பிரித்தானியாவில் புற்றுநோயினால் கடுமையாக பாதிப்புக்குள்ளான தனது மகளின் நெஞ்சை உலுக்கும் புகைப்படத்தை அவரின் தந்தை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் லங்காஷயர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் Andy Whelan. இவரது மகளான சிறுமி ஜெசிகா அதி தீவிரமான ஒரு வகை புற்றுநோயால் கடந்த 13 மாதங்களாக போராடி வருகிறார்.
இந்த நிலையில் புற்றுநோயின் தீவிர கட்டத்தில் இருக்கும் சிறுமி ஜெசிகா அடுத்த ஒரு வாரம் மட்டுமே உயிரோடு இருப்பார் என்ற கொடூரமான செய்தியை மருத்துவர்கள் சிறுமியின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தமது மகளுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருந்துவரும் ஆண்டி வீலன், சிறுமி ஜெசிகாவின் புகைப்படம் ஒன்றை தமது சமூகவலைதள பக்கத்தில் பதிவேற்றி, சிறுமியின் நோய் குறித்த தீவிரத்தையும் விளக்கமாக பதிவிட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் கறுப்பு வெள்ளை புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதுவரையான வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு கொடிய தருணத்தை தாம் புகைப்படமாக பதிவு செய்ததில்லை என்ற வார்த்தைகளுடன் ஆண்டி வீலன் அந்த புகைப்படத்தையும் தமது மகளின் நிலையையும் விளக்கியுள்ளார்.
கடுமையான வலியால் துடிதுடிக்கும் ஜெசிகா தங்களை அவரது அருகே இருந்து ஆறுதல் படுத்த அனுமதிப்பதில்லை எனவும். மொத்த துயரத்தையும் அவரே தாங்கிக்கொண்டு எங்களை வெறும் பார்வையாளர் ஆக்குகின்றார் என ஆண்டி தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜெசிகா இனி உயிருடன் இருப்பது கொஞ்ச நாளே என்பதால் தற்போது அவர் விரும்பியபடி நடந்துகொள்ள அனுமதித்திருப்பதாக ஆண்டி தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக ஜெசிக்காவுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் எவ்வித மாற்றமும் காணாததை அடுத்தே மருத்துவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
இதனிடையே ஆண்டியின் சமூகவலைதள பதிவினை பார்த்து கலக்கமுற்ற One Direction குழுவின் பாடகர் Harry Styles சிறுமி ஜெசிகாவுடன் பேச வேண்டும் என்ற ஆவலை தெரிவித்துள்ளாராம்.
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.