15/9/16

சட்டத்திற்கு எதிராக ஒட்டகம் அறுக்க தடை விதித்த நீதிபதியின் பதவி உயர்வை தடுத்து நிறுத்துவோம் : பி.ஜைனுல் ஆபிதீன் சூளுரை....!!

தொழுகை முடிந்த பின் குழுமியிருந்த மக்கள் மத்தியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிறுவனர் பி.ஜைனுல் ஆபிதீன் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்.... ஒட்டகம் அறுக்கக்கூடாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பு இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான தீர்ப்பாகும்.

சட்டத்திற்கு புறம்பான தீர்ப்பை வெளியிட்ட இந்த நீதிபதி அறிவுகெட்ட முட்டாள் நீதிபதி பதவிக்கு சட்டம் படித்து வந்தாரா லஞ்சம் கொடுத்து வந்தாரா என்று கேள்வி எழுப்பினார்.

முஸ்லிம்களுக்கு எதிராக தீர்ப்பு சொன்னால் உச்சநீதிமன்ற நீதிபதியாகலாம் என்று பதவி ஆசையில் சொன்னாரா என்றும் கேள்வி எழுப்பினார். தமிழக அரசின் அரசு தரப்பு வழக்கறிஞர் ஒட்டகம் அறுப்பதை தடுக்கக்கூடாது என்று பல்வேறு வாதங்களை ஆதாரத்துடன் வைத்தார்.

அதே வழக்கில் பிரதியாக உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் தனது மனுவில் அனைத்து ஆதாரங்களையும் வைத்தது. எதையும் கண்டுக்கொள்ளாமல் மனம் போனபோக்கில் சட்டத்திற்கு எதிரான தீர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இனிமேல் இதனை நாங்கள் சும்மா விடமாட்டோம். சட்டத்திற்கு புறம்பாக அவர் வெளியிட்ட அனைத்து தீர்ப்புகளையும் திரட்டி அதனை உலகளவில் பேச செய்வோம். அவருக்கு எதிரான மக்கள் கருத்தை உருவாக்குவோம்.

அவரது பதவி உயர்வை தடுத்து நிறுத்தி அவர் நீதிபதி பதவிக்கே தகுதி அற்றவர் என்ற நிலையை உருவாக்குவோம். மேற்கண்டவாறு பி.ஜைனுல் ஆபிதீன் பேசினார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.