"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
10/6/17

கத்தார் விவகாரத்தில் வளைகுடா நாடுகள் மத்தியில் பதற்றம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கத்தார் நாட்டை தனிமைப்படுத்துவதாக அறிவித்த சவுதி அரேபியாவுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் வெளிப்படையான மிரட்டல் விடுத்துள்ளனர்.

கத்தார் உடனான அத்தனை உறவுகளையும் முறிப்பதாக வளைகுடா நாடுகள் அறிவித்திருந்தன. தீவிரவாதத்துக்கு கத்தார் துணைபுரிவதாகக் குற்றம்சுமத்தப்பட்டது.

இந்தக் குற்றத்தை கத்தார் முற்றிலுமாக மறுத்து வருகிறது. இந்நிலையில், கத்தாரிடமிருந்து நிதியுதவி பெறுவதாகக் கூறப்படும் தீவிரவாத அமைப்புகளுள் ஒன்றான ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் நேற்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளனர். அதில், கத்தாருக்கு எதிரான நடவடிக்கையை தொடங்கி வைத்த சவுதி அரேபியாவுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் வெளிப்படையாக தாக்குதல் மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ பதிவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஐந்து பேர் முகமூடி அணிந்து பேசுகின்றனர். அதில், ‘தற்போது ஈரானுக்கு பிறகு, உங்களுக்கான முறைதான் சவுதி அரேபியா. உங்கள் சொந்த இடத்திலேயே தாக்குகிறோம்’ என மிரட்டல் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.