பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் மில்லத்நகரில் உள்ள அல் கவ்ஸர் தெருவில் உள்ள சாக்கடைகள் தூர்வாரப்படாமல் பல மாதங்களாக, கழிவு நீர் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் சேர்ந்து கடந்து செல்ல முடியாதபடி துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல் மக்களுக்கு பலவிதமான சுகாதார சீர்கேடுகளை உண்டாக்குகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் பல முறை வி.களத்தூர் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எடுக்கும் என்ற எந்த அறிகுறியும் இல்லை. மேலும் மழை நாள் நெருங்கிவிட்டதால், தேங்கிக்கிடக்கும் சாக்கடை கழிவுகளிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்கள் பலவிதமான நோய்களை உண்டாக்கும் என்கிற அச்சத்தில், செயல்படாத ஊராட்சி நிர்வாகத்தினரின் அலட்சியப் போக்கை கண்டித்தும், தங்களை சுகாதார சீர்கேடுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டி அவர்களே சாக்கடை கழிவுகளை சுத்தம் செய்தனர்.
இதில் அல்கவ்ஸர் தெருவைச் சேர்ந்த அனைவரும் முழு ஒத்துழைப்போடு சாக்கடை சுத்தம் செய்யும் வேளையில் ஈடுபட்டு கழிவுகளை அகற்றினார்கள். ஊரின் நன்மைக்காக வேண்டி பொதுமக்களே சாக்கடை சுத்தம் செய்த இந்நிகழ்வு, வி.களத்தூர் பகுதியில் உள்ள மக்களை வியப்படைய வைத்தது.
கடந்த ஊராட்சி மன்ற தேர்தலில் ஒரு ஓட்டும் சிதறாமல் இந்த சிறந்த ஊராட்சி மன்ற தலைவிக்கு ஒட்டுமொத்தமாக போட்ட பெருமை மில்லத்நகர் மக்களையே சாரும் அவர்களுக்கான நன்றிக்கடனை(?) சிறப்பாக செய்துவிட்டது ஊராட்சி மன்ற நிர்வாகமும் அதன் தலைவியும் என்று ஆதங்கப்பட்டதையும் அங்கே காணமுடிந்தது.
செய்தி சேகரிப்பு - வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் டீம், கல்லாறு டீம்
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.