"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
12/6/17

துபைக்கு முதலில் நல்ல தோணியிலும் (பண்டைய வர்த்தக கலங்கள்) பின்பு கள்ளத்தோணியிலும் பயணங்கள் செய்தோம் பின்பு அதுவே பாஸ்போர்டிற்கு மாறியது.

பாஸ்போர்ட் ஒருபுறம் செல்லுபடியாகி கொண்டுள்ள நிலையில் ஸ்மார்ட் கேட் கார்டுகள் (Smart gate card) எனும் அட்டை வடிவ பாஸ்போர்ட்கள் அறிமுகமாயின பின்பு எமிரேட்ஸ் ஐடியே பாஸ்போர்ட்டாகவும், ஸ்மார்ட் கேட் கார்டாகவும் அங்கீகரிக்கப்பட்டன.

தற்போது நமது கையில் உள்ள ஸ்மார்ட் போன்களையே (Smart Phone) நமது பாஸ்போர்ட், எமிரேட்ஸ் ஐடி, ஸ்மார்ட் கேட் கார்டு போன்றவற்றிற்கு பதிலாக பயன்படுத்தி துபை டெர்மினல் 3 விமான நிலையம் வழியாக பயணம் செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். விரைவில் இந்த வசதி அனைத்து துபை விமான நிலைய டெர்மினல்களுக்கும் அனைத்து விமான சேவைகளுக்கும் (Dubai's all airport terminals & all airlines) விரிவுபடுத்தப்படவுள்ளது.

யுஏஈ வாலெட் (UAE Wallet App) எனப்படும் அப்ளிகேஷனை உங்களுடைய ஸ்மார்ட் போனில் டவுன்லோடு செய்து அதிலுள்ள பார்கோடை ஸ்மார்ட்கேட்களில் காண்பித்து அத்துடன் உங்கள் கைவிரல் ரேகை பதிவையும் பதிந்து விட்டால் உங்களுடைய இமிக்கிரேஷன் சோதனை முடிந்துவிடும், எமிரேட்ஸ் ஐடியை பயன்படுத்தி இமிக்கிரேஷன் பணிகளை முடிப்பதைவிட இதன் மூலம் பயணி ஒருவர் 9 முதல் 12 நொடிகள் வரை இதில் மிச்சப்படுத்தலாம். இந்தத் திட்டத்தின் மூலம் வரிசையில் பயணிகள் நிற்பது மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்ப கட்டமாக, பயணிகளின் ஸ்மார்ட் போன் யுஏஈ வாலெட் ஆப்பில் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஸ்மார்ட் கேட் கார்டு ஆகியவற்றின் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.

இரண்டாம் கட்டமாக, அமீரகத்தினர் மற்றும் அமீரகவாசிகளின் முழுவிபரங்களும் இந்த ஆப்பில் பதிவேற்றப்படுவதன் மூலம் எந்த அமீரக அரசின் துறைகளிலும் வேறு ஆவணங்களுக்கு பதிலாக இவற்றை பயன்படுத்தி வேலைகளை எளிதாக முடிக்கலாம்.

எமிரேட்ஸ் விமான நிறுவன அதிகாரி சாமி அகிலன் கூறியதாவது, பயணிகள் இனி தங்களுடைய பாஸ்போர்ட்டையோ, போர்டிங் கார்டுகளையோ இனி தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை, உங்களுடைய பெயர், இருக்கை எண், விமான எண் என அனைத்தும் இந்த யுஏஈ வாலெட்டின் பார்கோடில் இணைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவித்தார்.

யுஏஈ வாலேட்டை பெறுவது எப்படி?
முதலில் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து யுஏஈ வாலேட் ஆப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் பயணத்தேதிக்கு முன்பாக தேவையான விபரங்களை அதில் பதிவு செய்து கொள்ளுங்கள்.

பின்பு ஸ்மார்ட் கேட் வழியாக செல்லும் போது உங்களுடைய ஸ்மார்ட் போனில் காணப்படும் யுஏஈ வாலெட்டில் காணப்படும் பார்கோடை ஸ்கேன் மெஷினில் காண்பித்து பின் உங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்துவிட்டு ஹாயாக செல்லலாம். இவை அனைத்தும் சில நொடிகளில் முடிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.