லாந்து : 79.13 யூரோ
3. நார்வே : 78.29 யூரோ
4. மொனாக்கோ : 73.45 யூரோ
5. இஸ்ரேல் : 72.84 யூரோ
6. நெதர்லாந்து : 72.36 யூரோ
7. இத்தாலி : 72.12 யூரோ
8. கிரீஸ் : 71.15 யூரோ
9. மயோட்டி : 68.97 யூரோ
10. டென்மார்க் : 68.49 யூரோ

சீனாவில் 1 கேலன் பெட்ரோல் 42.23 யூரோவிற்கு விற்கப்படும் நிலையில் அதன் ஆதிக்கத்தின் கீழுள்ள ஹாங்காங்கில் 1 கேலன் பெட்ரோல் உலகிலேயே அதிகமாக 80.83 யூரோவிற்கு விற்கப்படுவது என்ன வகை முரண்?

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.