15/9/16

நாட்டின் முக்கிய துறைகளான இராணுவம் காவல்துறை நீதித்துறை உளவுத்துறை என அனைத்து துறைகளிலும் முஸ்லிம்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார்கள். இன்று இஸ்லாமிய மதத்தை பற்றி தவறாக பரப்புரை செய்வதில் முதலிடத்தில் இருப்பது ஊடகத்துறை.

மக்களை எளிதில் சென்றடையும் இந்த துறையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சொற்பமே.நடுநிலை தன்மையோடு செயல்படவேண்டிய ஊடகத்துறை இன்று சில கயவர்களின் பிடியில் சிக்கிக்கொண்டு ஒரு சாராருக்கு ஆதரவாகவும் முஸ்லிம்களை திட்டமிட்டு புறக்கணித்தும் வருகிறது.

இந்த நிலை உருவாவதற்கு முஸ்லிம்களும் ஒரு காரணம்.நாம் என்ன செய்கிறோம்? முஸ்லிம்களை பற்றி யாரவது தவறாக எழுதிய கட்டுரையை படித்து விட்டு அல்லது டி.வி சேனல்களில் யாராவது தவறாக பேசிய பேச்சை facebook போன்ற சமூக வலைதளங்களில் விமர்சிப்போம். சிந்தியுங்கள் சகோதரர்களே. எத்தனை பேர் முஸ்லிம்களை பற்றி தவறாக எழுதப்படும் கட்டுரைகளுக்கு பதில் எழுதி உள்ளீர்கள்.

காலம் முழுக்க பார்வையாளராகவே இருக்க போகிறோமா?.ஊடகங்கள் முஸ்லிம்களை புறக்கணிக்கின்றன என்று facebook -க்கில்   எழுதி தள்ளும் நாம் என்றாவது ஒரு கட்டுரை எழுதி செய்திதாள்களுக்கு அனுப்பியதுண்டா?facebook -க்கில் கிறுக்குவதை விட்டுவிட்டு நமது சகோதரர்கள் ஆக்கப்பூர்வமான அறிவுப்பூர்வமான கட்டுரைகள் எழுதவேண்டும்.

அதை பல்வேறு செய்திதாள்களுக்கு அனுப்பவேண்டும். ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் மக்களை எளிதில் சென்றடையும் ஒரே துறை ஊடகத்துறை தான். எனவே நாம் அதை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

மதுவிற்கு எதிராக இஸ்லாம் என்ன கூறுகிறது தீவிரவாதத்திற்கு எதிராக இஸ்லாம் என்ன கூறுகிறது இந்தியாவை முஸ்லிம்கள் ஆண்ட விதம் சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு சங்பரிவார்களின் பிரிவினைவாத கொள்கை என்று எண்ணற்ற கட்டுரைகள் எழுதுங்கள். இளைஞர்கள் தங்களின் திறமையை வெளிக்கொணர வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் உள்ளே ஒரு எழுத்தாளன் உள்ளான். துடிப்புள்ள இளைஞர்கள் ஊடகத்துறையை அதிகம் பயன்படுத்தவேண்டும்.சமுதாய தலைவர்கள் டி.வி களில் பேசிவிட்டால் கைதட்டி அதை மற்றவர்களுக்கு பரப்புகிறோம். என்று நாம் ஊடகத்துறையில் பங்குகொள்ளபோகிறோம்?

இன்று சங்கபரிவார கும்பல் ஊடகத்துறையை நன்கு பயன்படுத்தி வருகிறது. தாங்கள் கூறவரும் கருத்துக்களை எழுத்துக்களாக மாற்றி மக்களுக்கு சென்றைய செய்கின்றனர். காலம்காலமாக அதை நாம் “படித்துக்கொண்டே” தான் இருக்கிறோம்.நாம் இதுவரை எத்தனை கட்டுரை எழுதி இருக்கிறோம் என்று உங்களை நீங்களே கேட்டுகொள்ளுங்கள்.

ஊடகங்கங்கள் நம்மை புறகணிக்கவில்லை. நாம் தான் ஊடகத்தை புறக்கணித்து வருகிறோம். பேனாவின் வலிமை இன்னும் நமக்கு தெரியவில்லை. இது தான் உண்மை.ஊடகத்துறையில் கயவர்களின் சூழ்ச்சிகளை முறியடிக்க ஒரே வழி எழுத்து தான். இளைஞர்களே இப்பொழுதே எழுந்த ஆரம்பியுங்கள்.

எழுதுவதை நாகரிகமாகவும் புள்ளிவிவரத்தோடும் எழுதுங்கள். நிறைய கட்டுரைகள் எழுதி செய்தித்தாள்களுக்கு அனுப்புங்கள். நம்மால் முடியாதது எதுவும் இல்லை. சமுதாயத்திற்கு எழுத்தாளர்கள் தான் தேவை. பார்வையாளர்கள் வேண்டாம்.

- எம்.யாசிர் B.E
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.